August 30, 2025
  • August 30, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஆடி 18ல் தேடி இசைக்கும் பூமராங் – ஆடியோவை சோனி வாங்கியது
July 20, 2018

ஆடி 18ல் தேடி இசைக்கும் பூமராங் – ஆடியோவை சோனி வாங்கியது

By 0 1385 Views

‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்பார்கள் பெரியோர். இதையே சினிமா மொழியாக்கி ‘ஆடிப் பட்டம் தேடி இசை’ என்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன்.

அவரே தன் ‘மசாலா பிக்ஸ்’ நிறுவனத்துக்காக தயாரித்து இயக்கும் ‘பூமராங்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டை ஆடி 18 அன்று (03-08-2018) அறிவித்திருக்கிறார். படத்துக்கு இசை அமைத்திருப்பவர் ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ‘ரதன்’.

அதர்வா முரளி கதாநாயகனாக மேகா ஆகாஷ் நாயகியாகும் படத்தில் ஆர்ஜே பாலாஜி, சுஹாசினி மணிரத்னம், உபென் படேல், காமெடி சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

இந்தப்படத்துக்காக அதர்வா புராஸ்தடிக் மேக்கப் என்கிற உத்தியில் ஒப்பனை செய்து மூன்று தோற்றங்களில் நடித்திருக்கிறார்.

படத்தின் ஆடியோ உரிமையை ‘சோனி மியூசிக்’ வாங்கியிருக்கிறது..!

ஆடிப்பெருக்கில் ஒரு இசை வெள்ளத்துக்குத் தயாராவோம்..!

Boomerang-Audio-Launch

Boomerang-Audio-Launch