October 27, 2025
  • October 27, 2025
Breaking News

Currently browsing செய்திகள்

விருதை திருப்பிக் கொடுத்த சேரன் – மீடியா சென்சேஷனல்

by by Feb 2, 2020 0

கலைஞர்கள் எப்போதுமே உணச்சி வசப்பட்டவர்கள். அதிலும் நல்ல படங்கள் எடுக்கும் இயக்குநர்களுக்கு கொஞ்சம் கோபம் அதிகமாகவே இருக்கும். இதில் சேரனும் விதிவிலக்கல்ல.

இவருக்கு தனியார் மீடியா ஒன்று (பிஹைன்ட் உட்ஸ்) தங்கப்பதக்கத்துடன் கூடிய Icon of Inspiration விருதை அளித்தது. திரைப்படக் கலைஞர்களைப் பொறுத்த அளவில் மீடியாக்கள் கொடுக்கும் இதுபோன்ற விருதுகளை மரியாதையுடன் ஏற்பார்கள். அப்படித்தான் சேரனும் இந்த விருதைப் பெற்றுக்கொண்டார்.

ஆனால், இந்த விருதை இப்போது திருப்பிக் கொடுத்து விட்டார். என்ன சங்கதி..?

சமீபத்தில் சேரன் நடிப்பில் சாய்ராஜ்குமார்…

Read More

சீறு பிரஸ்மீட்டில் மாற்று திறனாளி திருமூர்த்தியை பாடவைத்த இமான் வீடியோ

by by Feb 2, 2020 0

வேல்ஸ் பிலிம் இன்டர்னேஷனல் தயாரிப்பில் ரத்தின சிவா இயக்க உருவாகி இருக்கும் படம் ‘சீறு’. கோலிவுட்டில் 17 ஆண்டுகளை முடித்துள்ள ஜீவா நடித்துள்ள இந்தப்படம் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகிறது.

ஆக்ஷன் மற்றும் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ஹிட்டடித்து விட்டன.

இந்தப் படத்தில் செவ்வந்தியே என்னும் பாடலை ‘நொச்சிப்பட்டி திருமூர்த்தி’ என்பவர் பாடியுள்ளார். பார்வைத் திறனில் மாற்றுத் திறனாளியான திருமூர்த்தி விஸ்வாசம் படத்தின்…

Read More

ஓ மை கடவுளே – சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி யுடன் கௌதம் மேனன்

by by Feb 1, 2020 0

திரையில் சரியான விதத்தில் சொல்லப்படும் காதல் கதைக்கு மவுசு எப்போதும் அதிகம். அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் “ஓ மை கடவுளே” இன்றைய நவ நாகரீக உலக இளைஞர்களின் காதலை புதிய வடிவில் சொல்கிறது.

இப்படத்தின் டீஸர், புரமோ பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், இப்படத்தில் இணைந்திருக்கும் நட்சத்திரங்களால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது.

ஏற்கனவே விஜய்சேதுபதி இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்கிற நிலையில், இப்போது அடுத்த ஆச்சர்யமாக, இயக்குநர் கௌதம் மேனன்…

Read More

டப்பிங் யூனியனும் அரசு கட்டுப்பாட்டில் – ராதாரவி வியூகம்

by by Feb 1, 2020 0

தமிழ் சினிமா டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகிக்களுக்கான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது வழக்கம். கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற ராதாரவி தலைவராக இருந்து வருகிறார்.

அவருடைய பதவிக் காலம் பிப்ரவரி 15-ம் தேதி முடிவடைய உள்ளதால், சினிமா டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் 2020 -2022 க்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

இம்முறையும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் ராதாரவி. அவரை எதிர்த்து ‘ராமராஜ்யம்’ என்ற அணி சார்பில் பாடகி சின்மயி தலைவர் பதவிக்கு…

Read More

சனம் ஷெட்டி இன்னொருவர் உடன் இருந்த ஆதாரம் உள்ளது – தர்ஷன் திடுக் தகவல்

by by Feb 1, 2020 0

திருமணம் செய்வதாக ஏமாற்றி நம்பிக்கை துரோகம் செய்ததாக பிக் பாஸ் தர்ஷன் மீது நடிகை சனம் ஷெட்டி புகார் அளித்திருந்த நிலையில் தி.நகரில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் தர்ஷன் விளக்கம் அளித்தார்.

“நடந்த விசயங்களை விளக்கமாக சொல்ல தான் பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்படுத்தி உள்ளோம்.

2016ல் சென்னைக்கு வந்தேன். ஒரு புரோடக்சன் கம்பேனியில் வேலையை தொடங்கினேன்.

பச்சைப்பா சில்க் விளம்பரம் போது தான் அவர் எனக்கு முதல் அறிமுகம் ஆனார். படங்களுக்கும் எனக்கு சனம் செட்டி நிறைய உதவி செய்துள்ளார்….

Read More

கோலிவுட்டில் 17 வருடங்களை கடந்த ஜீவா

by by Jan 31, 2020 0

1984 ஆம் ஆண்டு ஜனவரி 4 ந்தேதி பிறந்த ஜீவா கோலிவுட்டில் அறிமுகம் ஆகி 17 வருடங்கள் ஆகின்றன. அதை ஒட்டி ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டிருக்கிறது.

இன்னிய தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவராக இருக்கும் ஜீவாவின் இயற்பெயர் அமர்.

தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, இவரது தந்தை. நடிகர் ஜித்தன் ரமேஷ் இவரதுசகோதரர். ஜீவாவுக்கு திருமணமாகி சூர்யா என்ற மனைவி இருக்கிறார்.

தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மகன் எனும் அடையாளத்தோடு, ஆசை ஆசையாய் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ஜீவா.

இன்றைக்கு பாலிவுட் படத்தில்…

Read More

பிக்பாஸ் தர்ஷன் மீது காதலி சனம் ஷெட்டி போலீஸில் புகார்

by by Jan 31, 2020 0

கடைசியாக நடந்த முடிந்த பிக்பாஸ் போட்டியில் அனைவரது பாராட்டுகளையும் பெற்றவர் தர்ஷன். திடீரென்று போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டவர் அதன்பின் கமல் நடிக்கும் இந்தியன் படத்தில் முக்கிய வேடம் ஏற்கிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாயின.

ஆனால் பிக்பாஸ் போட்டிக்கு வருவதற்கு முன்னாலேயே அந்த தர்ஷனை ஹீரோவாக வைத்து நடிகை சனம் ஷெட்டி ஒரு படத்தை தயாரிக்க ஆரம்பித்திருந்தார்.

பிக் பாஸ் போட்டியில் தர்ஷன் பிரபலமானதைத் தொடர்ந்து தான் தயாரிக்கும் படத்தை முடித்து பெரிய அளவில் விற்பனை செய்ய நினைத்திருந்தார் சனம்…

Read More

திடீர் திருப்பமாக நாளை வெளியாகிறது நாடோடிகள் 2

by by Jan 30, 2020 0

நாளை ஜனவரி 31 அன்று வெளியாவதாக இருந்த நாடோடிகள் 2 வழக்கு நீதிமன்றத்தில் இருந்ததால் நாளை வெளியாவதில் சிக்கல் நீடித்தது.  என்ன பிரச்சினை..?
 
எம்.எம்.பைனான்ஸ் என்ற நிறுவனம் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், நாடோடிகள் 2 படத்தின் தமிழகம், புதுச்சேரி விநியோக உரிமையை எனக்கு தருவதாக தயாரிப்பாளர் நந்தகோபால் 5.25 கோடிக்கு ஒப்பந்தம் போட்டார். ரூ..3.5 கோடி பணமும் பெற்றுள்ளார்….

Read More

ஹீரோ ஆக்கிய தயாரிப்பாளரை விட்டு ஸ்ரீதேவி கணவருக்கு அஜித் படம் பண்ணலாமா..?

by by Jan 30, 2020 0

கமல் கோவின்ராஜ் தயாரித்து நடித்துள்ள படம் ‘புறநகர்’. இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் மின்னல் முருகன். E.L.இந்திரஜித் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விருந்தினர்கள் பேசியதிலிருந்து…

விழாவில் கே.ராஜன் பேசியதாவது..

“இது நம்ம ஏரியா படம். நான் வண்ணாரப்பேட்டை. குத்துப்பாடல்கள் எல்லாம் சிறப்பாக இருந்தது. ஆனால் நம் தமிழ்நாடு ரசிகர்கள் மோசம். ஆயிரம் ரூபாய் கொடுத்து அடுத்தவன் படத்திற்கு ஓடுகிறார்கள். படத்தின் இயக்குநர் மின்னல் முருகன் அருமையா படத்தை இயக்கி இருக்கிறார்.

60 கோடிக்கு படம் எடுத்து ரசிகர்கள் தலையில்…

Read More

அழகு மலராட டி எஸ் ராகவேந்தர் காலமானார்

by by Jan 30, 2020 0

எண்பதுகளில் புகழ்பெற்று விளங்கியவர் நடிகர் ராகவேந்தர். டி எஸ் ராகவேந்தர் என்று சொன்னால்தான் சினிமா ரசிகர்களுக்கு தெரியும். வைதேகி காத்திருந்தாளில் ரேவதி அப்பா கதாபாத்திரத்தில் வருவாரே அவர்தான்.

இவர் ஒரு இசையமைப்பாளரும் கூட. இவரது இயற்பெயர் விஜயரமணி. விஜயரமணி என்ற பெயரிலேயே ஆரம்பக்காலங்களில் இவர் திரைப்படங்களில் பின்னணி பாடி வந்தார்.

1980-இல் வெளிவந்த யாக சாலை என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார். கே.பாலசந்தரின் படங்களில் நடித்திருக்கிறார். ‘சிந்து பைரவி’ அதில் முக்கியமான படம்.

இசைஞானி இளையராஜாவின் பல பாடல்களை இவர் பாடியுள்ளார்…

Read More