August 10, 2022
  • August 10, 2022
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • MX Player ன் தமிழ் க்ரைம் திரில்லர் குருதி களம் இணைய தொடரின் டிரெய்லர் வெளியானது
January 20, 2021

MX Player ன் தமிழ் க்ரைம் திரில்லர் குருதி களம் இணைய தொடரின் டிரெய்லர் வெளியானது

By 0 187 Views

இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான  சண்டைக்களத்தை மையப்படுத்திய, உணர்வுபூர்வமான இந்த தொடரை இயக்கியுள்ளனர்.

அதீதமான சண்டை காட்சிகள் மற்றும் விறுவிறுப்பான கதையமைப்பு உள்ள இந்த தொடர், பிரத்தியேகமாக MX Original Series-ல்  ஜனவரி 22-ம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகவுள்ளது.

மும்பை: 21 ஜனவரி 2021-  
“ உன்னால் உன் விதியை தேர்ந்தெடுக்க முடியும் , ஆனால் உன் எதிரிகளை உன்னால் தேர்ந்தெடுக்கமுடியாது. “
இது இரண்டு இளைஞர்களின் கதை, வாழ்வின் தொடக்கத்தில் சரியான பாதையில் ஒன்றாக ஆரம்பித்த அவர்கள், இறுதியில் விதிக்கும், கடமைக்குமான இரத்தக்களரியான போரில், அவர்கள் கொடுக்கும் விலை என்ன, என்பதே இதன் கதை.

ஆக்சன் மற்றும் இதன் க்ரைம்  கதையமைப்பும், வலுவான இரண்டு கதாபாத்திரங்களின் பின்னணியும், சிறந்த பொழுதுபோக்கு அம்சத்திற்கு வழிவகுக்கிறது மற்றும் இந்தியாவின் சிறந்த பொழுதுபோக்கு ஆப் ஆன MX Player-ல் விரைவில் வெளியாக உள்ள “குருதி களம்” தொடர் பொழுதுபோக்கிற்கான சிறந்த தொடராக இருக்கும்.
 
Applause Entertainment மற்றும்  Arpad Cine Factory இணைந்து தயாரித்துள்ள “குருதி களம்” – தொடர், தனுஷ், கே மோகன், விக்னேஷ் கார்த்திக், கிஷோர் சங்கர் மற்றும் கவிராஜ் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். 13 அத்தியாயங்கள் கொண்ட இந்த தொடரை ராஜ பாண்டி மற்றும் தனுஷ் ஆகிய இருவர் இயக்கியுள்ளனர். இந்த தொடர் MX Player-ல் ஜனவரி 22 வெளியாகவுள்ளது.

இந்த தொடர் சென்னையில் உள்ள இரண்டு போட்டி கும்பல்களைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது, அவர்கள் வன்முறையின் மூலம் சென்னையை எப்படி ஆளுகிறார்கள் என்பதே கரு.  
ஒரு நேர்மையான இளைஞன் விஜய்( சந்தோஷ் பிரதாப் நடித்துள்ளார்) ஒரு முடிவில்லாத சக்தி வளையத்திற்க்குள் இழுக்கப்படுகிறான், காவல் துறை அதிகாரியாக ஆக வேண்டும் என்ற அவன் கனவு, இந்த வன்முறையால் நிகழாமல் போகிறது.  அவன் மீண்டும் எழுந்து, அவனது பெரும் எதிரி கூட்டமான குமாரில்( அசோக் குமார் நடித்துள்ளார்) தொடங்கி, தனது முன்னால் நண்பனான சப்-இன்ஸ்பெக்டர் அருண் ( சவுந்தர் ராஜா நடித்துள்ளார்) வரை பழிக்குபழி வாங்குகிறான்.

பரபரப்பான இந்த இணைய தொடரில்  நடிகர் மாரிமுத்து, வின்செண்ட் அசோகன், ஶ்ரீகாந்த், சனம் ஷெட்டி, ஈடன் குரியகோஷ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
 
இத்தொடரின் டிரெய்லரை இங்கு காணுங்கள் :
 
இணைய தொடரை முற்றிலும் இலவசமாக  22 ஜனவரி 2021 முதல்  MX Player ல் காணலாம்
 
ஆப்பை இங்கு தரவிறக்கம் செய்ய
Web: https://www.mxplayer.in/
 
 இங்கே எங்களுடன் இணைந்திருங்கள் :
 www.facebook.com/mxplayer www.twitter.com/mxplayer www.instagram.com/mxplayer

MX Player பற்றி
 
MX Player  ஒரு பொழுதுபோக்கு இணைய ஆப் ஆகும். ஒவ்வொரு மாதமும்  200 மில்லியன் சந்தாதார்கள் பயன்படுத்தும் இந்த ஆப் அனைத்து விதமான இணைய பொழுதுபோக்கு அம்சங்களையும் வழங்குகிறது. வீடியோ ப்ளேபேக், வீடியோ ஸ்ட்ரீமிங், மியூசிக், கேமிங் என அனைத்தும் இதில் உள்ளது.

பார்வையாளர்களின் மனவோட்டத்திற்கேற்ற அனைத்து பொழுதுபோக்கையும் ஓரிடத்தில் வழங்குகிறது. தற்போது விளம்பரங்களின் உதவியுடன் இயங்கும் இந்த ஆப் பத்து மொழிகளில் 2 00 000 மணி நேரம் ஓடும்  ப்ரீமியம் கதைகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது.

விமர்சகர்கள் பாராட்டும் MX ஒரிஜினல்ஸ், ப்ரத்யேகமான எக்ஸ்க்ளூசிவ் கதைகள், திரைப்படங்கள், இணைய தொடர்கள் தொலைக்காட்சி தொடர்கள், செய்திகள் மற்றும் ஆடியோ மியூசிக் ஆகியவை இதில் அடங்கும்.