ஊரடங்கு நீட்டிப்பா? பிரதமர் மோடி 27- ல் மீண்டும் கலந்துரையாடல்
இம்ரான்கானுக்கு அமெரிக்காவில் சிக்கித் தவிக்கும் நடிகை வேண்டுகோள்
உலகம் முழுக்க கொரோனா தாக்கம் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த நடிகை மீரா, பிரதமர் இம்ரான்கானுக்கு வீடியோ மூலம் தன்னைக் காப்பாற்ற சொல்லி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனாவால் அமெரிக்காவில் சிக்கி தவிக் கிறார பிரபல நடிகையான மீரா. ஷூட்டிங் காரணமாக அமெரிக்காவுக்கு சென்ற நடிகை தற்போது அங்கு சிக்கி தவிக்கிறார்.
உலகம் முழுவதிலும் கொரோனாவால் அமெரிக்காவில் தான் அதிக பாதிப்புகள் உள்ள நிலையில், தற்போது அவர் நியூயார்க்கில் இருக்கிறார்.
ஒரு மாசத்திற்கு முன்பு தனது long-distance என்ற படத்திற்காக…
Read More
ஊரடங்கில் தடபுடலாக நடந்த முன்னாள் பிரதமர் – முதல்வர் இல்ல திருமணம் வீடியோ
முன்னாள் இந்திய பிரதமர் தேவேகவுடாவின் பேரனும் கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி மகன் நிகில் குமாரசாமிக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மகள் ரேவதிக்கும் பெங்களூருவுக்கு அருகேயுள்ள பண்ணை வீட்டில் இன்று திருமணம் நடைபெற்றது.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஹெச்.டி.குமாரசாமியின் மகன் திருமணம் நடைபெறுவது ஊடகங்களில் முக்கிய தலைப்புச் செய்தியாக இடம் பிடித்தது.
கர்நாடகா மாநில அரசு சார்பில் சமூக இடைவெளி முறையாக கடைபிடிக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
திருமண இடம்…
Read More
ஒரே நாளில் அமெரிக்காவில் அதிகபட்சமாக 2600 கொரோனா பலி
உலகம் முழுவதும் ஆட்டிப்படைக்கும் உயிர்கொல்லி தொற்றான ‘கொரோனா வைரஸ்’ தாக்கத்தால் இதுவரை 20 லட்சத்து 83 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 5 லட்சத்து 10 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
அதிகபட்சமாக அமெரிக்காவில் 6 லட்சத்து 44 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு 28,529 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்லும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன.
அமெரிக்காவில்…
Read More
உதவி செய்யக் கூடாது என்பது சர்வாதிகாரத்தனம் – முக ஸ்டாலின் கடிதம்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் சற்றுமுன்னர் தனியார் தொண்டு நிறுவனங்கள் உணவுப்பொருட்களை தாங்களாகவே விநியோகம் செய்ய கூடாது என்றும், மாவட்ட நிர்வாகம் மூலம் மட்டுமே வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது.
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
லாக்டவுன் காலத்தில்…
Read More
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவெடுக்க நாளை அமைச்சரவை கூட்டம்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சமூக பரவலுக்கான அடுத்த நிலையை எட்டுவதை தவிர்ப்பதற்காக ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில், கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட 19 மருத்துவர்கள் குழுவுடன் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அதில் தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மாநில முதல்வர்களும் இதே கருத்தை முன்வைத்துள்ளனர்….
Read More
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் நிலைக்கு செல்ல வாய்ப்பு – முதல்வர்
சென்னை தலைமை செயலகத்தில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அமைக்கப்பட்டுள்ள 12 பணி குழுக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
தமிழகத்தில் 738 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதியான நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
விமான நிலையங்களில் 2.10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது. 19 ஆய்வகங்கள் மூலம் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. 6,095 பேருக்கு இதுவரை சோதனை நடைபெற்றுள்ளது. 344…
Read More
பிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா – செங்கல்பட்டில் 1000 குடும்பத்துக்கு கொரானா நிவாரணம்
PMJKYPPA பிரதான் மந்திரி ஜன் கல்யாண் யோஜனா பிரச்சார இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ஜெய்கணேஷ் ஆலோசனையின்படி காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு கொரானா நிவாரண உதவியாக மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி பொருட்கள் மாவட்ட நிர்வாகி கண்ணன் தலைமையில் வழங்கும் நிகழ்வு கேளம்பாக்கம் மாவட்ட அலுவலகத்தில் துவங்கப்பட்டது .
இதன் மூலம் கேளம்பாக்கம், புதுப்பாக்கம் சாவடி சிறுதாவூர் , மடத்தூர், திருப்போரூர் , பையனூர் , காரணை , தட்சிணாபுரம், குன்னபட்டு ,…
Read More
நாங்கள் கடும் கோபத்தில் இருக்கிறோம் – பிரதமர் மோடிக்கு கமல் பகிரங்கக் கடிதம்
கொரோனா ஊரடங்கு குறித்து அவ்வப்போது தன் கருத்துகளை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் கொஞ்சம் காட்டமான நீண்ட கடிதம் ஒன்றை பிரதமர் மோடிக்கு நேரடியாகவே எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
”மிகவும் ஏமாற்றத்துடன் அதே நேரத்தில் ஒரு பொறுப்பான குடிமகனாக எனது இரண்டாவது கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.
23, மார்ச் எனது முதல் கடிதத்தின் முக்கிய நோக்கமே, இந்த நாட்டையும்…
Read More