April 10, 2026
  • April 10, 2026
Breaking News

Currently browsing அரசியல்

நாங்கள் கடும் கோபத்தில் இருக்கிறோம் – பிரதமர் மோடிக்கு கமல் பகிரங்கக் கடிதம்

by by Apr 6, 2020 0

கொரோனா ஊரடங்கு குறித்து அவ்வப்போது தன் கருத்துகளை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் கொஞ்சம் காட்டமான நீண்ட கடிதம் ஒன்றை பிரதமர் மோடிக்கு நேரடியாகவே எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

”மிகவும் ஏமாற்றத்துடன் அதே நேரத்தில் ஒரு பொறுப்பான குடிமகனாக எனது இரண்டாவது கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.

23, மார்ச் எனது முதல் கடிதத்தின் முக்கிய நோக்கமே, இந்த நாட்டையும்…

Read More

ஊரடங்கு உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை – முதல்வர்

by by Apr 3, 2020 0

வெளிமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜா அண்ணாமலைபுரம் சமுதாய நல கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று   நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் வேளச்சேரியில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள சமுதாய நலக்கூடத்திலும் ஆய்வு செய்தவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதிலிருந்து:-

வெளிமாநிலங்களில் இருந்து 1.34 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தங்கி வேலை செய்கின்றனர். அந்தத் தொழிலாளர்களுக்கு தங்குமிடம், உணவு, உடை உள்ளிட்ட  பல்வேறு உதவிகளை அரசு செய்துள்ளது. 

மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவே ஊரடங்கு…

Read More

ஏப்ரல் 14 க்கு மேல் ஊரடங்கு நீட்டிக்கப் படுமா – முதல்வர் பதில்

by by Apr 1, 2020 0

கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் சரியான உணவு கிடைக்காமல் ஏழை மக்கள் அவதிப்படுகின்றனர்.
 
தமிழகத்தில் உள்ள அம்மா உணவங்கள் இந்த சமயத்தில் ஏழை மக்களுக்கு பெரிதும் கைகொடுக்கின்றன. 
 
இந்நிலையில் சென்னை சாந்தோம் மற்றும் கலங்கரை விளக்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.
 
உணவின் தரம் மற்றும் ஊழியர்கள் சுகாதாரமான முறையில் உணவு சமைக்கிறார்களா என்பதை முதல்வர் ஆய்வு செய்தார். உணவை சாப்பிட்டு பார்த்த அவர், அங்கு…

Read More

7 பேர் தற்கொலை எதிரொலி – கேரளாவில் விதி முறையுடன் மது பான சப்ளை

by by Mar 31, 2020 0

கேரளாவில் மது கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் இதுவரை 7 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். போகப்போக கொரோனாவில் இறந்தவர்களை விட குடிநோயாளிகள் இறப்பு அதிகமாக இருக்குமோ என்று எண்ணி குடிநோயாளிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க கேரள அரசு நிபந்தனை அடிப்படையில், மது பாட்டில்களை வழங்க முடிவெடுத்துள்ளது.

அதற்காக மாநில அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் பினராயி விஜயன் அவசர ஆலோசனை நடத்திய பின்னர், குடிநோயாளிகளுக்கு நிபந்தனை அடிப்படையிலான மதுவிற்பனை வழங்க…

Read More

கொரோனா எதிர்ப்பு சக்திக்கு ரோஜா எம்எல்ஏ சொல்லும் உணவு – வீடியோ

by by Mar 30, 2020 0

 

ரோஜா மட்டும் வீட்டில் இப்படி சமைத்து உண்கிறாரே..? என்று நீங்கள் நினைக்கத் தேவையில்லை. அவர் எம்எல்ஏ வாக இருக்கும் நகரி தொகுதியில் கோரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக பாடுபட்டு வரும் ஊழியர்கள் 5 ஆயிரம் பேருக்கு தினமும் உணவு வழங்கி வருகிறார்.

நகரி மற்றும் புத்தூர் நகர சபைகளில் பணியாற்றும் ஊழியர்கள், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் மதிய உணவு என்பது பிரச்சினையாகவே உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, ஒரு ஆண்டுக்கும் மேலாக…

Read More

கொரோனா பற்றி அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்வதை கவனமாக கேளுங்க

by by Mar 29, 2020 0

Read More

ஊரடங்கு விடுமுறை அல்ல – முதல்வர் விளக்கம்

by by Mar 25, 2020 0

கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு குறித்து , தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்களிடம் தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார்.

அதில் அவர் பேசியதன் சாராம்சம் ;

1.இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 606 ஆக உயர்வு

2.மத்திய அரசின் வேண்டுகோள்படி 21 நாள் ஊரடங்கை நாம் கடைபிடிக்க வேண்டும்

3.கொரோனா பரவுவதை தடுக்க எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்து செயல்பட வேண்டும்

4.கொரோனா பரவுவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

5.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.3,280 கோடி…

Read More

நிரம்பி வழியும் வெளியூர் பஸ்கள் – நம்பிக்கை தரும் அமைச்சர்

by by Mar 23, 2020 0

கொரோனா முன் எச்சரிக்கை காரணமாக மாநிலம் முழுவதும் நாளை மாலை முதல், 144 தடை உத்தரவு அமலாகிறது.

இதனால் சென்னையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளால் கோயம்பேடு பேருந்து நிலையம் நிரம்பி வழிகிறது. பயணிகள் பலரும் பஸ்களில் இடம் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி விபரம்:

“சென்னையில் இருந்து நாளை மாலை வரை, வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். ஆகையால் பயணிகள் கவலைப்பட தேவையில்லை.

சென்னை மாநகரப் பேருந்துகளையும் திருச்சி, திருவண்ணாமலை,…

Read More

சென்னை ஈரோடு காஞ்சிபுரம் மாவட்டங்களை தனிமைப்படுத்த உத்தரவு

by by Mar 22, 2020 0

இன்று 22 மார்ச் 2020 அன்று சுய ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து இன்று நாடுமுழுவதும் மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளே முடங்கினர்.
 
இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக இன்று பீகார் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தலா ஒருவர் பலியாகியதை அடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 370-ஐ தாண்டியுள்ளது.
 
இதனால் மத்திய அரசு கொரோனாவால் பாதித்த நாட்டில் உள்ள 75 மாவட்டங்களில் தேவைப்பட்டால் ஊரடங்கு உத்தரவை நீட்டித்துக்கொள்ளலாம் என்று…

Read More

சூரிய ஒளியில் நின்றால் கொரோனா குணமாகும் – பாஜக இணை மந்திரி கண்டுபிடிப்பு

by by Mar 19, 2020 0

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 2 லட்சத்து 19 ஆயிரத்து 367 பேருக்கு பரவியுள்ளது. இதுவரை 8 ஆயிரத்து 970 பேரை இந்த வைரஸ் பலி வாங்கியுள்ளது.

இந்தியா முழுதும் இதுவரை இந்த வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 151லிருந்து 166 ஆக உயர்ந்துள்ளது கவலை அளிக்கிறது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.  

உலகம் முழுவதும், இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மீள தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் மருத்துவம் மற்றும் அறிவியல் அறிஞர்கள்…

Read More