October 11, 2026
  • October 11, 2026

நேர் கொண்ட பார்வை திரைப்பட விமர்சனம்

by on August 8, 2019 0

இந்தப்படம் காலத்தின் கட்டாயம் எனலாம். காலம் காலமாக தமிழ் சினிமாவில் பெண்ணுரிமைக்குக் குரல்கொடுக்கும் படங்கள் பல வந்துள்ளன. அதில் இது தனித்துவம் வாய்ந்தது என்பதற்கு முதன்மையான காரணம் இந்த படச் செய்தி இன்றைய நவநாகரிக உலகத்துப் பெண்களின் உரிமை பேசுகிறது. பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும். அவள் இன்ன உடை உடுத்த வேண்டும். பொது இடங்களில் இப்படி நடந்து கொள்ள வேண்டும். இரவில் வெளியே சுற்றாமல் வீட்டுக்கு வந்துவிட வேண்டும். அவளுக்கென்று உடற்கூறுகள் இருக்கின்றன. அதனால் […]

Read More

விஜய் சேதுபதி எடுத்த விவேகமான முடிவு?!

by on August 8, 2019 0

சில தினங்களுக்கு முன்பு டார் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையைப் பல மொழிகளில் படமாக எடுக்கவிருப்பதாகவும், அதில் முரளிதரனின் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வந்தன. விஜய்சேதுபதி தன் வேடத்தில் நடிப்பது குறித்து முத்தையா முரளிதரன் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து உலகத் தமிழர்கள் முதல் உள்ளூர்த் தமிழர்கள் பலரும் விஜய் சேதுபதியின் இந்த முடிவு குறித்து அதிருப்தி தெரிவித்தனர். காரணம் முரளிதரன் தமிழராக இருந்த […]

Read More

மாநாடு படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டார்

by on August 8, 2019 0

‘மாநாடு’ படம் அறிவிக்கப்பட்ட போதே அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் பத்திரிகையாளர்கள் உள்பட பலரும் எச்சரித்தார்கள்- அது தவறான முடிவு என்று. ஆனால், சிம்பு மீது அவர் வைத்த அன்பினாலும், நம்பிக்கையாலும் அது கண்டிப்பாக நடைபெறும் என்ற உறுதியுடன் இருந்தார்.   ஆனால், காலமும், சிம்புவும் தன் கடமையைச் சரிவரச் செய்ய (!), இப்போது தன் தவற்றை உணர்ந்த சுரேஷ் காமாட்சி தன் மாநாடு படத்திலிருந்து சிம்பு நீக்கப்படுவதாக அறிவித்திருக்கிறார். ஆனால், ‘மாநாடு’ படத்தை அவர் கைவிடவில்லை. […]

Read More

மறைந்த சுஷ்மா சுவராஜ் பற்றிய சில குறிப்புகள்

by on August 7, 2019 0

பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் இந்திய வெளியுறவுத்துறை மந்திரியாகவும் திகழ்ந்தவர் சுஷ்மா சுவராஜ். கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிக்கிச்சை செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு சிகிச்சை பலனின்றி தன் 67வது வயதில் சுஷ்மா சுவராஜ் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சுஷ்மா மறைவின் […]

Read More

அறிவுத் திருட்டுக்கு துணை போகலாமா டி.ராஜேந்தர்?

by on August 7, 2019 0

அறிமுக இயக்குனர் சதீஷ் கர்ணா என்பவரது இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்க உருவாகியுள்ள படம் ‘டைம் இல்ல’. இந்தப் படத்தை தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்தவர் மனோ பார்தீபன். சதீஷ் கர்ணாவும் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து சென்சார் ஆன பிறகு இப்படத்தை இயக்கிய சதீஷ் கர்ணாவை இப்படத்தில் இருந்து தூக்கிவிட்டு, தயாரிப்பாளர் மனோ பார்த்திபன் தானே இயக்குனர் என்றும் பெயர் போட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. மேலும், இப்படத்தில் சதீஷ் கர்ணா நடித்த காட்சிகளையும் நீக்கி […]

Read More

கார்த்தி 19 இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கியது

by on August 6, 2019 0

நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திண்டுக்கலில் 5.8.19 அன்று துவங்கியது . ‘கார்த்தி19’ என்கிற இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. படங்களின் எண்ணிக்கையில் கவனம் செலுத்தாமல், படங்களின் தரத்தில் கவனம் செலுத்தி தன் ஒவ்வொரு படத்தையும் மிகவும் கவனத்துடன் தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் கார்த்தி. கொம்பன், தோழா, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டிச் சிங்கம் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி வரும் நடிகர் கார்த்தி முற்றிலும் புதுமையான […]

Read More

காஜல் நடித்த படத்துக்கு கன்னா பின்னா வெட்டு

by on August 6, 2019 0

இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘குயின்’ திரைப்படத்தை, மீடியண்ட் பிலிம் சார்பாக தயாரிப்பாளர் மனுகுமரன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறார். தமிழில் காஜல் அகர்வால் நடிப்பில் ‘பாரீஸ் பாரீஸ்’ எனவும், தெலுங்கில் தமன்னா நடிப்பில் ‘தட்ஸ் மகாலட்சுமி’ எனவும், கன்னடத்தில் ‘பருல் யாதவ்’ நடிப்பில் ‘பட்டர்ஃபிளை’ எனவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகன் நடிப்பில் ‘ஜாம் ஜாம்’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது. கன்னடத்திலும், மலையாளத்திலும் சென்சார் கிடைத்த நிலையில் […]

Read More
CLOSE
CLOSE