சென்னை, ஜனவரி 30 , 2023: இந்தியாவின் முதல் சான்றளிக்கப்பட்ட ஆர்கானிக் பால் நிறுவனமும், நாட்டின் மிகவும் பிரபலமான ஆர்கானிக் பால் உற்பத்தியாளருமான அக்ஷயகல்பா ஆர்கானிக், இன்று, சென்னைக்கு தெற்கே 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பூரியம்பாக்கம் கிராமத்தில் அதன் மாதிரி ஆர்கானிக் பால் பண்ணையைத் திறந்து வைத்ததன் மூலம் தமிழகத்தில் வலுவான தடம் பதித்துள்ளது.
அக்ஷயகல்பாவேலன்குடில் அல்லது ‘விவசாயி இல்லம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மாதிரிப் பண்ணையானது, கர்நாடகாவில் திப்தூரில் உள்ள அதன் மிகவும் வெற்றிகரமான தாய்ப் பண்ணையின் மறுஉருவாக்கம் ஆகும். அக்ஷயகல்பா கர்நாடகாவில் 850 க்கும் மேற்பட்ட விவசாயிகளுடனும், தமிழ்நாடு, செங்கல்பட்டு மாவட்டத்தில் 300 விவசாயிகளுடனும் செயல்படுகிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2,00,000 க்கும் மேற்பட்ட விவேகமுள்ள வாடிக்கையாளர்களுக்கு புதிய மற்றும் ஆரோக்கியமான இயற்கை பால் மற்றும் பால் பொருட்களை வழங்க அக்ஷயகல்பா எதிர்பார்க்கிறது.
UK -இன் வளர்ச்சி நிதி நிறுவனமான பிரிட்டிஷ் இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் (BII) அக்ஷயகல்பாவில் ஒரு முக்கிய முதலீட்டாளராக உள்ளதால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான பிரிட்டிஷ் துணை உயர் ஆணையர் திரு. ஆலிவர் பால்ஹாட்செட் அவர்களால் இந்த புதிய பண்ணை திறந்துவைக்கப்பட்டது.
செப்டம்பர் 2022 -இல் அக்ஷயகல்பா ஆர்கானிக் நிறுவனத்தில், அதன் நுகர்வோருக்கு பிரீமியம் ஆர்கானிக் பால் அணுகலை வழங்கும் அதே வேளையில் நிலையான மற்றும் மீளுருவாக்கம் செய்யும் விவசாயத்தை ஊக்குவித்து, ஆதரித்து, வளர்ப்பதில் தனது வாக்குறுதியை நிறைவேற்ற உதவும் வகையில், BII ஆனது, ரெயின் மேட்டர் ஃபவுண்டேஷன் மற்றும் தற்போதைய முதலீட்டாளரான வென்ச்சர் டெய்ரி ஆகியவற்றுடன் இணைந்து ஒரு முக்கிய முதலீட்டாளராக இணைந்தது.
அதன் தொடர் B நிதியுதவி சுற்றில், அக்ஷயகல்பா, BII மற்றும் பிற முதலீட்டாளர்களிடமிருந்து $15 மில்லியனை திரட்டியது மற்றும் வாழ்வாதார அடிப்படையிலான விவசாயத்தை சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு செல்வத்தை உருவாக்கும் வாய்ப்புகளாக மாற்றுவதற்கும், விவசாயத்தை எதிர்கால சந்ததியினருக்கு ஒரு விருப்பமுள்ள தொழிலாக மாற்றுவதற்கான தனது பார்வையை மேலும் உயிர்ப்புடன் கொண்டுவர முடிந்தது.
இன்று, அக்ஷயகல்பா, பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள 60,000 க்கும் மேற்பட்ட நுகர்வோருக்கு வழங்குகின்ற இந்தியாவின் மிகப்பெரிய ஆர்கானிக் பால் உற்பத்தியாளராக உள்ளது.
அக்ஷயகல்பா ஆர்கானிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் ஸ்ரீ சஷி குமார் கூறுகையில், “இந்தியாவில், உடல்நலம் சார்ந்த நுகர்வோர்கள், எதிர்காலத்தில் ஒரு நாள், நாட்டில் இயற்கை உணவை முக்கியமான போக்கிற்கு கொண்டு செல்லும் அளவுக்கு வலுவாக இருக்கும் வளர்ந்து வரும் சமூகப்பிரிவினராக உள்ளனர்.
இந்திய பால் பண்ணைகளில் சிறந்த நடைமுறைகளை கொண்டு வரவும், நமது விவசாயிகளின் பொருளாதார நிலைகளை மேம்படுத்தவும் ஒரு வரலாற்று வாய்ப்பையும் இந்த இயக்கம் வழங்குகிறது. கூடுதலாக, இயற்கை விவசாயம் மண் பாதுகாப்பிற்கு உதவுகிறது மற்றும் காலநிலை மாற்றத்தில் சாதகமான தாக்கத்தை உருவாக்குகிறது.
தமிழக விவசாயிகள் திப்தூர் சரகத்தில் உள்ள விவசாயிகள் அடைந்த அதே அளவிலான வெற்றியை அடைய, அவர்களுக்கு உதவ ,அக்ஷயகல்பாவேலன்குடில், அவர்களுடன் இணைந்து செயல்படும். கர்நாடகாவில் எங்களின் வெற்றி, தமிழகத்தில் என்ன செய்ய வேண்டும், சாதிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்பதற்கு நல்ல இலக்காக இருக்கிறது. எங்கள் நுகர்வோர் குடும்பத்தை விரிவுபடுத்துவதற்கும் மாநிலத்தில் அதிக நபர்களை வெல்வதற்கும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.”என்று கூறினார்.
இந்தியாவிற்கான பிரிட்டிஷ் துணை உயர் ஆணையர் ஸ்ரீ ஆலிவர் பால்ஹட்செட்,“BII இன் முதலீட்டின் மூலம், இந்தியாவில் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த உதவும் நிலையான விவசாய நடைமுறைகளை உறுதிசெய்யும் வகையில் செயல்படும் அக்ஷயகல்பா ஆர்கானிக் போன்ற முன்னோடி நிறுவனங்களை ஆதரிப்பதில் பிரிட்டிஷ் அரசாங்கம் பெருமிதம் கொள்கிறது. அனைவருக்கும் உற்பத்தி, நிலையான மற்றும் உள்ளடக்கிய பொருளாதார விளைவுகளை ஆதரிப்பதன் மூலம் மிகப்பெரிய உலகளாவிய வளர்ச்சி சவால்களைத் தீர்ப்பதில் UK உறுதியாக உள்ளது.”என்று கூறினார்.
BII-ன் நிர்வாக இயக்குநரும், இந்தியாவின் தலைவருமான ஸ்ரீ மானவ் பன்சால், “மாதிரி ஆர்கானிக் பால் பண்ணையின் திறப்பு, அக்ஷயகல்பாவுடனான எங்கள் முதலீட்டில் ஒரு அற்புதமான திருப்புமுனை மற்றும் நமது மூலதனம் எவ்வாறு இந்தியாவில் வளர்ச்சி தாக்கத்தை கொண்டுவரமுடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது.
இந்தப் புதிய பண்ணை, இந்தியாவில் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு உணவுப் பாதுகாப்பிற்கும், சத்தான பால் பொருட்களைக் கொண்டு வருவதற்கும் உதவுவது மட்டுமல்லாமல், பிராந்தியம் முழுவதும் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, அடுத்த தலைமுறை நிலையான சிறு நிலங்களின் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும்.” என்று கூறினார்.
2010 இல் வெறும் மூன்று விவசாயிகளுடன் தொடங்கப்பட்ட அக்ஷயகல்பா, திப்தூரில் உள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகளின் நிதிநிலைமையை, மாத வருமானத்தில் சராசரியாக சுமார் 100,000 ரூபாய் என்ற மூன்று மடங்கு அதிகரிப்புடன் மாற்றியுள்ளது. உயர்தர மற்றும் சத்துள்ள ஆர்கானிக் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பதன் மூலமான அடிப்படை வருமானத்திற்கு வெளியே பல வருமான ஆதாரங்களை வழங்குகிற அக்ஷயகல்பா மாதிரிக்கு சிறந்த விலையை கொடுக்க விரும்பும் நுகர்வோரின் ஆதரவின் காரணமாக இந்த வெற்றி பெரும்பாலும் அடையப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அக்ஷயகல்பா விவசாயிகளும் பால் உற்பத்தியில் இருந்து தினசரி துணை வருமானத்தை ஈட்டுவதற்காக முட்டைகள், தேங்காய், தேன் மற்றும் இயற்கை காய்கறிகளை வளர்த்து விற்பனை செய்கிறார்கள்.
நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் இரசாயன பூச்சிக்கொல்லி உரங்கள் இல்லாத பால் மற்றும் பால் பொருட்களை உற்பத்தி செய்ய உதவும் நிலையான பண்ணை நடைமுறைகளுக்கான புதிய வரையறைகளை அக்ஷயகல்பா உருவாக்கியுள்ளது.
2010 ஆம் ஆண்டில் அதன் முதல் பால் பாக்கெட்டை வழங்கியதில் இருந்து ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, அக்ஷயகல்பா ஆர்கானிக், ஒரு பரந்த அளவிலான சமூக-பொருளாதார மற்றும் கலாச்சார பின்னணியில் இருந்து அர்ப்பணிப்புள்ள 700 உறுப்பினர்களுக்கும் அதிகமான பெண்கள் மற்றும் ஆண்களைக் கொண்ட அவர்கள், அக்ஷயகல்பா அல்லது ‘எல்லையற்ற சாத்தியங்கள்’ என்ற பெயரை நியாயப்படுத்துகிற தங்கள் பணியில் முன்னேறிச் செல்வதை உறுதி செய்யும் ஒரு குழுவாக வளர்ந்துள்ளது.
மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ளவும்:
அனிர்பன் முகர்ஜி | ஆட்ஃபாக்டர்ஸ் PR | +91 9748029978
anirban.mukherjee@adfactorspr.com
அக்ஷயகல்ப ஆர்கானிக் பற்றி:
2010 இல் நிறுவப்பட்ட அக்ஷயகல்ப ஆர்கானிக், நுண்ணியிர் எதிர்ப்பிகள், செயற்கை சேர்க்கைகள் மற்றும் இரசாயன பூச்சிக்கொல்லி உரங்கள் இல்லாத பால் மற்றும் பால் பொருட்களை வழங்கும் இந்தியாவின் முதல் சான்றளிக்கப்பட்ட ஆர்கானிக் பால் நிறுவனமாகும். தூய்மையான அறிவியலின் அடிப்படையிலான ஊட்டச்சத்து மூலம் ஆரோக்கியமான உலகைக் கட்டியெழுப்புதல் மற்றும் முழு நாட்டிற்கும் அணுகக்கூடிய நிலையான விவசாய சூழலை உருவாக்குவதற்கான அதன் நோக்கத்துடன் இந்த அமைப்பு அதன் பெயருக்கு ஏற்ப நிற்கிறது.
அக்ஷயகல்பா, பால் பண்ணை நடைமுறைகளில் ஒரு புதிய தொழில் வரம்பை நிறுவுவது மட்டுமல்லாமல், அதன் உழவர்-தொழில்முனைவு முன்முயற்சிகள் மூலம் ஒரு முழுமையான சுற்றுச்சூழல்-தலைமையிலான மாற்றத்தை உருவாக்கும் நோக்கத்துடன் விவசாயிகளை வளர்க்கும் ஒரு உலகத் தரம் வாய்ந்த மாதிரியை வடிவமைத்துள்ளது,
அக்ஷயகல்பாவின் ஊட்டச்சத்து நிறைந்த தயாரிப்புகளில் பால், நெய், பாலாடைக்கட்டி, வெண்ணெய், பன்னீர், தயிர், மோர், ரொட்டி, தேன், மாவு, தேங்காய், தூய்மையான தேங்காய் எண்ணெய் ஆகியவை அடங்கும், மேலும் பல புதிய தயாரிப்புகள் ஆயத்தமாக வெளியிடப்பட உள்ளன.
அக்ஷயகல்பா தற்போது பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத் முழுவதும் சுமார் 60000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது மற்றும் வளர்ந்து வருகிறது.
அக்ஷயகல்பா ஆர்கானிக் இணையதளம் : https://akshayakalpa.org/
பிரிட்டிஷ் இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் பற்றி…
• பிரிட்டிஷ் இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் ஆனது, UK -இன் மேம்பாட்டு நிதி நிறுவனம் மற்றும் செல்வாக்கு முதலீட்டாளர் ஆகும்.
• பிரிட்டிஷ் இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட், ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் கரீபியன் நாடுகளில் உள்ள வணிகங்களுக்கு நம்பகமான முதலீட்டு பங்காளராகும்.
• இது UK அரசாங்கத்தின் சுத்தமான சூழல் நட்பு முன்முயற்சியை ஆதரிப்பதற்கும், நமது சந்தைகளில் உற்பத்தி, நிலையான மற்றும் உள்ளடக்கிய பொருளாதாரங்களை உருவாக்குவதற்கும் முதலீடு செய்கிறது.
• அடுத்த ஐந்தாண்டுகளில், BII இன் மொத்த புதிய பொறுப்புகளில் மதிப்பின் அடிப்படையில் குறைந்தபட்சம் 30 சதவீதம் சுற்றுசூழல் பாதுகாப்பிற்கான நிதியில் இருக்கும்.
• பெண்களின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக $10 பில்லியனுக்கும் மேல் திரட்டிய 2X Challenge -இன் நிறுவிய உறுப்பினராகவும் BII உள்ளது.
• இந்த நிறுவனம் வளர்ந்து வரும் சந்தைகளில் 1,300 வணிகங்களில் முதலீடுகளைக் கொண்டுள்ளது, மற்றும் மொத்த சொத்துக்கள் £7.7 பில்லியன்.
• மேலும் தகவலுக்கு, பார்வையிடவும் : www.bii.co.uk | watch here