April 26, 2024
  • April 26, 2024
Breaking News
  • Home
  • முக்கிய செய்திகள்
  • பத்து நிமிடங்களில் வண்ணத்தில் புத்தகத்தை அச்சிட்டு தரும் இங்க்ஜெட் இயந்திரம்
June 30, 2022

பத்து நிமிடங்களில் வண்ணத்தில் புத்தகத்தை அச்சிட்டு தரும் இங்க்ஜெட் இயந்திரம்

By 0 385 Views

எக்ஸாட் இண்டர்நேஷனல் நிர்வாக இயக்குனர் திரு. முரளி தகவல்

சென்னை ஜூன் 30:- பிடிஎப் பைல் கொடுத்தால் பத்து நிமிடத்தில் புத்தகமாக்கி தரும் இயந்திரத்தை தமிழகத்தில் முதன் முதலாக “KYOCERA” நிறுவனத்தின் டாஸ்கல்பா ப்ரோ 15000 சி வகை அச்சு இயந்திரத்தை அறிமுகப்படுத்துகிறது எக்ஸாட் இண்டர்நேஷனல். இவ்வியந்திரம் அறிமுகம் குறித்து அதன் நிர்வாக இயக்குனர் திரு.முரளி பத்திரிகையாளர் சந்திப்பில் கூறுகையில்…

இந்த இயந்திரங்கள் பல்வேறு மாடல்களில் கிடைக்கிறது. அச்சிடும் தாள்கள், அளவு, பயன்படுத்தும் முறை போன்றவற்றை கொண்டு இதன் மாடல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இப்போது எங்களிடம் ஐந்து வகைகளில் கிடைக்கிறது. ஒரு இயந்திரத்தின் விலை ஒரு கோடியாகும். ஜி.எஸ்.டி. இல்லாமல். அவசர தேவையை பூர்த்தி செய்ய விரும்புகிற அச்சு நிறுவனங்கள், பத்திரிகை நிறுவனங்கள், பதிப்பாளர்கள், அரசு நிறுவனங்கள் இந்த இயந்திரத்தை பயன்படுத்த முடியும்.

இந்த இயந்திரத்தை மிக எளிதாக கையாள முடியும். அதற்கு தேவையான பயிற்சிகளை நாங்களே அளிக்கிறோம். மேலும் இந்த இயந்திரத்தை அமைத்து தருவதுடன், அதற்கான சேவையுைம் நாங்களே வழங்குகிறோம். இதன் உதிரிபாகங்களை நாங்களே விற்பனை செய்கிறோம். எனவே எங்களிடம் இந்த இயந்திரத்தை வாங்குபவர்கள் எதற்காகவும் மற்றவர்களை நாட வேண்டியதில்லை. தேவையான அனைத்து சேவைகளையும் நாங்களே செய்து தருகிறோம் என்றார்.

இயந்திரத்தின் சிறப்பம்சங்கள் குறித்து “KYOCERA” நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு.திலிப் காந்த் கூறுகையில்…

இடைவிடாது தொடர்ந்து அச்சிடும் வாய்ப்பு, சாதாரண தாளிலிருந்து 360 ஜிஎஸ்எம் தடிமனை கொண்ட தாள்கள் வரை பயன்படுத்த முடியும்.

அச்சுத் துறையில் தேவைக்கு ஏற்ப, தரமாக நான்கு வண்ணங்களில் அச்சிட்டு வழங்கும் வசதி கொண்டது. இதில் பயன்படுத்தப்படும் மை நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட தரம் வாய்ந்த மைகள் ஆகும்.

அச்சின் வகையில் அளவு, கனம், வகைகள், தேவைக்கு ஏற்ப அளவுகளில் மாற்றம் செய்யும் வசதி இந்த இயந்திரத்தில் உள்ளது. வணிகத்திற்கு ஏற்ப அளவுகளில் மாற்றங்களை மேற்கொண்டு பயன்படுத்த முடியும்.

இயந்திரத்தை மிக எளிதாக கையாளலாம். இதன் உதிரிபாகங்கள் எளிதில் கிடைக்கும். இயந்திரத்தை இயக்குவதில் எவ்வித சிரமமும் இருக்காது. யார் வேண்டுமானாலும் இயக்கலாம். இயந்திரம் முழுமையாக கம்ப்யூட்டரைஸ்டு செய்யப்பட்டுள்ளது.

இங்க்ஜெட் போன்ற டோனரை உபயோகிப்பதால் இதற்கான மின் உபயோகம் மிகக் குறைவு. இதன் தயாரிப்பு நீண்ட நாட்களுக்கு நிலையானது மற்றும் தரமானது. நவீன தொழில்நுட்பத்துடன் பாதுகாப்பான செயல்முறைகள் இதில் உள்ளன.

எவ்வித இடையூறும் இல்லாமல் தொடர்ந்து அச்சிடலாம். ஒரே தரத்தில் ஒரு மணி நேரத்தில் 9000 அச்சுகளை பெற முடியும். ஒரு நாளைக்கு ஒரு லட்சம் அச்சிடலாம். ஒரு நிமிடத்திற்கு 150 அச்சுகளை பெற முடியும். மேலும் அதிகளவிலான தாள்களை பல அளவுகளில் நிரப்பி கொள்ளும் வசதி இவ்வியந்திரத்தில் உள்ளது. 1.22 மீட்டர் நீளம் கொண்ட பேனர்களையும் இவ்வியந்திரத்தில் அச்சிடலாம்.

அச்சிடும் பணி நடைபெறும் போது மையின் அளவு குறைந்தால், எவ்வித இடையூறும் இன்றி மைகளை நிரப்பி கொள்ளும் வசதி இதில் உள்ளது. அதுபோல் தாள்களையும் நிரப்பி கொள்ளலாம். இதற்கு உறுதுனையாக பக்கத்து டிரேகளை பயன்படுத்த முடியும்.

அதிகளவிலான தாள்களை அச்சிடும்போது, தாள்கள் சிக்கிக் கொள்ளாமல் இடைவிடாது, தொய்வின்றி அச்சிடுவதற்கு தாள்களை முறையாக இயந்திரத்திற்குள் எடுத்து செல்ல காற்று தொடுவான் உதவுகிறது.

அதிவேகமாக பிரதி எடுத்து (Scanning) சேமிக்கும் வசதி (300 DPI) இதில் உள்ளது. நான்கு வண்ணங்களிலும், கருப்பு, வெள்ளையிலும் பிரதிகளை நாம் சேமித்து வைத்து கொள்ள முடியும். அதன் தட்டில் 270 சீட்டுகள் வரை உள் ஏற்றி பயன்படுத்த முடியும்.

டாஸ்கல்பா தயாரிப்பு மைகள் லேசான தன்மை கொண்டவை. மேலும் தண்ணீரிலிருந்து பாதுகாக்கக் கூடியது. இந்த வகை மை டாஸ்கல்பாவுக்காகவே தயாரிக்கப்பட்டதாகும். எண்ணெய் சார்ந்த மைகளை காட்டிலும் இந்த வகை மை வண்ணங்களின் தன்மையை பிரதிபலிக்கக்கூடியது.

மைகளை எடுத்துச் செல்லும் பெல்ட்டின் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டால் தா னே சரிசெய்து கொண்டு, வேகத்திற்கு ஏற்ப மைகளை தொடர்ந்து அனுப்பி, படங்களின் அச்சில் எவ்வித மாற்றமும் ஏற்படாமல் பாதுகாத்து கொள்கிறது. இதன் மூலம் வண்ணங்களிலும், படத்தின் தோற்றத்திலும் எவ்வித மாற்றமும் ஏற்படாமல் தரமான அச்சை தருகிறது.

தாள்களின் இரண்டு பக்கமும் அச்சிடும்போது அதன் அளவு மற்றும் அச்சிடும் தரம் மாறாமல் ஒரே தரமாக, அளவாக அச்சிட்டு தாள்கள் வெளிவருகின்றன.

அச்சிடுவதற்கு இந்த இயந்திரத்தை பயன்படுத்தும்போது, பைல்களை பிடிஎப் ஆகவோ அல்லது வேறு பார்மட்டிலோ உள் ஏற்றினால் தரமான அச்சுகளை நாம் பெற முடியும். இதன் மூலம் நேர விரயம் தவிர்க்கப்படுகிறது. புத்தகங்களையும் உடனடியாக அச்சிட்டு பெற முடிகிறது. ஆப்செட் பிரிண்டிங்போல நாள் கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை.

லேசர் பிரிண்டிங்கில் அச்சிடும் விலையை காட்டிலும் 50 விழுக்காடு விலை இதில் குறைவு.

தேசிய சுற்றுச்சூழல் வாரியம் வரும் 2035ஆம் ஆண்டிலிருந்து லேசர் வகை இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது. எனவே எதிர்காலங்களில் இந்த வகை இயந்திரங்களின் பயன்பாடுதான் நடைமுறையில் இருக்கும்.

அச்சுத் துறைக்கு இந்த வகை புது இயந்திரம் வந்திருப்பது ஒரு வரப்பிரசாதமாகும் என்று தெரிவித்தார். மேலும் விவரங்களுக்கு:

எக்ஸாட் இண்டர்நேஷனல், 21, மேட்டுகுப்பம் ரோடு, சீமாத்தம்மன் நகர், மதுரவாயல், சென்னை-600095