October 16, 2025
  • October 16, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • புத்தாண்டு இரவில் தல ஆடிய நடனம் – மிக்கி தரும் வலிமை அப்டேட்ஸ்
January 7, 2021

புத்தாண்டு இரவில் தல ஆடிய நடனம் – மிக்கி தரும் வலிமை அப்டேட்ஸ்

By 0 579 Views

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு யுவன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

இதுவரை சுமார் 80% படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. தற்போது ராஜஸ்தானில் சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கச் சென்றுள்ளனர். புத்தாண்டு அன்று கூட படப்பிடிப்பை நடத்தியுள்ளது ‘வலிமை’ படக்குழு. டிசம்பர் 31-ம் தேதி இரவு புத்தாண்டை நடனமாடி வரவேற்றுள்ளனர்.

அந்தக் கொண்டாட்டத்தில் அஜித்தும் நடனமாடியுள்ளார். இது தொடர்பாக நடனக் கலைஞர் மிக்கி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“என் வாழ்க்கையில் இப்படி ஒரு புத்தாண்டை நான் கொண்டாடியதில்லை. சரியாக இரவு 12 மணிக்கு தலயைப் பார்த்து அவரிடம் முதல் புத்தாண்டு வாழ்த்தைப் பெற்றேன். அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன்.

படப்பிடிப்புத் தளத்தில் ‘ஆலுமா டோலுமா’ பாடலை ஒலிக்கவிட்டோம். தல ஆடினார். அவருடன் சேர்ந்து நானும் ஆடினேன். இதெல்லாம் விவரிக்க முடியாத உணர்ச்சி. என் வாழ்க்கையில் இப்படி ஒரு புத்தாண்டு தந்த இறைவனுக்கு நன்றி. அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்”.

இவ்வாறு நடனக் கலைஞர் மிக்கி தெரிவித்துள்ளார்.