September 14, 2025
  • September 14, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சீரியல் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி கடைசி ஆடியோ இணைப்பு
January 16, 2020

சீரியல் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி கடைசி ஆடியோ இணைப்பு

By 0 797 Views

தமிழ் சின்னத்திரையில் வில்லி வேடங்களில் நடித்து பிரபலமானவர் ஜெயஸ்ரீ. இவருக்கு தேவதையை கண்டேன் நடிகர் ஈஸ்வருடன் திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

ஒரு மாதத்துக்கு முன்னர் கண்ணீருடன் பேட்டியளித்த ஜெயஸ்ரீ, தன் கணவர் ஈஸ்வர் அதே சீரியலில் வில்லியாக நடிக்கும் மஹாலக்ஷ்மியுடன் கள்ள தொடர்பில் ஈடுபட்டு வருவதாகவும், நானும் குழந்தையும் இருக்கும் போதே அவருடன் கண்டபடி பேசுவதாகவும் கூறினார்.

mahalakshmi, Jayashree with Eshwar

மேலும் தன்னிடம் விவாகரத்து கேட்டு அடித்து கொடுமை படுத்தியதாகவும் அப்போது கூறினார். குடிக்கு அடிமையான ஈஸ்வர் சூதாட்டத்தில் ஈடுபட்டு கடன் வாங்கி அனைத்தையும் அழித்து விட்டதாகவும் அந்த கடன்களையும் தற்போது நான் தான் கட்டி வருகிறேன் என கூறினார். 

இந்நிலையில் நடிகை ஜெயஸ்ரீ அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகளைத் தின்று தற்கொலை முயற்சி செய்துள்ள செய்தி வந்துள்ளது. அத்ற்கு முன்னர் தன் நெருங்கிய தோழிக்கு அவர் ஒரு ஆடியோ செய்தியையும் அனுப்பியிருக்கிறார். 

அதனால் தற்கொலைக்கு முயன்ற நடிகை ஜெயஸ்ரீ சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொஞ்சம் தாமதித்திருந்தாலும் அவர் உயிர் பிரிந்திருக்கும் என்றார்களாம் மருத்துவர்கள்.

அவர் கடைசியாகப் பேசியதாக உலாவரும் ஆடியோ கீழே…