July 2, 2025
  • July 2, 2025
Breaking News
June 29, 2022

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மரணம்

By 0 692 Views

கடந்த சில நாட்களாகவே திரைத்துறை சம்பந்தப்பட்டவர்களின் மரணம் தொடர்ந்து அதிர்ச்சி அளிக்க வைக்கிறது.

நேற்று நடிகர் பூ ராமு மாரடைப்பால் காலமானார். இன்று கொரானாவுக்கான சிகிச்சையில் இருந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு வயது 48.

ஆனால் அவர் இறந்தது கொரோனா தொற்றினால் அல்ல என்று தெரிய வருகிறது. அவருக்கு சில காலமாகவே நுரையீரலில் தொற்று இருந்ததாம். புறாக்களின் எச்சத்தினால் உருவாகும் வைரஸ் தொற்றினால் அவருடைய நுரையீரல் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்திருக்கிறது.

மாற்று நுரையீரல் பொருத்துவது ஒன்றுதான் அதற்கு தீர்வு என்ற நிலையில் மாற்று நுரையீரல் டோனருக்காக காத்திருந்த நிலையில் வித்யாசாகருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே மிகவும் மோசமான நிலையில் அவரது நுரையீரல் இருந்ததால் கொரோனா சிகிச்சை பலனின்றி அவர் இறந்துள்ளதாக தெரிகிறது.

மீனா – வித்யாசாகர் திருமணம் 2009ஆம் ஆண்டு நடைபெற்றது இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை இருப்பது அனைவரும் அறிந்ததே.