June 6, 2023
  • June 6, 2023
Breaking News
April 22, 2020

ஊரடங்கு நீட்டிப்பா? பிரதமர் மோடி 27- ல் மீண்டும் கலந்துரையாடல்

By 0 557 Views
கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
 
அனைத்துநாடுகளும் கொரோனா வைரசில் இருந்து காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ள நிலையில் இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டு  உள்ளது.
 
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல் மந்திரிகளுடனும் பிரதமர் மோடி வரும் 27-ம் தேதி வீடியோ கான்பரன்சில் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
ஏற்கனவே, கொரோனா வைரஸ் குறித்து அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி கடந்த 2 மற்றும் 11ம் தேதிகளில் வீடியோ கான்பரன்சில் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.