April 18, 2025
  • April 18, 2025
Breaking News
September 11, 2019

அஞ்சலியை வச்சுக் காமெடி பண்ணப் போறாங்க…

By 0 821 Views

அஞ்சலியுடன் யோகி பாபு மற்றும் விஜய் டி.வி.புகழ் ராமர் நடிக்கும் புதிய நகைச்சுவைப் படத்தின் படப்பிடிப்பு இன்று எளிய பூஜையுடன் தொடங்கியது. சோல்ஜர்ஸ் பேக்டரி சார்பில் உருவாகும் இப்படம் குறித்து தயாரிப்பாளர் சினீஸ்…

விலா நோகச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகளும், விறுவிறுப்பு குறையாத காட்சிகளும் நிறைந்த கதையாக இதை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ். முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிகை அஞ்சலியை இந்தப் படத்தில் ரசிகர்கள் பார்க்கலாம். அஞ்சலியின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை இப்படம் ஏற்படுத்தும்.

யோகி பாபு மற்றும் விஜய் டி.வி.புகழ் ராமர் இருவரும் படம் முழுவதும் வந்து அமர்க்களப்படுத்தியிருப்பார்கள். படத்தில் பங்கேற்கும் மற்ற சில முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் குறித்தும் விரைவில் அறிவிக்க இருக்கிறோம்..!” என்றார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு ஆர்வி ஒளிப்பதிவு இயக்குநராக பொறுப்பேற்க, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். படத்திற்கான பாடல்களை எழுதுகிறார் அருண்ராஜா காமராஜ்.

Anjalis New Movie

Anjalis New Movie