October 19, 2025
  • October 19, 2025
Breaking News

Currently browsing விமர்சனம்

ஜென்ம நட்சத்திரம் திரைப்பட விமர்சனம்

by by Jul 17, 2025 0

வழக்கமான பேய்ப் பட டெம்ப்ளேட்டில் எடுக்கப்பட்டிருக்கும் படம். ஆனால் இதில் ஆவி எடுக்கும் உயிர்களை விட வில்லன் எடுக்கும் உயிர்கள் அதிகம். 

எல்லாவற்றுக்கும் பணம்தான் காரணம் என்று கடைசியில் அதற்கு மொக்கையான ஒரு காரணமும் சொல்கிறார் இயக்குனர் பி.மணிவர்மன் .

நாயகனாக தமன் ஆக்ஷன், அவருக்கு இயக்குனராகும் கனவு இருக்கிறது, அதே அளவுக்கு அவர் கண்டிஷனும் போடுவதால் இன்னும் வாய்ப்பு கிடைக்காமல் சுற்றித் திரிகிறார்.

கூடவே மால்வி மல்கோத்ராவுடனான நட்பும், காதலும் கூட இருக்கிறது. 

இவர்களின் நண்பர்கள் டீமில் மைத்ரேயா, ரக்ஷா…

Read More

கெவி திரைப்பட விமர்சனம்

by by Jul 16, 2025 0

கொடைக்கானலுக்கு கீழ் சில கிலோமீட்டர் தள்ளி இருக்கும் பகுதிதான் ‘ வெள்ள கெவி’. இங்கு வாழும் பழங்குடியின மக்களை டோலி தூக்க வைத்துதான் வெள்ளைக்காரர்கள் கொடைக்கானலையே கண்டுபிடித்தார்கள் என்ற முத்தாய்ப்புடன் ஆரம்பிக்கிறது படம். 

சரி… அதற்கு என்ன என்கிறீர்களா?

ஆனால், அப்போதிருந்து அந்த கெவி பகுதி மக்களின் வாழ்வாதாரமும், வாழ்வதற்கான வசதிகளும் கற்காலத்திலேயேதான் இருக்கின்றன. 5 வருடங்களுக்கு ஒரு முறை ஓட்டு போட்டு ஒரு எம்எல்ஏ வை தேர்ந்தெடுத்தாலும் இவர்கள் பகுதிக்கு சாலை மற்றும் மருத்துவம் உள்ளிட்ட எந்த…

Read More

ஓஹோ எந்தன் பேபி திரைப்பட விமர்சனம்

by by Jul 11, 2025 0

‘காதலர்களுக்குள் பிரிவு வருவது பெரும்பாலும் அவர்களது ஈகோவால்தான் இருக்கும். அந்தக் காதல் ஜெயிக்க வேண்டும் என்றால் விட்டுக் கொடுத்தல் முக்கியம்… ‘ என்கிற லைனை இன்றைய இளைஞர்களின் மனநிலைக்கேற்ப இளமை ததும்பத் தந்து இருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார். 

வாரிசுகள் ஹீரோவாக அறிமுகம் ஆகும் இன்றைய சினிமாவில் நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா இதில் நாயகனாகி  இருக்கிறார். 

இளமை, அழகு, துள்ளல் எல்லாம் ஒன்று சேர, நடிப்பும் அவருக்கு எளிதாகக் கை வந்திருக்கிறது. முதல் படம் என்று…

Read More

ப்ரீடம் திரைப்பட விமர்சனம்

by by Jul 9, 2025 0

படத்துக்குப் படம் வித்தியாசமான கதைகளை தேடிப்பிடித்து நடித்துக் கொண்டிருக்கும் சசிகுமார், இந்தப் படத்தில் தொப்புள்கொடி உறவுடன் ரத்தமும் சதையுமான ஒரு உண்மைக் கதையைத் தாங்கி நடத்திருக்கிறார்.

இதிலும் அவர் இலங்கைத் தமிழராகவே வருகிறார்.

1991 ல் இலங்கையிலிருந்து கள்ளத்தோணி மூலம் தமிழ்நாட்டுக்கு வந்து சேரும் அவர் ராமேஸ்வரம் முகாமில் தங்க வைக்கப்படுகிறார். அங்கே ஏற்கனவே அவரது கர்ப்பிணி மனைவி லிஜோ மோல் ஜோஸ் அவர் வருகைக்காக காத்துக் கொண்டிருக்க, கணவனும் மனைவியும் சேர்ந்த அந்த சந்தோஷம் இரண்டு நாள்…

Read More

பறந்து போ திரைப்பட விமர்சனம்

by by Jul 4, 2025 0

முட்டைகளை அடைகாத்தாலும் சிறகு விரித்த தன் குஞ்சுகளை ‘ பறந்து போ… உன் பாதையை நீயே தேடு..!’ என்றுதான் விட்டு விடுகிறது பறவை. மனிதன் மட்டுமே எப்போதும் தன் வாரிசுகள் மீது ஆளுமையை செலுத்தி வாழ்நாள் முழுதும் அடைகாத்துக் கொண்டே இருக்கிறான்.

இந்த தத்துவார்த்தமான விஷயத்தை இது ஒரு தத்துவம் என்று தெரியாமலேயே போகிற போக்கில் ஜாலியாக ஜோக் அடித்து, பாட்டு பாடிக் கொண்டே சொல்லிவிடுகிறார் இயக்குனர் ராம். 

சொல்லப்போனால் அவரது படங்களிலேயே இந்தப் படம்தான் எளிதாகக் கைக்கொள்ளக்…

Read More

பீனிக்ஸ் திரைப்பட விமர்சனம்

by by Jul 4, 2025 0

தீயிலிட்டு சாம்பலாக்கினாலும் அதிலிருந்து உயிர் பெற்று வரும் புராணகாலப் பறவையாக நம்பப்படுவது பீனிக்ஸ். 

அப்படி நசுக்க நசுக்க அதிலிருந்து உயிர்த்துக் கிளம்பும் ஒடுக்கப்பட்ட பிறவியாக இருக்கிறார் படத்தின் நாயகன் சூர்யா சேதுபதி. 

கதையின் களம் நாம் நன்கறிந்த வடசென்னைப் பகுதிதான். அதிலும் குத்துச்சண்டை பின்னணியை இன்னும் சில படங்களில் பார்த்திருக்கிறோம்.

எனவே விஜய் சேதுபதியின் பதின்வயது  மகன் இதில் நாயகனாக அறிமுகமாகிறார் என்கிற ஆச்சரியத்தைத்தவிர வேறு எந்த முக்கியத்துவமும் படத்துக்கு முந்தைய எதிர்பார்ப்பில் இல்லை.

ஆனால் இதெல்லாம் படத்தைப் பார்த்த பின்பு…

Read More

லவ் மேரேஜ் திரைப்பட விமர்சனம்

by by Jun 27, 2025 0

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதோ என்னவோ, அந்தத் திருமணம் மண்ணில்தான் நடக்கிறது.

அப்படி நடக்கக்கூடிய திருமணம் சாதி மதத்தினாலோ அல்லது ஊரார் பேச்சுக்களுக்காகவோ  சம்பிரதாயமாக நடைபெறாமல் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதுடன், இவரைத் தவற விட்டு விடக் கூடாதென்று யார் மேல் நமக்கு ஈர்ப்பு ஏற்படுகிறதோ, அதுதான் உண்மையான காதல் என்று புரிய வைக்கும் படம்.

அதை ஒரு ஃபீல் குட்  படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஷண்முகப்பிரியன் 

பெரும்பாலும் அடிதடி ஆக்சன் படங்களிலேயே பார்த்து பழக்கப்பட்டு விட்ட விக்ரம் பிரபுவுக்கு…

Read More

மார்கன் திரைப்பட விமர்சனம்

by by Jun 27, 2025 0

சென்னையில் வைத்து ஒரு இளம்பெண் வினோதமான முறையில் கொலை செய்யப்படுகிறார். வினோதம் என்றால்..? உடலெல்லாம் கருத்துப் போய் இறந்து போய் இருக்கிறார் அந்தப் பெண்.

இது இந்தியாவெங்கும் வைரலாக…, மும்பையிலும் எதிரொலிக்கிறது. அங்கே தன் மகளும் அதே விதத்தில் இறந்த சோகத்தில் இருக்கும் காவல்துறை அதிகாரி விஜய் ஆண்டனி அது ஒரு சீரியல் கில்லரின் வேலைதான் என்று பொறி தட்டி சென்னை புறப்படுகிறார்.

சென்னையில் ஏடிஜிபி யாக இருக்கும் சமுத்திரக்கனி அந்தக் கேசை அவரிடம் ஒப்படைக்க… அவர் சந்தேகப்படும்…

Read More

திருக்குறள் திரைப்பட விமர்சனம்

by by Jun 27, 2025 0

உலகப் பொதுமறையான திருக்குறளைப் பற்றி நாம் தெரிந்து கொண்ட அளவுக்கு அதனை உலகினுக்குத் தந்த திருவள்ளுவர் பற்றி அதிகம் அறிந்ததில்லை. அதற்கான ஒரு முயற்சியை முன்னெடுத்து இருக்கிறார் இயக்குனர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணன்.

திருவள்ளுவர், வள்ளுவ நாட்டில் வாழ்ந்து வருவதோடு மக்களுக்குத் தமிழும் கற்றுக் கொடுக்கிறார். மனைவி வாசுகி உதவியுடன் அவர் எழுதிய செய்யுள்களை மதுரைத் தமிழ்ச சங்கம் நிராகரித்தது என்று அறியும் போது அவரை விட நமக்குதான்  அதிகமாக வலிக்கிறது.

ஆனால் இதற்கெல்லாம் கலங்கி விடாமல். ஒன்றே முக்கால் அடி…

Read More

குட் டே திரைப்பட விமர்சனம்

by by Jun 27, 2025 0

குடிகாரர்களைப் பற்றியும் குடி நோயாளிகளைப் பற்றியும் இதுவரை அனேக படங்கள் வந்துள்ளன. அவற்றிலிருந்து சற்று மாறுபட்டு சூழ்நிலை கொடுத்த அழுத்தத்தால் குடிக்கப் போன ஒருவரின் ஒரு நாள் இரவு எப்படி இருந்தது என்பதைப் படம் பிடித்துக் காட்டி இருக்கும் படம்.

வேலை செய்யும் இடம், குடும்பம், நண்பர்கள் என்று எல்லா மட்டத்திலும் ஒருநாள் சூழ்நிலைக் கைதியாகும் நாயகன் பிரித்திவிராஜ் ராமலிங்கம், அந்த அழுத்தத்தில் மதுபானத்தை உள்ளே தள்ளி விடுகிறார். உள்ளே போன மது அவரது ஆற்றாமைகளை வெளியே…

Read More