January 30, 2026
  • January 30, 2026

மழையில் நனைகிறேன் திரைப்படம் விமர்சனம்

by on December 27, 2024 0

கவித்துவமான தலைப்பை பார்த்த உடனேயே இது காதல் கதை தான் என்பது தெரிந்து விடும். அதனால் இதுவரை பார்த்த அத்தனை காதல் படங்களின் பாதிப்புகளும் இந்த படத்தில் இருப்பதை இயக்குனர் டி. சுரேஷ்குமாரால் தவிர்க்க முடியவில்லை.  நாயகன் அன்சன் பால் ஒரு கோடீஸ்வரர் வீட்டுப் பிள்ளை. அதற்குரிய இலக்கணங்களோடு(!) அப்பாவின் தொழிலையும் கவனிக்காமல், கல்லூரிப் படிப்பையும் முடிக்காமல் நண்பர்களுடன் சுற்றித் திரிகிறார்.  ஒரு சுபயோக சுப தினத்தில் மழையில் நனையும் நாயகி ரெபா மோனிகா ஜானைப் பார்த்த […]

Read More

அலங்கு திரைப்பட விமர்சனம்

by on December 25, 2024 0

மன்னர்கள் காலத்திலிருந்து விண்வெளி சென்றது வரை நாய்களுக்கு இந்தப் பூவுலகில் தனி இடம் உண்டு. மனிதர்களுக்கு நாய்கள் உதவுவது காலம் காலமாக நடைபெறும் நிகழ்வு என்று இருக்க, இந்தப் படத்தில் அதற்கு மாற்றாக ஒரு நாயின் நல்வாழ்வுக்கு சில மனிதர்கள் எவ்வாறு உதவுகிறார்கள் என்று சொல்கிறார் இயக்குனர் எஸ்.பி.சக்திவேல். தமிழக கேரள எல்லைப் பகுதியில் உள்ள மலை கிராமத்தில் நடக்கிறது கதை. அங்குள்ள பழங்குடிகளில் பலர் மலையை விட்டுக் கீழே இறங்கி நடைமுறை வாழ்க்கைக்கு வந்து விட்டாலும் […]

Read More

Ui திரைப்பட விமர்சனம்

by on December 24, 2024 0

கன்னடத் திரை உலகில் பல புதுமைகளைப் படைத்து வரும் உபேந்திரா நடித்து இயக்கி இருக்கும் படம். சினிமா ஆக்கத்தில் வணிகரீதியான படம், கலை ரீதியான படம் என்று வகைகள் உண்டு. ஆனால் இந்தப் படம் அவற்றில் இருந்தும் மாறுபட்டு அப்ஸ்ட்ராக்ட் என்று சொல்லப்படும் நவீன ஓவிய பாணியில் படைக்கப்பட்டிருக்கிறது.  நேரடியாக வெகு மக்களின் பார்வைக்கு ஒரு கதை தெரியும். அதை அறிவார்ந்து பார்க்கும் போது இன்னொரு கதை புரியும். அந்த வகையில் இரண்டு கோணங்களில் இந்தப் படம் […]

Read More

விடுதலை பாகம் 2 திரைப்பட விமர்சனம்

by on December 24, 2024 0

விடுதலை படத்தின் முதல் பாகம் தந்த வெற்றியும் வரவேற்பும், இந்த இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பை அதிகமாக்கியது.  கடந்த படத்துக்கும் இந்தப் படத்துக்கும் இனிய முரண் என்னவென்றால் அதில் சூரி அதிக திரை நேரத்தை எடுத்துக் கொண்டிருந்தார் – விஜய் சேதுபதி ஒரு விருந்தினர் வேடத்தில்  வந்திருந்தார்.  ஆனால் இதில் அப்படியே தலைகீழாக ஆகிப் போய் விஜய் சேதுபதியே அதிக திரை நேரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்தக் கதையை ஆரம்பித்தவர் சூரி என்பதால் அவரை வைத்துப் படத்தை […]

Read More

நான் இயக்குனரானது அதுவாகவே நடந்தது..! – மோகன்லால்

by on December 23, 2024 0

மோகன்லாலின் ” பரோஸ்” திரைப்பட முன் வெளியீட்டு நிகழ்ச்சி !! Aashirvad Cinemas சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான ” பரோஸ்”, திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரவிஸ் டாக்டர்.பி.ரவி பிள்ளை வழங்கும் இப்படத்தை வழங்குகிறார். இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது., […]

Read More

மிஆ பை தனிஷ்க்கின் ரன்வே ஸ்டார் நிகழ்வு மற்றும் நான்கு புதிய விற்பனை நிலையங்கள் அறிமுகம்

by on December 23, 2024 0

மிஆ பை தனிஷ்க், சென்னை வாடிக்கையாளர்களுக்காக அசத்தல் ஸ்டைலுடன் ரன்வே ஸ்டார் நிகழ்ச்சியையும், 4 புதிய விற்பனை நிலையங்களின் தொடக்கத்தையும் கொண்டாடுகிறது! சென்னை, இந்தியாவின் முன்னணி உயர்தர ஜூவல்லரி பிராண்டுகளில் ஒன்றான மிஆ பை தனிஷ்க், சமீபத்தில் சென்னையில் மிக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தனது தனித்துவமான ரன்வே ஸ்டார் நிகழ்வை [Runway Star Event] வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது. பிரத்தியேக மாலை நேரமானது விசுவாசமிக்க மிஆ வாடிக்கையாளர்களை ஒன்றிணைத்ததோடு, இம்மாநகரத்தின் உற்சாகமிக்க வாடிக்கையாளர்கள் மீது மிஆ கொண்டிருக்கும் அக்கறையையும், […]

Read More

தென் சென்னை திரைப்பட விமர்சனம்

by on December 20, 2024 0

சமீபகாலமாக வட சென்னைக் கதைகள் கோலிவுட்டை முழுக்க ஆக்கிரமித்து இருக்கின்றன. இந்நிலையில் அதற்குப் போட்டியாக தென்சென்னை என்ற இந்தப் படத்தைத் தயாரித்து, இயக்கி, நடித்து வெளியிட்டு இருக்கிறார் ரங்கா. வடசென்னைக் கதைகள் என்றாலே கால்பந்தாட்டம், குத்துச்சண்டை, ரவுடியிசம் என்று இருக்க தென் சென்னைக்கு எதை அடையாளமாக வைத்திருக்கிறார் ரங்கா என்று பார்த்தால் உணவகம் ஒன்றே மையப்படுத்தி இருக்கிறார்.  கதை இதுதான். ரங்காவுக்கு நேவியில் பணியாறற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அப்பா தொடங்கிய உணவகத்தை நடத்தும் […]

Read More

பாலா 25 – வணங்கான் இசை வெளியீடு – கோலாகலமான இருபெரும் விழா

by on December 19, 2024 0

25வது ஆண்டு திரையுலக பயணத்தில் இயக்குநர் பாலா ; விழா எடுத்து கொண்டாடிய தமிழ் திரையுலகம்* 1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா. தற்போது அவர் இயக்கி அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள வணங்கான் இசை வெளியீடும், சினிமாவில் பாலாவின் 25 ஆண்டுகளைக் கொண்டாடும் விழாவும் சென்னை வர்த்தக மையத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், […]

Read More

விலங்குகள் மீதான போரை நிறுத்தும் வரை நமக்குள் அமைதி இருக்காது – மேனகா சஞ்சய் காந்தி

by on December 19, 2024 0

ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூரன்’. இத் திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரன் ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார்.   கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி […]

Read More

திரு மாணிக்கம் படம் ஊர் கூடிய இழுத்த தேர் – இயக்குனர் நந்தா பெரியசாமி

by on December 18, 2024 0

நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் பட விழா..! இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரகனி நடிப்பில் “எளிய மனிதர்களின் வாழ்வே அறம்” என்ற அடிப்படையில் பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள “திரு.மாணிக்கம்” திரைப்படம் வெள்ளித்திரையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் டிசம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டு விழா, திரையுலக முன்னணி பிரபலங்களுடன், படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்… நடிகர் சாம்ஸ் பேசியதாவது… இம்மாதிரி […]

Read More
CLOSE
CLOSE