November 11, 2025
  • November 11, 2025
Breaking News
August 28, 2019

பப்பி தயாரிப்பாளருக்கு நித்தியானந்தா நோட்டீஸ்

By 0 953 Views
ஐசரி கணேஷ் தயாரிப்பில் ‘முரட்டு சிங்கிள்’ இயக்க, யோகி பாபு, வருண் நடிக்க தயாராகும் ‘பப்பி’. இதன் போஸ்டர் ஒன்றை ஆகஸ்ட் 15-ல் ஆர்.ஜே. பாலாஜியை வைத்து வெளியிட்டார்கள். அந்தப் போஸ்டரில் ஒரு பக்கம் நித்தியானந்தாவும், இன்னொரு பக்கம் நீலப்பட நாயகன் ‘ஜானி சிம்ஸி’ன் படமும் இடம் பெற்றிருந்தது. 
 
அந்தப்படம் குறித்த போஸ்டருக்கு நித்தியானந்தாவின் லீகல் டீம்  தன் கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறது.
 
ஏற்கனவே இந்தப் போஸ்டர் தொடர்பாக படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு  கட்சி சார்பில் புகார் தெரிவிக்கப் பட்டிருந்தது.
 
 இந்நிலையில் நித்தியானந்தா சார்பில் லீகல் நோட்டீஸ் பப்பி டீமுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் உலகப் புகழ் பெற்ற ஆன்மீகவாதியுடன் ஒரு போர்ன் ஸ்டாரை சேர்த்து சீஃப் பப்ப்ளிசிட்டி செய்தது பார்வையாளர்களைக் கூட்ட வேண்டுமென்பதற்காகவே என்பது தெளிவாகவே தெரிகிறது.,
 
அதை உடனே நீக்கவில்லையென்றால் தொடர்ந்து சட்டரீதியான நட்வடிக்கையை மேற்கொள்வோம் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
 
பப்பி த்யாரிப்பாளர் ஐசரி கணேஷைப் பொறுத்தவரையில் அடுத்தடுத்து இதுபோன்ற சர்ச்சைகளைச் சந்தித்து நஷ்ட இட்டு வழங்கி வருகிறார். இதற்கு என்ன செய்வார் பார்போம்..!