November 28, 2026
  • November 28, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

எத்தியோப்பிய முதுகு கூனல் நோயாளிக்கு சிம்ஸ் மருத்துவமனையில் வெற்றிகர சிகிச்சை

by on July 5, 2022 0

சென்னை, 05 ஜூலை 2022: சென்னை மாநகரில் முன்னணி மல்ட்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாகத் திகழும் சிம்ஸ் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை மருத்துவர்கள் அடங்கிய ஒரு நிபுணர்குழு, கடுமையான முதுகு கூனலால் (Kyphoscoliosis) பாதிப்பை சரிசெய்ய அதிக செயல்திறன் அவசியப்படும் ஒரு சிக்கலான அறுவை சிகிச்சையை சமீபத்தில் வெற்றிகரமாக செய்திருக்கிறது. டெஸ்ஃபயே மிங்குஷா மெர்ஷா (Master Tesfaye Mengesha Mersha) என்ற 15 வயது எத்தியோப்பிய இளைஞருக்கு கடுமையான முதுகு கூனல் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. மார்புப் பகுதியின் மேல்புற முதுகுத்தண்டில் […]

Read More

மோகன்ராஜா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் ‘காட் பாதர்’ ஃபர்ஸ்ட் லுக்

by on July 4, 2022 0

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் ‘காட் ஃபாதர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அதற்கான வீடியோ வெளியாகியிருக்கிறது. அத்துடன் நவராத்திரி திருவிழா கொண்டாட்டத்தின் போது ‘காட் ஃபாதர்’ திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொனிடேலா புரொடக்ஷன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்டமான திரைப்படம் ‘காட் ஃபாதர்’. மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை முன்னணி இயக்குநரான மோகன் ராஜா இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான […]

Read More

24 மணி நேரத்தில் 6 மில்லியன் பார்வைகளைத் தொடும் தனுஷின் கேப்டன் மில்லர்

by on July 4, 2022 0

தனுஷ் நடிப்பில் உருவாகும் “கேப்டன் மில்லர்” அறிவிப்பு வீடியோ, எட்டு திக்கும் அதிரடியான வரவேற்பை பெற்றுள்ளது..! சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும், தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்பட அறிவிப்பு வீடியோ, எட்டு திக்கும், மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த திரைப்படம் அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாகவே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. புத்தம் புது வகையில் உருவாக்கப்பட்ட […]

Read More

பாலியல் தொல்லைக்கு ஆளான ‘மெய்ப்பட செய்’ நாயகி

by on July 4, 2022 0

எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.தமிழ் செல்வம் தயாரித்திருக்கும் படம் ‘மெய்ப்பட செய்’. அறிமுக இயக்குநர் வேலன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நடிகர் ஆதவ் பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக புதுமுகம் மதுனிகா நடித்துள்ளார். இவர்களுடன் ராஜ்கபூர், ஆடுகளம் ஜெயபால், ஓ.ஏ.கே.சுந்தர், பெஞ்சமின், ஞான பிரகாசம், சூப்பர் குட் சுப்பிரமணி, விஜயகணேஷ், தவசி, அட்டு முத்து, சிவா, ராஜமூர்த்தி, எமில் கணபதி, அனிஷ் உள்ளிட பலர் நடித்துள்ளனர்.  பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் தொடர் கதையாகி வரும் […]

Read More

ராக்கெட்ரி திரைப்பட விமர்சனம்

by on July 3, 2022 0

எறும்பு நடக்கும்போது பேலன்ஸ் தவறினால் எந்த பழுதும் நிகழ்ந்து விடப் போவதில்லை. அதுவே யானையின் நடை இடறி விடும்போது அது எழுந்து கொள்வதற்கு பல காலம் ஆகலாம். மாதவனே இயக்கி நடித்திருக்கும் இந்தப்படம் சொல்ல வரும் செய்தி இதுதான். ஒரு நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு அந்த நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் எந்த அளவுக்கு உதவுகிறார்கள் என்பதை பொது சமுதாயம் எப்போதுமே நினைத்துப் பார்க்க தவறிவிடுகிறது. அப்படி நினைக்கா விட்டாலும் பரவாயில்லை. ஆனால் அவர்கள் மீது அவதூறு வரும்போது […]

Read More

அன்யாஸ் டுடோரியல் வெப் சீரிஸ் விமர்சனம்

by on July 2, 2022 0

ஏழு அத்தியாயங்களைக் கொண்ட இந்த தொடர் ஆஹா (Aha) ஓடிடி.யில் காணக் கிடைக்கிறது.  கதை..? இதுதான்… ரெஜினா கஸன்ட்ராவும் நிவேதிதா சதீஷும் அக்கா தங்கையாக இருந்தும் இருவருக்கும் ஒத்து வரவில்லை. அக்காவிடம் இருப்பதை விட ஒரு பேயிடம் இருந்து விட முடியும் என்ற கோபத்தில் நிவேதிதா தன் அம்மாவிடமும், அக்கா ரெஜினாவிடமும் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி தனியாக ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார். ஒரு பெரிய அபார்ட்மென்டில் ஒரேயொரு வீட்டில் அவர் மட்டுமே வசிக்கிற சூழ்நிலையில் அது மக்கள் […]

Read More

டி பிளாக் திரைப்பட விமர்சனம்

by on July 2, 2022 0

அருள்நிதி நடிக்க ஒத்துக் கொள்ளும் படங்கள் என்றாலே அது பட்ஜெட் மீறாமல் பதைபதைப்புக்கும் குறைவில்லாமல் ஒரு மினிமம் கேரண்டி படமாக இருக்கும் என்பது நமக்குத் தெரிந்த விஷயம்தான். அந்த வரிசையிலேயே அமைகிறது இந்த டி பிளாக் படமும். வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் ஒரு கல்லூரியில் படிக்கிறார்கள் அருள்நிதியும், நாயகி அவந்திகா மிஸ்ராவும். அதே கல்லூரியைச் சேர்ந்த பெண்கள் ஹாஸ்டலில் டி பிளாக் பகுதியில் ஒவ்வொரு மாணவியாக மர்மமான முறையில் இறந்து கொண்டிருக்க, அதன் உண்மைத்தன்மை என்ன என்று […]

Read More

சுந்தர் சி இயக்கும் காபி வித் காதல் படத்தின் குடும்ப நடன பாடல் வெளியானது

by on July 2, 2022 0

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்து வரும் படம் ‘காபி வித் காதல்’. கலகலப்பான படங்களை இயக்குவதற்கு பெயர்பெற்ற இயக்குனர் சுந்தர்.சி இந்த படத்தை இயக்கியுள்ளார்.   இதற்கு முன்னதாக சுந்தர்.சி யின் டைரக்ஷனில் வெளியான  அரண்மனை 3 ஹாரர் த்ரில்லராக ரசிகர்களை மிரட்டியது என்றால் குடும்பப்பாங்கான காதல் கதையாக கலகலப்புக்கு உத்தரவாதம் தரும் விதமாக உருவாகி உள்ளது இந்த காபி வித் காதல். இந்த […]

Read More

பத்து நிமிடங்களில் வண்ணத்தில் புத்தகத்தை அச்சிட்டு தரும் இங்க்ஜெட் இயந்திரம்

by on June 30, 2022 0

எக்ஸாட் இண்டர்நேஷனல் நிர்வாக இயக்குனர் திரு. முரளி தகவல் சென்னை ஜூன் 30:- பிடிஎப் பைல் கொடுத்தால் பத்து நிமிடத்தில் புத்தகமாக்கி தரும் இயந்திரத்தை தமிழகத்தில் முதன் முதலாக “KYOCERA” நிறுவனத்தின் டாஸ்கல்பா ப்ரோ 15000 சி வகை அச்சு இயந்திரத்தை அறிமுகப்படுத்துகிறது எக்ஸாட் இண்டர்நேஷனல். இவ்வியந்திரம் அறிமுகம் குறித்து அதன் நிர்வாக இயக்குனர் திரு.முரளி பத்திரிகையாளர் சந்திப்பில் கூறுகையில்… இந்த இயந்திரங்கள் பல்வேறு மாடல்களில் கிடைக்கிறது. அச்சிடும் தாள்கள், அளவு, பயன்படுத்தும் முறை போன்றவற்றை கொண்டு […]

Read More

மேடையில் நடனம் ஆடிய ஜையீத் கான் மோனல் – பான் இந்திய பனாரஸ் சிங்கிள் ட்ராக் வெளியீடு

by on June 30, 2022 0

‘கே ஜி எஃப்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கன்னட திரையுலகிலிருந்து அறிமுகமாகும் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பனாரஸ்’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது. இதனை தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரும், நடிகர் விஷாலின் தந்தையுமான ஜி. கே. ரெட்டி வெளியிட்டார். கன்னட திரையுலகின் முன்னணி இயக்குநரான ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பனாரஸ்’. இந்த படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு […]

Read More