January 19, 2025
  • January 19, 2025

சல்லியர்கள் ஒரு படமல்ல… ஆவணம்..! – சீமான்

by on December 26, 2023 0

ICW நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் டைரக்சனில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது. சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லனாக களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். இன்னும் பல புதுமுகங்களும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ள இந்த படத்திற்கு கருணாஸ் மகன் […]

Read More

60 சதவீத சம்பளத்துக்கு இசையமைத்த இளையராஜா – வட்டார வழக்கு சம்பவம்

by on December 25, 2023 0

‘வட்டார வழக்கு’ பத்திரிகையாளர்கள் சந்திப்பு! மதுரா டாக்கீஸ், ஆஞ்சநேயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் வழங்கும், இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கத்தில், நடிகர்கள் சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி நடிப்பில் டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி வெளியாகும் திரைப்படம் ‘வட்டார வழக்கு’. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்தி வேலன் பேசியதாவது, “‘மாமன்னன்’ படத்தில் அமைந்தது போல ஒரு கதாபாத்திரம் தான் ரவீனாவுக்கு இந்தப் படத்தில். மிக நேர்த்தியாக […]

Read More

முதல் பாகத்தைவிட பத்து மடங்கு சிறப்பாக வந்துள்ளது டிமான்டி காலனி 2 – பாபி பாலசந்திரன்

by on December 24, 2023 0

தமிழ் திரையுலகில் அழுத்தமாக தடம் பதிக்கும் பாபி பாலச்சந்திரனின் ‘பி டி ஜி யுனிவர்சல்’ உலகளாவிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாபி பாலச்சந்திரன்- இவர் நிறுவனங்கள் தங்கள் தரவு தனி உரிமை, இணக்கப்பாடு மற்றும் உலகம் முழுவதும் உள்ள வழக்கு அபாயங்களை நிவர்த்தி செய்ய உதவும் தீர்வுகளை உருவாக்குவதில் மிகவும் பிரபலமானவர். இவர் தற்போது BTG யுனிவர்சல் எனும் பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். பி டி ஜி யுனிவர்சல் நிறுவனத்தின் முதல் […]

Read More

சபா நாயகன் திரைப்பட விமர்சனம்

by on December 23, 2023 0

திரும்பிய பக்கம் எல்லாம் காதல் சிதறும் படம். நாயகன் அசோக் செல்வனுக்கு இந்தப் படத்தில் அத்தனை காதல்கள் வருகின்றன. எது உண்மை, எது எல்லாம் பொய் என்று தெரியாத அளவுக்கு இனிமையாக இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் சி.எஸ். கார்த்திகேயன். ஆனால் திரைக்கதை இவ்வளவு எளிதானதாக இல்லை. கோயம்புத்தூரைச் சுற்றி நடக்கும் கதையில் ஒரு இரவில் போதையில் வரும் அசோக் செல்வனை ரோந்து வரும் இன்ஸ்பெக்டர் மைக்கேல் தங்கதுரை தன் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் செல்கிறார். போகும் […]

Read More

ஜிகிரி தோஸ்த் திரைப்பட விமர்சனம்

by on December 23, 2023 0

நட்பைப் போற்றும் கதை. ஆனால் நாசூக்காகப் போற்றி இருக்கிறார்கள். ஷாரிக் ஹாசன், அரண், ஆஷிக் மூவரும் இணைபிரியாத நண்பர்கள். எந்த அளவுக்கு என்றால் ஷாரிக்கின் காதலி அம்மு அபிராமி, இனிமேல் அவர் நண்பர்களை சந்திக்கவே கூடாதென்று சத்தியம் வாங்க, அடுத்த நொடியே ஆஷிக்கிடமிருந்து போன் வர, ‘எஸ்’ ஆகிறார் ஷாரிக் – அந்த அளவுக்கு மலர்ந்த நட்பூ..! நண்பர்களில் அரண் கொஞ்சம் படிப்பாளி பிளஸ் புத்திசாலி. அவர் டெரெரிஸ்ட் ட்ரேக்கர் என்ற கருவியைக் கண்டு பிடிக்கிறார். அதை […]

Read More

சலார் 1- சீஸ்ஃபயர் திரைப்பட விமர்சனம்

by on December 23, 2023 0

நடக்காத ஒன்றை நடந்ததாக நம்ப வைப்பதுதான் சினிமா. ஆனால் இயக்குனர் பிரசாந்த் நீல், இல்லாத ஒரு தேசத்தையும், இல்லாத மனிதர்களையும் இருப்பதாகக் காட்டுவதில் பலே கில்லாடி.  அப்படித்தான் கேஜிஎப்- இல் இந்தியாவையே மிரட்டி தன் கைக்குள் வைத்திருக்கும் கொடூர வில்லன்களைக் காட்டினார்.  இந்தப் படத்தில் அதேபோல் இந்தியாவுக்கு பக்கத்தில் இருந்த கான்சார் என்ற தேசத்தை காட்டுகிறார். அதில் இருக்கும் மூன்று பிரிவுகள் இந்தியாவையே கைக்குள் வைக்கக்கூடிய அளவுக்கு சக்தி பெற்றவையாம். அங்கு நடக்கிற அரசியல் சூழ்ச்சிகள் இந்தியாவுக்குள் […]

Read More

ஆயிரம் பொற்காசுகள் திரைப்பட விமர்சனம்

by on December 22, 2023 0

வீட்டின் அருகே குழி தோண்டும் போது திடீரென்று அதில் பொற்காசுகள் நிறைந்த புதையல் கிடைத்தால் எப்படி இருக்கும்..? படத்தின் கதை அதுதான் – படமும் அப்படியேதான்..! ஏதோ ஒரு மீடியம் பட்ஜெட் படம் என்றுதான் பார்க்க உட்காருகிறோம். ஆனால் அதில் தங்கப் புதையலாய் அடுத்தடுத்து நகைச்சுவை வெடிகள் வெடிக்க ஆரம்பிக்கும் போது நம்மையும் அறியாமல் படத்துக்குள் லயிக்க ஆரம்பத்து விடுகிறோம்..! அதுவும் காமெடி என்றால் அச்சு பிச்சு காமெடி எல்லாம் இல்லை. நியாயமான… இதுவரை படங்களில் அதிகம் […]

Read More

டங்கி திரைப்பட விமர்சனம்

by on December 21, 2023 0

இந்தி(ய) சினிமாவின் முன்னணி வெற்றிப்பட இயக்குனராக இருக்கும் ராஜ்குமார் ஹிரானியும், முன்னணி நடிகரான ஷாருக் கானும் கைகோர்த்து இருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளான படம் இது. அந்த எதிர்பார்ப்பை படம் நிறைவேற்றி இருக்கிறதா பார்ப்போம்..! “கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதையாக…” என்பார்கள். அப்படி உள்ளூரில் சம்பாதிக்க வழி இல்லாமல் இருக்கும் பஞ்சாபைச் சேர்ந்த லல்டு கிராமத்தில் இருக்கு மூன்று நண்பர்கள், ஒரு நண்பி நால்வரும் இங்கிலாந்து செல்லத் திட்டமிடுகின்றனர்.  […]

Read More

நெய்தல் நிலப் பின்னணியில் காதலையும் பாசத்தையும் பேசும் ‘கும்பாரி..!’

by on December 20, 2023 0

ராயல் என்டர்பிரைசஸ் சார்பில் குமாரதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கும்பாரி’. இளைஞர்களின் நட்பு மற்றும் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை கெவின் ஜோசப் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் விஷ்வா, நலீப் ஜியா , மஹானா சஞ்சீவி , ஜான்விஜய், பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், மதுமிதா, செந்தி குமாரி ,காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக பிரசாத் ஆறுமுகம், இசை அமைப்பாளர்களாக ஜெயபிரகாஷ், ஜெய்சன் பிரித்திவி ஆகியோர், படத்தொகுப்பாளராக டி.எஸ்.ஜெய், […]

Read More

டயாபெட்டிஸ் ஆன் வீல்ஸ்: காவேரி மருத்துவமனை தொடங்கும் நீரிழிவு விழிப்புணர்வு திட்டம்

by on December 19, 2023 0

டயாபெட்டிஸ் ஆன் வீல்ஸ்: காவேரி மருத்துவமனை. ஆழ்வார்பேட்டை தொடங்கும் நீரிழிவு விழிப்புணர்வு திட்டம் மக்கள் மத்தியில் நீரிழிவு தடுப்பு மற்றும் நீரழிவு மேலாண்மை மீது விழிப்புணர்வை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்… பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப. டயாபெட்டிஸ் ஆன் வீல்ஸ் என்ற நடமாடும் விழிப்புணர்வு வாகன திட்டத்தை தொடங்கி வைத்தார் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலுள்ள 100 அமைவிடங்களில் 100 நாட்களுக்கு, சிறப்பு சாதனங்கள் பொருத்தப்பட்ட இவ்வாகனம் பயணித்து விழிப்புணர்வை […]

Read More
CLOSE
CLOSE