January 23, 2026
  • January 23, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கழற்றி விட நினைத்த நடிகர் கைது செய்ய வைத்த நடிகை – கோலிவுட் பரபரப்பு
June 11, 2020

கழற்றி விட நினைத்த நடிகர் கைது செய்ய வைத்த நடிகை – கோலிவுட் பரபரப்பு

By 0 774 Views

சென்னை ஆர் ஏ புரத்தை சேர்ந்தவர் தியாகராஜன். இந்த தியாகராஜன் தரிசு நிலம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தவர்.

இவர் நாடோடிகள் படத்தில் சிறிய ரோலில் நடித்த ஒரு துணை நடிகையை காதலித்து வந்தார். இந்த ஜோடி அடிக்கடி சந்தித்து பேசி தங்கள் காதலை வளர்த்து வந்தாரகள்.

ஒன்பது வருடக் காதலை திருமணத்தில் முடிக்க ஆசைப்பட்ட நடிகை தியாகராஜனிடம் அது குறித்து பேசி வந்தார். ஆனால் நடிகையுடன் நெருக்கமாக பழகி அவரது நகை பணத்தை செலவு செய்த அவர், திருமணத்துக்கு ஒப்புக் கொள்ளலை.

நிரந்தர வேலை வேறு கிடைத்தவிடவே, நடிகையுடனான தொடர்பை அறவே துண்டித்தாராம் தியாகு. அதற்குக் காரணமாக நடிகை அவரைவிட ஒரு வயது மூத்தவர் என்று கூறி தன்னை தொந்திரவுப் படுத்தினால் கொன்றுவிடுவதாகவும் சொன்னாராம்.

இதனால் மனமுடைந்த நடிகை மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தியாகராஜன் தன்னை நிராகரித்ததுடன் கொலை மிரட்டல் விடுத்து வருவதைக் குறித்து புகார் செய்தார்.

அதனைத் தொடர்ந்து தியாகராஜனை கைது செய்த போலீஸார் அவரைப் புழல் சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அவர் மீது மோசடி, பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பலே நடிகை… பாவம் ஹீரோ..!