August 24, 2019
  • August 24, 2019
Breaking News

Tag Archives

ஆர் கண்ணன் அதர்வா இணையும் புதிய படம் தொடங்கியது

by on July 30, 2019 0

‘பாதையைத் தேடாதே… பாதையை உருவாக்கு…’ என்ற வாக்குக்கு ஏற்ப வாய்ப்புகளை தானே உருவாக்கிக்கொண்டு அடுத்தடுத்து பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன். அதர்வாவை வைத்து வெற்றிப்படமான ‘பூமராங்’ கொடுத்துவிட்டு அடுத்த படத்தையும் அவரை வைத்தே இயக்குகிறார். அதர்வா முரளி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிக்கும் புதிய பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நேற்று (29-07-2019) சென்னையில் துவங்கியது. சென்னையில் பல இடங்களில் பதினைந்து நாட்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு, முக்கிய காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கவும் […]

Read More

ஆராய்ச்சி மாணவர் அதர்வாவின் காதல் ஆராய்ச்சி

by on July 2, 2019 0

இன்றைய சினிமாவுலகில் இரு கலைஞர்கள் அடுத்தடுத்து இணைவது என்பது ஆகப் பெரும் அதிசயம். அப்படி இணைவதிலிருந்தே அவர்களின் புரிந்து கொள்ளலை நாம் புரிந்து கொள்ளலாம். அப்படி ‘பூமராங்’ படத்தில் இணைந்து ஒரு சமூக விழிப்புணர்வுப் படத்தைக் கொடுத்த ஆர்.கண்ணனும், நாயகன் அதர்வாவும் அடுத்தும் ஒரு படத்தில் இணைகிறார்கள் என்பதுதான் கோலிவுட்டின் இன்றைய முக்கிய செய்தி. கடந்த படத்தில் முக்கிய சமுதாயப் பிரச்சினையை முன்வைத்த கண்ணன் இப்போது அதர்வாவுடன் கைகோர்த்து இனிய காதல் கதை ஒன்றைச் சொல்லவிருக்கிறார். இது […]

Read More

100 படத்துக்கு திரையரங்குகள் காட்சிகள் அதிகரிப்பு

by on May 15, 2019 0

அதர்வா முரளி – ஹன்சிகா நடித்த ‘100’ பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றிருக்கிறது. நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படத்துக்கு, தற்போது திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரித்துள்ளனவாம்.   இது பற்றி படத்தைத் தயாரித்த ‘ஆரா சினிமாஸ்’ காவியா வேணுகோபால் கூறும்போது,   “எல்லா இடங்களிலும் பார்வையாளர்களிடமிருந்து கிடைக்கும் அபரிமிதமான வரவேற்பைக் கண்டு நாங்கள் முழுமையாக பிரமித்துக் கொண்டிருக்கிறோம். விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் தரப்பிலிருந்து தொலைபேசியில் அழைத்து படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பற்றி சிலாகித்து பேசுகிறார்கள். […]

Read More

பூமராங் திரைப்பட விமர்சனக் கண்ணோட்டம்

by on March 8, 2019 0

பணம் போட்டுப் பணம் எடுக்கும் தொழில்களில் பிரதானமானதும், துரிதமான லாபம் பார்க்கும் தொழிலும் சினிமா மட்டும்தான். அதனால்தான் பல கார்ப்பரேட் கம்பெனிகள் கூட படமெடுக்க முன்வருகின்றன. அப்படி லாபம் பார்க்கக் கூடிய சினிமாவில் தொண்ணூற்றுக்கும் அதிகமான பேர் லாபத்தை மட்டுமே முக்கியமாகக் கொண்டு மக்களுக்கு இதுதான் பிடிக்கும் என்கிற வகையில் அவர்கள் கிறங்கிச் சரிகிற செல்வாக்கு பெற்ற ஒரு ஹீரோ, ஒரு காதல், மூன்று ஃபைட், நான்கு பாடல்கள் என்று ஃபார்முலாவில் படமெடுத்தது போக இன்று டாஸ்மாக்கில் […]

Read More

பூமராங் டிரைலர் பாடல் பார்த்து எக்சலண்ட் சொன்ன ரஜினி-கண்ணன் நெகிழ்ச்சி

by on March 7, 2019 0

நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ள பூமராங் படம் விவசாயத்தின் மேன்மை பற்றியும், எதிர்கால நீர்த் தேவைக்கான நதிநீர் இணைப்பின் அவசியம் பற்றியும் ஆய்வு பூர்வமாகப் பேசுகிறது. இந்த செய்திகள் பத்திரிகைகளில் பரவலான வெளியான நிலையில் நதிநீர் இணைப்பை பல்லாண்டுகளாக வலுயுறுத்தி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் கண்களுக்கும், செவிகளுக்கும் இந்த செய்தி போனது. உடனே ஆர்.கண்ணனை தன் இல்லத்துக்கு அழைத்துப் பாராட்டினார் ரஜினி. இந்த சந்திப்பில் நெகிழ்ந்து போயிருக்கிறார் கண்ணன். அதுபற்றிக் கேட்டபோது அவர் மனம் திறந்தார். “ரஜினி சாரிடமிருந்து […]

Read More

ரஜினி கோடு போட்டார் கண்ணன் ரோடு போட்டார்

by on March 4, 2019 0

பெருகி வரும் தண்ணீர்த் தேவையின் அவசியம் கருதி நதிநீர் இணைப்பின் அவசியம் குறித்து அறிஞர்கள் அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். பல ஆண்டுகள் முன்பே நாட்டின் நதிநீர் இணைப்பை சாத்தியமாக்கினால் அதற்கு நான் முதல் ஆளாக ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என்று அறிவித்தார் ரஜினி. அன்றைய காலகட்டத்துக்கு ஒரு கோடி ரூபாய் ஆகப்பெரிய விஷயம். ஆனால், அதன் தேவை இப்போது பல மடங்காக உயர்ந்து விட்டது ஒருபுறமிருக்க, ரஜினி வாயால் சொன்னதை இப்போது தன் படத்துக்காக செய்து […]

Read More