November 26, 2024
  • November 26, 2024
Breaking News

Currently browsing தமிழ்நாடு

பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள்

by by Apr 8, 2023 0

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று பிற்பகலில் சென்னை வந்தடைந்தார்.

ஐதராபாத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு மதியம் 2.45 மணி அளவில் வருகை தந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரதமரை நேரில் வரவேற்றனர். மத்திய மந்திரி எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த…

Read More

அண்ணாமலை அதிரடி – ராமநாதபுரம் பாஜக நிர்வாகிகள் மாற்றம்

by by Mar 28, 2023 0

ராமநாதபுரம் மாவட்டத்தில் பா.ஜனதாவில் பொறுப்பு வழங்க பணம் பேரம் பேசப்பட்டது தொடர்பாக ஒரு ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் பா.ஜனதா நிர்வாகி ஒருவர் தற்கொலைக்கு முயன்றது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாவட்ட அளவில் புகைந்து கொண்டிருந்த இந்த விவகாரம் மாநில தலைமையின் காதுகளை எட்டியது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய மாநில தலைவர் அண்ணாமலை அதிரடியாக நடவடிக்கை எடுத்தார்.

மாவட்ட தலைவர் கதிரேசன் தலைமையிலான நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்பட்டனர். கட்சி நிர்வாகத்தை மறுசீரமைபு செய்வதற்காக இந்த நடவடிக்கை…

Read More

2023-24 நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் ஹைலைட்ஸ்

by by Mar 20, 2023 0

சென்னை: 2023-24ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் இன்று (மார்ச் 20) தாக்கல் செய்தார்.

இதில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடியும், உயர்கல்வித்துறைக்கு ரூ.6,967 கோடியும், மருத்துவத்துறைக்கு ரூ.18,661 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

* மொழிப்போர் தியாகி தாளமுத்து நடராஜருக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்

* தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும்

* அம்பேத்கரின் நூல்களை தமிழில் மொழிபெயர்க்க ரூ.5 கோடி மானியம் வழங்கப்படும்

* சங்கமம் கலைவிழா, மேலும் 8 முக்கிய நகரங்களில் விரிவுப்படுத்தப்படும்.

* மாநிலம்…

Read More

பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

by by Feb 26, 2023 0

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு சம்பத் நகரில் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது அவர் பேசியதிலிருந்து :

திராவிட இயக்கத்தின் சொல்லின் செல்வராக திகழ்ந்தவர் ஈ.வி.கே. சம்பத். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வந்ததற்கான சூழல் உங்களுக்கு நன்றாக தெரியும். இங்கு ஈவிகேஎஸ். இளங்கோவனை அதிக வாக்குகள்…

Read More

குடியரசு தின தேநீர் விழாவில் பங்கெடுக்க முதல்வரை அழைத்த கவர்னர்

by by Jan 25, 2023 0

இந்தியா முழுவதும் 74வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் ஜனாதிபதியும், மாநிலங்களில் கவர்னரும் கொடியேற்றுவர்.

தமிழ்நாட்டில் நடைபெறும் குடியரசு தின விழாவில், கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்ற உள்ளார். இதையடுத்து நாளை கவர்னர் மாளிகையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தேநீர் விருந்து நடைபெற உள்ளது….

Read More

சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் டி.ஆர்.பாலு கையில் எடுக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

by by Jan 8, 2023 0

தி.மு.க. பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு, தன்னுடைய வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை தொகுத்து ‘பாதை மாறாப் பயணம்’ என்ற தலைப்பில் சுயசரிதை எழுதி உள்ளார். இந்த புத்தகம் 2 பாகங்களை கொண்டது. முதல் பாகத்தில் கருணாநிதியுடன் இருப்பது போன்றும், 2-ம் பாகத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடன் இருப்பது போன்றும் நூலின் முகப்பு படம் உள்ளது.

‘பாதை மாறாப் பயணம்’ நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது….

Read More

புத்தாண்டு தினத்தில் ஆதரவாளர்களை சந்திக்கிறார் சசிகலா

by by Dec 28, 2022 0

அ.தி.மு.கவை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், விரைவில் அ.தி.மு.கவை தலைமை தாங்க இருப்பதாகவும் சசிகலா தெரிவித்து வருகிறார்.

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் சசிகலாவும் தனது லெட்டர் பேடில் பொதுச்செயலாளர் என்றே குறிப்பிட்டு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். அதே நேரத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் நான்தான். கட்சிக்கு தலைமை தாங்குவதும் நான்தான் என்று செயல்பட்டு வருகிறார்.

இதனால் அ.தி.மு.க.வில் நீடிக்கும் குழப்பம் முடிவுக்கு வராமலேயே உள்ளது. இதுதொடர்பான கேள்விக்கு சமீபத்தில் பதில் அளித்த சசிகலா, “பாராளுமன்ற…

Read More

கல்லூரி மாணவ மாணவியருக்கு காலைச் சிற்றுண்டி – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

by by Nov 16, 2022 0

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கும், காலை சிற்றுண்டி திட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி பழனி தண்டாயுதபாணி சாமி கோவில் கட்டுப்பாட்டின் கீழ் பழனியாண்டவர் கலைகல்லூரி, மகளிர் கல்லூரி, சின்னகலையம்புத்தூர் கல்லூரி, மெட்ரிக் பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இதுதவிர ஒட்டன்சத்திரத்தில் அரசு கல்லூரியும் செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரிகளில்…

Read More

அண்ணாமலையை பாஜக மாநில தலைவர் பதவியிலிருந்து நீக்குக : தமிழ்நாடு முஸ்லிம் லீக்

by by Oct 29, 2022 0

நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை :

கடலூரில் நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய கருத்து குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர். இதனால் கடும் ஆவேசம் அடைந்த அண்ணாமலை, “மரத்து மேல குரங்கு தாவுகிற மாதிரி சுத்தி சுத்தி வரீங்க. ஊர்ல நாய், போய், சாராயம் விற்கிறவன் எல்லாம் கேட்கிறதுக்கு நான் பதில் சொல்லணுமா? நகருங்க” என்று கோபமாக கூறிவிட்டுச் சென்றார்.

பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்லாமல் சென்றதோடு, அவர்களை…

Read More

ஜெ மரணம் – சசிகலா, விஜயபாஸ்கரை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை பரிந்துரை

by by Oct 18, 2022 0

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 22.09.2016 அன்று திடீர் உடல்நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நிலையில் அவர் சிகிச்சை பெறும் புகைப்படங்களோ, முக்கிய தலைவர்கள் யாரும் அவரை பார்த்தது போன்ற புகைப்படங்களோ வெளியாகவில்லை.

அவர் ஆஸ்பத்திரியில் இருந்த போது நலமாக இருக்கிறார். ஜூஸ் குடித்தார். இட்லி சாப்பிட்டார். நடைபயிற்சி செய்தார் என்று தகவல்கள் வெளியிடப்பட்டன. ஆனாலும் அது தொடர்பான புகைப்படங்கள் வெளிவரவில்லை.

இந்த நிலையில் 5.12.2016…

Read More