இந்தியில் ‘காஞ்ச்சி லைஃப் இன் எ ஸ்லாஹ்’ (Kaanchli Life in a Slough) என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ‘ஷிகா மல்கோத்ரா’. இதில் ‘சஞ்சய் மிஸ்ரா’ ஹீரோவாக நடித்திருந்தார். ‘தெடிப்பியா ஜோஷி’ இயக்கியிருந்த இந்தப் படம் கடந்த மாதம் வெளியானது.
இந்நிலையில் நடிகை ‘ஷிகா மல்கோத்ரா’ கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர் களுக்கு உதவுவதற்காக, அரசு மருத்துவமனையில் நர்சாகப் பணியாற்றி வருகிறார் என்ற செய்தி ஆச்சரியம் தருவதாக இருக்கிறது.
Actress Shikha Malhotra turns a Nurse
உலகம் முழுவதும் கொரானா பீதியில் சிக்கித் தவிக்க இந்தியாவிலும் 800-க்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இந்தியா முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ள நிலையில் கொரோனாவுக்கு எதிரான மருத்துவச் சேவையில், தன்னார்வலர்கள் இணைந்து கொள்ளலாம் என்று அரசு சமீத்தில் அறிவித்திருந்தது.
இதையடுத்து, நடிகை ஷிகா, மும்பையில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் தன்னார்வ நர்ஸாக 28-3-2020 முதல் தன்னை இணைத்துக் கொண்டார். இவர், நர்ஸிங்கில் பட்டப்படிப்பு முடித்துள்ளவர் என்பது குறிப்பிடத் தக்கது.
*நடிகையாகி விட்டதால், நர்ஸாகப் பணியாற்றாமல் இருந்தவர், இப்போது தன்னைப் பணியில் இணைத்துக் கொண்டுள்ளார். தன் அர்ப்பணிப்பு குறித்து, “நாடு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்த இக்கட்டான நேரத்தில் மக்களுக்கு நடிகையாகவும், நர்ஸாகவும் சேவையாற்றத் தயாராக இருக்கிறேன். உங்கள் ஆசிர்வாதம் தேவை. வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். அரசுக்கு உதவுங்கள்” என்று அறிவித்திருக்கிறார்.
இவரது அம்மாவும் ஒரு நர்ஸ் என்பது கூடுதல் தகவல். நல்ல மனம் கொண்ட ‘ஷிகா’வை எவ்வாளவு வாழ்த்தினாலும் தகும்..!