‘பயில்வான்’ திரைப்படம் செப்டம்பர் 12 ந்தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அதனையொட்டி நாடெங்கிலும் உள்ள பிரபல நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் தங்கள் அன்பை படத்தின் டிரெய்லர், டீசர், ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு படத்தின் நாயகன் கிச்சா சுதீப் மற்றும் படக்குழுவை வாழ்த்தி வருகிறார்கள்.
பாலிவவுட்டின் பேரரசன் சல்மான் கான், கிச்சா சுதீப்பின் பயில்வான் படத்தை தன் தனித்தன்மை கொண்ட பிரத்யேக வழியில் விளம்பரப்படுத்தியுள்ளார். அவர் பயில்வான் படத்தின் பாக்ஸர் கதாப்பாத்திர லுக்கை தன் முந்தைய படமான சுல்தானில் கொடுத்த போஸைத் தந்து ‘பயில்வானை’ பிரபலப் படுத்தியுள்ளார்.
Kicha Sudeep, Salman Khan
சல்மான் கானுடன் ‘தபாங் 3’ படத்தில் திரையில் இணைந்து நடித்து வரும் கிச்சா சுதீப் இது பற்றி கூறியபோது…
“சல்மான் கானின் இந்த நட்புரீதியிலான, தன்னலமற்ற அன்பு விலைமதிப்பற்றது. அவர் தன்னுடைய பிரத்யேக வழியில் ‘பயில்வான்’ படத்தை பிரபலபடுத்தியது எங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை தந்துள்ளது..!” என்றார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் இப்படம் உலகம் முழுவதும் வருகிற செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி வெளியாக உள்ளது. சுதீப் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை கிருஷ்ணா இயக்கியுள்ளார். ‘ஹெபுல்லி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சுதீப் மற்றும் இயக்குனர் கிருஷ்ணா இருவரும் இணையும் இரண்டாவது படம் இந்த ‘பயில்வான்’.