June 6, 2023
  • June 6, 2023
Breaking News
March 22, 2020

சென்னை ஈரோடு காஞ்சிபுரம் மாவட்டங்களை தனிமைப்படுத்த உத்தரவு

By 0 488 Views
இன்று 22 மார்ச் 2020 அன்று சுய ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து இன்று நாடுமுழுவதும் மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளே முடங்கினர்.
 
இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக இன்று பீகார் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தலா ஒருவர் பலியாகியதை அடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 370-ஐ தாண்டியுள்ளது.
 
இதனால் மத்திய அரசு கொரோனாவால் பாதித்த நாட்டில் உள்ள 75 மாவட்டங்களில் தேவைப்பட்டால் ஊரடங்கு உத்தரவை நீட்டித்துக்கொள்ளலாம் என்று மாநில அரசுகளுக்கு தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
 
அந்த 75 மாவட்டங்களில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு அடங்கும் எனத் தகவல் தெரிவிக்கின்றன. இதனால் இந்த மூன்று மாவட்டங்களும் தனிமைப்படுத்தப்பட இருக்கிறது.
 
இதனால் இந்த மாவட்டங்களில் அத்தியாவசிய பொருட்களுக்காக மட்டுமே மக்கள் வெளியேற வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.