May 20, 2024
  • May 20, 2024

குமாரசாமி பதவி ஏற்பில் கலந்து கொள்ளும் அர்விந்த் கெஜ்ரிவால்

by on May 21, 2018 0

கர்நாடகாவில் வரும் 23-ந்தேதி புதனன்று மாநில முதல்- மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்க உள்ளது தெரிந்த விஷயம். இந்த பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாது ஒத்த கருத்துடைய கட்சி தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே கர்நாடக சட்டசபையில் எடியூரப்பா தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணியின் ஆட்சி அமைய உள்ளது. ஆட்சியமைக்க உரிமை கோரி மதசார்பற்ற […]

Read More

ரஜினி முதல்வரானால் நீட் முதல் நியூட்ரினோ வரை தீர்வு – தமிழருவி மணியன்

by on May 20, 2018 0

காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் ரஜினியின் அரசியல் வாழ்வில் முக்கிய பங்காற்றுவது தெரிந்த விஷயம்தான். அரசியல் கட்சி தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளில் ரஜினி மக்கள் மன்றத்தினரைக் கூட்டி ஆலோசனைகளை ரஜினி மேற்கொண்டிருக்க,  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடந்த ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் தமிழருவி மணியன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது… “ரஜினி எனது சகோதரர். அவரை நான் கைவிட்டாலும், தமிழ்நாடு கை விடாது, தமிழக மக்கள், கோட்டையில் முதல்வர் பதவியில் ரஜினியை அமர்த்துவதற்குத் தயாராகி […]

Read More

காவிரியின் அதிகாரம் கர்நாடகாவிடம் இருப்பது நல்லதல்ல – ரஜினி

by on May 20, 2018 0

இன்று ரஜினி மக்கள் மன்ற பெண் நிர்வாகிகளிடம் போயஸ் கார்டனிலுள்ள தன் இல்லத்தில் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சொன்ன பதில்களின் சாரம்… பெண்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு வெற்றி நிச்சயம். பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்த நாடுகள் முன்னேறி இருக்கின்றன. ரஜினி மக்கள் மன்றத்திலும், கட்சியிலும் பெண்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும். 150 தொகுதிகளில் எங்களுக்கு செல்வாக்கு இருப்பதாக வெளியான செய்தி உண்மையாக இருந்தால் மகிழ்ச்சியே. கர்நாடகாவில் ஜனநாயகம் வென்றுள்ளது.எடியூரப்பா பெரும்பான்மையை […]

Read More

செயல் விமர்சனம்

by on May 19, 2018 0

‘வட சென்னை’யில் ஒரு ஆக்‌ஷன் கதை என்றால் உங்களுக்குள் குப்பையும், கூளமும் அடிதடி வெட்டுக் குத்துமான ஒரு கதை ஓடுகிறதா..? ஆனால், இந்தப்படம் பார்த்தால் நீங்கள் நினைக்கும் எந்த வழக்கமான அம்சமும் அதில் இருக்காது. அத்துடன் வட சென்னை ஏரியாவை வைத்து இத்தனை டீசண்டான ஒரு ஆக்‌ஷன் கதையை எந்த இயக்குநரும் கொடுக்கவில்லை என்றே தோன்றுகிறது. அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் இயக்குநர் ரவி அப்புலு. (விஜய்யின் ஷாஜகான் இயக்குநர் இவர்தான்… நினைவிருக்கிறதா..?) இந்தப் படத்தில் இவர் புதுமுக […]

Read More

கொட்டாச்சி மகளும் நடிக்க வந்தாச்சி..!

by on May 19, 2018 0

நேரெதிர் எண்ணம் கொண்ட கணவன் – மனைவி மற்றும் அவர்களது செல்ல மகள் இவர்களைச் சுற்றி நடக்கும் எதிர்பாராத சம்பவங்களின் தொகுப்பில் ‘கண்மணி பாப்பா’ என்ற படம் வளர்ந்து வருகிறது. வனஷாக்‌ஷி கிரியேஷன்ஸ் சார்பில் ராஜேந்திர பிரசாத் தயாரிக்கிறார். முழுக்க முழுக்க ஒரு குழந்தையைச் சுற்றி பின்னப்பட்ட திரைக்கதையில் திகிலான திருப்பங்கள் நிறைந்த ஹாரர் திரில்லர் படமாக தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீமணி. படம் பற்றி அவர் வாயால் கேட்போம். “கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருக்கும் கதாநாயகனுக்கு எந்த […]

Read More

மத்திய அரசின் வரைவு செயல் திட்டம் ஒரு ஏமாற்று வேலை – வைகோ

by on May 19, 2018 0

மத்திய அரசு மே 14-ந் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வரைவு செயல் திட்டம் பற்றி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பது – காவிரி நீர் மேலாண்மைச் செயல்திட்டம் 2018 என்ற பெயரில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மே 14-ந் தேதி ஒரு வரைவு செயல் திட்டத்தைத் தாக்கல் செய்தது. காவிரி தொடர்பான அனைத்து அதிகாரமும் ஆணையத்திற்கு மட்டுமே இருக்கும் வகையில், வரைவு செயல்திட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று […]

Read More

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் டாக்சி கட்டணம் உயரும் அபாயம்

by on May 19, 2018 0

தினமும் விலை ஏறிக் கொண்டிருந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த கர்நாடக சட்டசபைத் தேர்தல் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அது மத்தியில் ஆளும் பா.ஜனதாவின் மாநில வெற்றி வாய்ப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதி எண்ணெய் நிறுவனங்கள் விலை உயர்வை நிறுத்தி வைத்திருந்ததாக குற்றம் கூறப்பட்டது. இந்நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்தபிறகு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் உயர்த்தி வருகின்றன. கடந்த 6 நாட்களில் […]

Read More

காளி விமர்சனம்

by on May 19, 2018 0

வெற்றியைச் சென்றடையும் பாதைகளில் ஆளுக்கொரு ஃபார்முலா இருக்கிறது. இதில் விஜய் ஆண்டனியின் ஃபார்முலா, ‘அட’ தலைப்பு + அனைவரும் ரசிக்க முடிகிற எளிதான லைன் + அம்மா சென்டிமென்ட் + தொய்வில்லாத படத் தொகுப்பு என்பதாக இருக்கிறது. இந்தப் படத்தில் இவற்றுடன் ‘ஆட் ஆன் பேக்’காக காதலும், ஆக்‌ஷனும் சேர்ந்து கொண்டிருக்கின்றன..! அமெரிக்காவில் மருத்துவராக இருக்கும் விஜய் ஆண்டனியின் அம்மாவுக்கு திடீரென்று சிறுநீரகம் பழுதுபட, பாசக்காரப் பிள்ளைக்குத் தாங்குமா..? தன் சிறுநீரகத்தைத் தர முன்வருகிறார். ஆனால்… அவரது […]

Read More

பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்

by on May 15, 2018 0

பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் சென்னையில் இன்று உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார். அவரது வயது 71. தமிழ் எழுத்துலகில் தனக்கென ஒரு பெரும் வாசகர் வட்டத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்த பாலகுமாரன் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200க்கும் மேற்பட்ட நாவல்களையும் எழுதியவர். தவிர, சினிமாவுலகிலும் புகழ்பெற்றிருந்த அவர் கமல்ஹாசன் நடித்த நாயகன் உள்பட 20-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி, இலக்கிய சிந்தனை உள்ளிட்ட இலக்கியத்துறை சார்ந்த பல்வேறு விருதுகளை பெற்றுள்ள பாலகுமாரன், […]

Read More
CLOSE
CLOSE