October 5, 2026
  • October 5, 2026
Breaking News

Currently browsing செய்திகள்

புதிய கதைக்களத்தில் ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிக்கும் கலியுகம் தொடங்கியது

by by Jan 20, 2021 0

 எந்தவொரு இயக்குநரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியாத பிரமோத் சுந்தர் இயக்கவுள்ள இந்தப் படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. ‘

கலியுகம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்காகப் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் படப்பூஜையுடன் படப்பிடிப்பும் தொடங்கியது. விளம்பரத் துறையில் பணிபுரிந்து, சில குறும்படங்களை இயக்கியுள்ளார் பிரமோத் சுந்தர்.

இதில் பிரதான கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கவுள்ளார். இந்தப் பூஜையில் அவருடன், படக்குழுவினரும் கலந்துக் கொண்டனர். இந்தப் பூஜையில் கரோனா வழிமுறைகளைப் பின்பற்றி படக்குழுவினர் பங்கேற்றனராம்.

Read More

மீண்டும் உண்மைச் சம்பவத்தை படமாக்கும் விருமாண்டி நாயகனாக சசிகுமார்

by by Jan 19, 2021 0

உண்மைச் சம்பவங்களைப் படமாக்குவது எப்போதுமே அவ்வளவு எளிதான விஷயமல்ல. அந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பார்க்கும் போது, அவர்களது நினைவுகள் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். அப்படியொரு உண்மைச் சம்பவத்தை ‘க/பெ ரணசிங்கம்’ என்ற பெயரில் இயக்கி அதில் மாபெரும் வெற்றி பெற்றவர் விருமாண்டி.

அந்தப் படத்தைப் பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் விருமாண்டியை வெகுவாகப் பாராட்டினார்கள்.

அதற்குப் பிறகுத் தனது அடுத்த படத்துக்கான கதையை முடிவு செய்து, திரைக்கதை எழுதி வந்தார் விருமாண்டி. இதுவும் ஒரு உண்மைச் சம்பவம் தான்.

தற்போது…

Read More

மாஸ்டர் போல கபடதாரி படமும் வெற்றி பெறும் – விஜய் ஆண்டனி

by by Jan 18, 2021 0

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.

சைமன் கே.கிங் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீடு நடைபெற்றது. இதில்
சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, ஜெயப்பிரகாஷ், ஜே.எஸ்.சதீஷ்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டார்கள்.

சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் டி.சிவா, நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது, “கபடதாரி படத்தை நாங்கள்…

Read More

பட்டாக்கத்தி கொண்டு கேக் வெட்டிய சம்பவம் – வருந்தினார் விஜய் சேதுபதி

by by Jan 16, 2021 0

ஓரிரு நாட்களுக்கு முன்பு விஜய் சேதுபதியின் பிறந்த தினம் வந்தது. அன்றைக்கு படப்பிடிப்பில் இருந்த அவருக்கு கேக் பரிசளித்து பட்டாகத்தியால்  வெட்ட வைத்தார் இயக்குனர் பொன்ராம்.

அந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அத்துடன் அப்படி பட்டாக் கத்தியை வைத்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுவது தவறான முன்னுதாரணம் என்று பல இடங்களிலும் விமர்சனங்கள் எழுந்தன.

சில வருடங்களுக்கு முன்னால் இதே போல் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி ஒருவரை போலீசார் கைது…

Read More

நேற்று ஈஸ்வரன் ரிலீஸ் இன்று சுசீந்திரன் தாயார் மரணம்

by by Jan 15, 2021 0

வெண்ணிலா கபடிக்குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டிய நாடு’ மற்றும் பல படங்களை இயக்கியவர் சுசீந்திரன்.

 
இவர் அழகர்சாமியின் குதிரை படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். தற்போது சிலம்பரசன் நடித்த ‘ஈஸ்வரன்’ படத்தை இயக்கி உள்ளார்.
 
இப்படம் நேற்று பொங்கல் அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது
 
இந்நிலையில், சுசீந்திரனின் தாயார் ஜெயலட்சுமி இன்று காலமானார். அவருக்கு வயது 62.
 
திடீர் மாரடப்பு ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட…

Read More

இணையத்தில் மாஸ்டர் காட்சிகள் – பகிர வேண்டாம் என படக்குழு வேண்டுகோள்

by by Jan 11, 2021 0

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் நாளை மறுதினம் உலகமெங்கும் வெளியாகவுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படம் கொரோனா காரணமாக சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளிவரும் இந்தத் திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளன.

வாட்ஸ்அப் உட்பட பல சமூக வலைதளங்களிலும் அவை பரப்பப்பட்டுவருகின்றன. இது குறித்து ட்வீட் செய்துள்ளது படத்தின் தயாரிப்பு நிறுவனமான XB Film Creators.

வெளியாக வெறும் ஒரு நாளே இருக்கும் இந்த வேளையில் இப்படிப்…

Read More

கால் டாக்ஸி ஓட்டப் போகிறார் பர்த்டே பேபி ஐஸ்வர்யா ராஜேஷ்

by by Jan 10, 2021 0

ஒரு நடிகை வளர்ந்து விட்டார் என்பதற்கான அடையாளம் அவரை மட்டுமே முதன்மைப்படுத்தி படங்கள் எடுக்கப்படுவதுதான்.

அந்த நிலைக்கு வளர்ந்து விட்டார் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்.

இயக்குநர்கள் நல்ல கதாபாத்திரங்களை உருவாக்கினாலும் , அதற்கு ஏற்ற நடிகர் நடிகைகள் கிடைத்தால் தான் அந்த கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டு பெற்று படமும் மிகப் பெரிய வெற்றி அடையும்.

தற்போது தமிழ், தெலுங்கு என தனக்கு வரும் கதாபாத்திரங்களுக்காக மெனக்கிட்டு, திரையில் உயிரூட்டி வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். 

இன்று ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்த நாளாகும். அவருக்கு…

Read More

கயல் ஆனந்தி ரகசிய கல்யாணம் கட்டியாச்சு

by by Jan 8, 2021 0

’கயல்’ ஆனந்திக்கும் இணை இயக்குநரான சாக்ரடீஸ் என்பவருக்கும் நேற்று திருமணம் நடந்து முடிந்தது.
 
பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட இத்திருமணம் தெலங்கானா மாநிலம், வாராங்கல் பகுதியில் உள்ள கோடெம் கன்வென்ஷன் சென்டரில் இரவு 8 மணியளவில் நடைபெற்றது.

கொரோனா அச்சுறுத்தலால் நெருங்கிய திரையுலக நண்பர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டனர்.

மணமகன் சாக்ரடீஸ் ‘மூடர்கூடம்’ நவீனின்் மைத்துனர் ஆவார்.

 
அவர் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’, ‘அக்னி சிறகுகள்’ ஆகிய…

Read More

புத்தாண்டு இரவில் தல ஆடிய நடனம் – மிக்கி தரும் வலிமை அப்டேட்ஸ்

by by Jan 7, 2021 0

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு யுவன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

இதுவரை சுமார் 80% படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. தற்போது ராஜஸ்தானில் சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கச் சென்றுள்ளனர். புத்தாண்டு அன்று கூட படப்பிடிப்பை நடத்தியுள்ளது ‘வலிமை’ படக்குழு. டிசம்பர் 31-ம் தேதி இரவு புத்தாண்டை…

Read More

மாதவனின் நன்றிக்கு பதில் அன்பு செய்த துல்கர் சல்மான்

by by Jan 6, 2021 0

மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் அமேசான் ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான மாறா வரும் ஜனவரி8, 2021 அன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

மேலும் இப்படம் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் காணக்கிடைக்கும். திலிப் குமார் இயக்கத்தில், ப்ரமோத் பிலிம்ஸ் சார்பில் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா தயாரித்துள்ள இந்த தமிழ் காதல் இசைப்படம் எதிர்பார்க்கப்படுகிற ஒரு திரைப்படமாக உள்ளது.

துல்கர் சல்மான் நடித்த மலையாளத் திரைப்படமான சார்லி-யின் தழுவலே மாறா….

Read More