October 29, 2026
  • October 29, 2026
Breaking News
October 29, 2026

எம்ஜி விண்ட்சர் இன்டல்ஜ் எடிஷன்  ரூ. 17,99,800 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம்..!

By 0 16 Views

பிசினஸ்-கிளாஸ் வசதிகளுடன் கூடிய ஒரு புதிய சொகுசான அனுபவம்

Chennai, அக்டோபர் 28, 2026: JSW எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், இந்தியாவின் நம்பர் 1 எலெக்ட்ரிக் வாகனமான* எம்ஜி விண்ட்சரின் மேலும் பல சொகுசு வசதிகள் கொண்ட ‘MG விண்ட்சர் இன்டல்ஜ் எடிஷனை’  இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. 38-kWh பேட்டரி பேக் மூலம் இயங்கும் இந்த வாகனம், 100 kW (136 PS) பவர் மற்றும் 200 Nm டார்க் திறனை வெளிப்படுத்துவதோடு, சான்றளிக்கப்பட்ட 332 கி.மீ# பயண தூர திறனையும் வழங்குகிறது.

எம்ஜி விண்ட்சரின் எதிர்காலத்திற்கு ஏற்ற வடிவமைப்பு, விசாலமான உட்புறம் மற்றும் அதன் பிரத்யேக பிசினஸ்-கிளாஸ் வசதிகளுடன், இந்த இன்டல்ஜ் எடிஷன் ஒரு புதிய பிரத்யேக அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஸ்பெஷல் எடிஷனில், நேர்த்தியான ஷேடோ கோல்டு நிறத்துடன், கருப்பு நிற மேற்கூரையும் இணைந்து ஒரு தனித்துவமான டியூயல்-டோன் தோற்றத்தில் மிளிர்கிறது. கருப்பு நிற ORVM-கள், R-18 பிளாக் அலாய் சக்கரங்கள் மற்றும் C-பில்லரில் உள்ள பிரத்யேக ‘INDULGE’ பேட்ஜிங் ஆகியவை இதன் பிரீமியம் தோற்றத்தை மேலும் சிறப்பாக்கி, இந்த வாகனத்திற்கு ஒரு கம்பீரமான, தனித்துவமான அடையாளத்தை அளிக்கின்றன.

Photo Caption : MG Windsor INDULGE Edition launched , at the launch in chennai ( L to R ) Mr.Srinivasan P J , Senior Vice President, FPL – MG and Mr R Ranjith Kumar , Area manager , JSW MG MOTOR INDIA

இதன் உட்புற கேபின், பிரத்யேக அர்பன் டான் மற்றும் கருப்பு நிறத்திலான அப்ஹோல்ஸ்ட்ரி உடன் பிரீமியம் அனுபவத்தையும், மென்மையான மற்றும் நேர்த்தியான உணர்வையும் தருகிறது. முன்பக்க ஹெட்ரெஸ்ட்களில் உள்ள பிரத்யேக ‘INDULGE’ எம்பிராய்டரி தனித்துவமான அடையாளத்தை வெளிப்படுத்துகிறது.  பிசினஸ்-கிளாஸ் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் விதமாக, இரண்டாவது வரிசைப் பயணிகளுக்குக் கூடுதல் வசதியையும் பொழுதுபோக்கையும் வழங்கும் ‘பிரைவ் ஸ்கிரீன்‘ (PRIVE Screen) இதில் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், INDULGE தீம் கொண்ட குஷன்கள் மற்றும் கழுத்து தலையணைகள் கூடுதல் சௌகரியத்தையும் பிரத்யேக உணர்வையும் சேர்க்கின்றன.

ஸ்டைல் மற்றும் சௌகரியத்தில் மேலும் தனித்துவத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரத்யேக ஆக்சஸரிகளும் கிடைக்கின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப விண்ட்சர் இன்டல்ஜ் எடிஷனை தனித்துவமாக மாற்றியமைத்துக் கொள்ளலாம்.