சேலம் மாவட்டம் வனவாசி அரசு பல்வகை தொழில் நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெறும் 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்தில் பயன்பெறும் ஏரிகளை புனரமைத்து மேம்படுத்தும் பணிகள் மற்றும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, வனவாசி அரசு பலவகை தொழில் நுட்ப கல்லூரி விடுதி கட்டிடங்கள் மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். விழாவில் பல்வேறு […]
Read Moreஅனைத்து காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர்களுடன் தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் காவலர்கள் பணியாற்றும் நேரம், விடுப்பு முறை மற்றும் பணி நாள் குறித்து பல்வேறு அம்சங்கள் ஆலோசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மற்ற மாவட்ட பணி விதிகள்படி வாரத்தில் 6 நாள் வேலை பார்த்தால், ஒரு நாள் விடுப்பு வழங்க, தமிழக காவல்துறை திட்டமிட்டுள்ளது. குறிப்பாக கொரோனா காரணமாகவும், உடல்நிலை சரியில்லாமலும், மன […]
Read Moreசமீபமாக நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து வரும் கதைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற தொடங்கிவிட்டன. நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை, திரைக்கதை என்னும் மாலையாக அழகாகக் கோர்த்துப் பல இயக்குநர்கள் கதைகளைச் சொல்லும் விதம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இணைகிறார் அறிமுக இயக்குநர் வெற்றி துரைசாமி. பல சம்பவங்கள் நாளிதழில் சிறு செய்தியாக வந்திருக்கும். அதை படித்துவிட்டு எளிதில் கடந்துவிடுவோம். அப்படி நாம் கடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. மனிதக் […]
Read Moreஇன்றைக்கு தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்தநாள். அதற்காக அவர் பார்வையற்றவராக நடித்து வரும் நெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே அது எந்தப் படத்தின் காப்பி என்பதே நெட்டிசன்கள் கண்டுபிடித்து விட்டனர். அதனால் பிறந்த நாளும் அதுவுமாக நயன்தாராவை நன்றாக ‘ வச்சு செய்து’ விட்டனர். அது கொரியன் படமான Blind என்ற படத்தின் அப்பட்டமான காப்பி என்பது டீசரிலேயே தெரிந்துவிட்டது. இப்படி பல படங்களை காப்பி அடித்து தான் […]
Read Moreதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில், தேனாண்டாள் ராமசாமி முரளி தலைமையில் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி சார்பாக சிவசக்தி பாண்டியன், R.K.சுரேஷ் டி.ராஜேந்தர் தலைமையில் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி சார்பில் P.T.செல்வகுமார், அடிதடி முருகன் போட்டியிடுகின்றனர். இவர்களைதவிர சுயேச்சையாக தலைவர் பதவிக்கு P.L.தேனப்பன், இரண்டுதுணை தலைவர் பதவிக்கு சுயேச்சையாக சிங்காரவேலன், கதிரேசன், மதியழகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தலைவர் பதவியை காட்டிலும் துணை தலைவர் பதவிக்கு […]
Read Moreதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் நவம்பர் 22 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதில் தேனாண்டாள் முரளி தலைமையிலான தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணியில் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சிவசக்தி பாண்டியனிடம் ஓர் உரையாடல். 1. உங்கள் அணியின் பலம் என்ன? வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? தேனாண்டாள் முரளி தலைமையிலான எங்கள் அணியில் ஆர்.கே.சுரேஷ், கேஜே.ராஜேஷ் போன்ற இளையவர்களும் ராதாகிருஷ்ணன் மற்றும் நான் உள்ளிட்ட அனுபவசாலிகளும் இணைந்திருக்கிறோம். இது எங்களுக்குப் பெரும்பலம்.எனவே எங்களுக்கான வெற்றி வாய்ப்பு […]
Read More