April 19, 2024
  • April 19, 2024
Breaking News

Currently browsing செய்திகள்

கொலை மனிதர்களுடன் நெருக்கமான ஒன்று – மிஷ்கின்

by by Aug 13, 2022 0

லைலாவை கொன்றது யார் எனும் ஹேஸ்டேக் சமூக வலை தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது. கொலை படம் குறித்து பரவும் இந்த செய்தி திரைப்பட ஆர்வம் இல்லா பொது ரசிகர்களுக்கும், படத்தின் மீது பெரும் ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது. Infiniti Film Ventures நிறுவனம் Lotus Pictures உடன் இணைந்து தயாரிக்க,

பாலாஜி K குமார் எழுதி இயக்க, விஜய் ஆண்டனி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘கொலை’. வித்தியாசமான மோஷன் போஸ்டர் அறிமுகத்தால் ரசிகர்களின் ஆவலை…

Read More

சீதாராமம் இயக்குநர் மனதிலிருந்து எழுதிய கதை – துல்கர் சல்மான் பேச்சு

by by Aug 13, 2022 0

வைஜெயந்தி மூவிஸ், ஸ்வப்னா சினிமா ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்த ‘சீதா ராமம்’ எனும் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி, ரசிகர்களின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இந்த திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் உலகளவில் நாற்பது கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.

இந்நிலையில் விமர்சன ரீதியாகவும், வசூல் செய்தியாகவும் ‘சீதா ராமம்’ பெரிய வெற்றியைப் பெற்றதால்,…

Read More

சீரியஸ் படங்கள்தான் ரசிகர்களைக் கூட்டும் – ஜீவி 2 நாயகன் வெற்றி

by by Aug 12, 2022 0

கடந்த 2019ல் ‘எட்டு தோட்டாக்கள் புகழ்’ நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்ற படம் ஜீவி.. 

இயக்குநர் விஜே கோபிநாத் இயக்கிய இந்தப்படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது ஜீவி-2 உருவாகியுள்ளது. 

மாநாடு என்கிற வெற்றி படத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது.

 முதல் பாகத்தில் இடம்பெற்ற அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் கோபி உள்ளிட்ட…

Read More

ஆர் பார்த்திபனுடன் இணையும் ஆர்யன் ஷியாம்

by by Aug 10, 2022 0

“அந்த நாள்’ தமிழ்த் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாக்களில் ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளது.

க்ரீன் மேஜிக் எண்டர்டெயின்மென்ட் ஆர்.ரகுநந்தன் தயாரித்த தமிழ் திரைப்படம் “அந்த நாள்” சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றுள்ளது மற்றும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் 8 அதிகாரப்பூர்வ பரிந்துரைகளைப் பெற்றது.

 அந்த நாள் நரபலியை மகிமைப்படுத்தும் கருப்பொருளுக்காக சிபிஎஃப்சியால் சென்சார் சான்றிதழை மறுத்தது, பின்னர் ரிவைசிங் கமிட்டி வாரியத்தால் வெளியிட அனுமதி பெற்றது.

அந்த நாள் டைம் வார்ப், சூனியம்…

Read More

தமிழ் ராக்கர்ஸை முடிவுக்குக் கொண்டு வர களத்தில் இறங்கும் அருண் விஜய்

by by Aug 9, 2022 0

உலகளவில் சட்டவிரோதமான செய்தி திருட்டு என்பது கலை உலகில் மிக பெரிய கவலைக்குரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இத்தகையப் பெரும் செய்தி திருட்டு செய்யும் இணையதள கும்பல் மீது ஒரு முடிவில்லா போர் ஒன்றே கலை உலகத்தினர் நடத்தி வருகின்றனர்.

முதல் முறையாக இந்த தலைப்பில் ஒரு மிக பெரிய ஆராய்ச்சி நடத்தி, இந்த வலையில் இருக்கும் ஆழ்ந்த மறைக்கப்பட்ட உண்மைகளை நேயர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக இந்த தொடர் இருக்கும். எப்போதும் தங்களுடைய உன்னதமான மற்றும்…

Read More

கலாச்சாரம் சொல்லும் படங்கள் எப்போதும் ரசிக்கப்படும் – கார்த்தி

by by Aug 9, 2022 0

2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து வழங்கும் படம் “விருமன்”.

முத்தையா இயக்கும் இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி என பலர் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் விருமன் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில்

நடிகர் ஜி.எம்.சுந்தர் பேசும்போது,

முக்கியமான ஒரு விஷயத்தை நான் பதிவு செய்ய வேண்டும் என்று…

Read More

அமலா பால் எங்கள் கடவுள் – நெகிழ்ந்த கடாவர் பட இயக்குனர்

by by Aug 9, 2022 0

அமலா பால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்து, முதன் முதலாக தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கடாவர்’. ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் இந்த திரைப்படம் வெளியாகிறது.

அறிமுக இயக்குநர் அனூப். எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் அமலா பாலுடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அபிலாஷ் பிள்ளை…

Read More

உதயநிதிக்கு நன்றி தெரிவித்த அமீர்கான்

by by Aug 8, 2022 0

“நான் அமீர்கானின் ரசிகன். இதன் காரணமாகவே அவரது நடிப்பில் வெளியாகும் ‘லால் சிங் சத்தா’ திரைப்படத்தை தமிழக முழுவதும் வெளியிடுகிறோம் என எண்ண வேண்டாம். லால் சிங் சத்தா படைப்பு, அனைவரும் கண்டு ரசிக்க வேண்டிய நேர்த்தியான படைப்பு ” என இப்படத்தை தமிழகம் முழுதும் வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் அமீர்கான் தயாரிப்பில் ஆகஸ்ட் 11ம்…

Read More

அப்பாதான் உங்கள் வில்லன் என்றார் முத்தையா – விருமன் விழாவில் கார்த்தி கல கல

by by Aug 4, 2022 0

நேற்று மதுரையில் நடந்த விருமன் பட இசை வெளியீட்டு விழாவில்…

நடிகர் கார்த்தி பேசும்போது,

என்ன மாமா சௌக்கியமா?

இந்த வார்த்தையை எனக்கு சொந்தமாக்கிய இந்த மண்ணிற்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பருத்தி வீரன் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், அமெரிக்காவில் இருந்து மீசை தாடி இல்லாமல் இப்படித்தான் வந்திருந்தேன். அப்பொழுது எப்படி இவரை பருத்தி வீரனாக மாற்றப் போகிறீர்கள் என்று அமீரிடம் கேட்டார்கள்.

அப்பொழுது, அமீர் சார் 10 பேரை…

Read More

விஜய் சேதுபதி வந்தபோது இருந்த நிலைமை இன்று எங்களுக்கு இல்லை

by by Aug 3, 2022 0

Crackbrain Productions தயாரிப்பில், இயக்குநர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில், புதுமுகங்கள் விஷ்வா, சாய் தன்யா, சுபா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நாட் ரீச்சபிள் ( Not Reachable).

இப்படம் ஒரு மாறுபட்ட திரில்லர் டிரமாவாக, ரசிகர்களை இருக்கை நுனியில் பரபர திரில்லராக உருவாகியுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா பிரபலங்கள், படக்குழுவினர்…

Read More