January 22, 2025
  • January 22, 2025

கொன்றால் பாவம் தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தரும் – சந்தோஷ் பிரதாப்

by on March 6, 2023 0

கன்னட சினிமாவில் பிரபல இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் தயாள் பத்மநாபன் இயக்கியிருக்கும் கொன்றால் பாவம் படம் ஏற்கனவே கன்னடம் மற்றும் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும் நிலையில், தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருப்பதோடு, படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கன்னடம் மற்றும் தெலுங்கு பதிப்புகளை காட்டிலும் தமிழ் பதிப்பை மிக பிரமாண்டமான முறையில் உருவாக்கியுள்ள தயாள் பத்மநாபன், தமிழை தாய் […]

Read More

நான்கு தோற்றங்களில் வெற்றி நடிக்கும் சைக்கோ த்ரில்லர் படம் மெமரீஸ்

by on March 5, 2023 0

Shiju Thameen’s  Film Factory Pvt Ltd வழங்கும், நடிகர் வெற்றி நடிப்பில், இயக்குநர்கள் ஷியாம் மற்றும் ப்ரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மெமரீஸ்” திரைப்படம் ஒரு சைக்கோ திரில்லர் படமாகும். ஒரு புதுமையான களத்தில், மனதை அதிரச்செய்யும் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.   மார்ச் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இப்படத்தில் வெற்றி, நாயகன் பாத்திரத்தில் நடிக்க, பார்வதி அருண் நாயகியாக நடித்துள்ளார். […]

Read More

இன் கார் திரைப்பட விமர்சனம்

by on March 4, 2023 0

அன்றாடம் செய்தித்தாள்களில் யாரோ ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் செய்தி வந்து கொண்டிருக்கிறது.  ஒன்றல்ல… ஜென்டில்மேன்..! இந்தியாவெங்கும் ஒரு நாளில் இப்படி பாலியல் பலாத்காரத்துக்காக 100 பெண்கள் கடத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்கிறது புள்ளி விவரம். ஒவ்வொரு வருடமும் 36 ஆயிரம் பேர். நெஞ்சு அடைகிறதா..? இது ஒரு புறம் இருக்க இன்னொரு பக்கம் கடத்தினார்கள் கற்பழித்தார்கள் என்பதுடன் அந்த செய்தியை நாம் கடந்து விடுகிறோம். ஆனால் பாலியல் பலாத்காரம் நடைபெறுவதற்கு முன் எத்தனை மணி நேரம் […]

Read More

ஜெயம் ரவியை சுற்றியே என் பயணம் – அகிலன் இயக்குனர் கல்யாண்

by on March 4, 2023 0

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், இயக்குநர் N.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் “பூலோகம்” படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, இக்கூட்டணியில் மீண்டும் ஒரு அசத்தலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “அகிலன்”. இப்படத்தை Screen Scene Media Entertainment Pvt Ltd நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. மார்ச் 10 அன்று இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது.  விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது.  தயாரிப்பாளர் சுந்தர் பேசியதாவது… “பத்திரிகை, ஊடக நண்பர்கள் […]

Read More

அயோத்தி திரைப்பட விமர்சனம்

by on March 3, 2023 0

அயோத்தி என்கிற தலைப்பைக் கேட்டதும் “ஏதோ பிரச்சனையைக் கிளப்புறாங்கப்பா..!” என்றுதான் தோன்றியது. ஆனால் படம் பார்த்து முடியும்போது கண்களில் துளிர்த்துக் கிளம்பிய கண்ணீர் அப்படியான எண்ணத்தைத் துடைத்தே இறங்கியது. அயோத்தியில் ஆரம்பிக்கிற கதை. அங்கே மத நம்பிக்கை மற்றும் ஆண் ஆதிக்கத்தில் ஊறிப்போன பல்ராம் (யஷ்பால் சர்மா) தன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். அன்பே உருவான அவரது மனைவி ‘இம்’மென்றால் அடி, ஏனென்றால் ‘இடி’ என்றே ஷர்மாவுடன் வாழ்ந்து வருகிறார். கல்லூரிக்குப் போகக்கூடாது என்கிற அவரது கட்டளையை […]

Read More

சூப்பர் ஸ்டார்களை இயக்குநர்கள்தான் உருவாக்குகிறார்கள்- ஐஸ்வர்யா ராஜேஷ்

by on March 3, 2023 0

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘சொப்பன சுந்தரி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு நடுத்தர சினிமாவையும் ரசிகர்கள் காப்பாற்ற வேண்டும் – இயக்குநர் மோகன் ராஜா வேண்டுகோள் சூப்பர் ஸ்டார்களை இயக்குநர்கள் தான் உருவாக்குகிறார்கள்- ஐஸ்வர்யா ராஜேஷ். ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் , ஹியூ பாக்ஸ் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பாலாஜி சுப்பு மற்றும் விவேக் ரவிச்சந்திரன் ஆகியோர் ,அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை […]

Read More

மேனுவல் கியருடன் மின்சார மோட்டார் சைக்கிள் AERA அறிமுகம்

by on March 3, 2023 0

“AERA” என்று பெயரிடப்பட்டுள்ள மேனுவல் கியருடன் கூடிய தன் முதல் மின்சார மோட்டார்சைக்கிள் மாடல்களை Matter அறிவித்து, மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது. Matter AERA நான்குவித மாடல்களில் கிடைக்கும். இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான முன்பதிவு விலை என்ற அடிப்படையில் AERAவுக்கான முன்பதிவு விலை ரூ. 1.4 இலட்சம் முதல் ரூ.1.54 இலட்சம் வரை இருக்கும், மோட்டார்சைக்கிள் பிரிவில் சமவிலை நிலையை அடைய ஒரு நாடு ஒரே முன்பதிவு விலை என்னும் கொள்கை […]

Read More

அரியவன் திரைப்பட விமர்சனம்

by on March 3, 2023 0

“மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்..!” இதுதான் படத்தின் மையக்கரு. இதை நாம் நன்கறிந்த பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை ஒத்த ஒரு சம்பவத்துடன் சம்ஹாரமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் மித்ரன்.ஆர்.ஜவஹர். கடத்தி வரப்பட்ட ஒரு பெண்ணை சிலர் பாலியல் பலாத்காரம் செய்ய, அதை ஒருவன் வீடியோ எடுப்பதிலிருந்து படம் தொடங்குகிறது. அதற்குப் பின்னால் பெண்களை இப்படி வயப்படுத்தும் ஒரு கும்பலே இயங்கி வருவதும் காட்சிப்படுத்தப்படுகிறது. இதற்கு நேர் எதிர் மறையாக கபடி விளையாட்டு வீரராக நாயகன் இஷான் அறிமுகம் […]

Read More

‘இன் கார்’ பட அனுபவத்தில் இருந்து மீண்டு வர முடியவில்லை – ரித்திகா சிங்

by on February 27, 2023 0

Inbox Pictures சார்பில் அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி தயாரிப்பில், இயக்குநர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில், நடிகை ரித்திகா சிங் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் “இன் கார்”.  கடத்தப்பட்டு வன்புணர்வுக்குள்ளாகும் பெண்ணின் வலியை, அவளது பார்வையில் அந்த கடத்தல் சம்பவத்தின் வழியாகவே சொல்லும் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தி மொழியில் உருவாகியுள்ள இப்படம்  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வெளியாகிறது. தமிழில் Studio Green சார்பில் KE ஞானவேல் ராஜா இப்படத்தை வழங்குகிறார். மார்ச் […]

Read More

தக்ஸ் திரைப்பட விமர்சனம்

by on February 27, 2023 0

சிறைப்பட்ட கைதிகள் அங்கிருந்து தப்பிக்கும் கதைகள் ஹாலிவுட்டில் நிறைய வந்திருக்கின்றன. தமிழிலும் சில படங்கள் இப்படி வந்திருக்கின்றன. அப்படி மலையாளத்தில ஐந்து வருடங்களுக்கு முன் வெளியான படத்தின் தழுவலான கதை அமைப்பைக் கொண்டு இந்த படத்தை இயக்கியிருக்கிறார் நடன இயக்குனராக நாம் அறிந்த பிருந்தா. இந்தப் படத்தில் சிறப்பம்சமே பிரபல விநியோகஸ்ரும் தயாரிப்பாளருமான ஷிபு தமீன்ஸ் மகனான ஹிருது ஹாரூன் இதில் கதாநாயகனாக அறிமுகமாகி இருப்பதுதான். எனவே அவரது வயதுக்கும் ஆற்றலுக்கும் தோதாக இப்படி ஒரு கதையை […]

Read More
CLOSE
CLOSE