January 29, 2026
  • January 29, 2026
Breaking News
November 28, 2018

உலகம் முழுதும் 10,500 திரைகளில் 2 பாய்ண்ட் ஓ

By 0 938 Views

நாளை வெளியாகவுள்ள ரஜினியின் 2 பாய்ண்ட் ஓ படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டிருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த படமென்பதால் இந்த எதிர்பார்ப்பு என்பது ஒருபுறமிருக்க, 475 கோடியில் உருவான இப்படியொரு பிரமாண்ட ஆக்‌ஷன் படம் தமிழில் அதுவும் 3டி தொழில்நுட்பத்தில் வருவதில் அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆர்வத்தில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் இப்படம் பாகிஸ்தானிலும் தமிழில் வெளியாகவுள்ளது இன்னொரு பெருமையாகவும் கருதப்படுகிறது. 

அதேபோல் உலகம் முழுக்க அதிக திரைகளில் வெளியாகவிருக்கும் முதல் தமிழ்ப்படமும் இதுதான். இந்தியாவில் மட்டும் 7500 திரைகள், அமெரிக்காவில் 850, ஐரோப்பாவில் 500, யுகேவில் 300, மத்திய கிழக்கு ஆசியாவில் 350, தெற்கு ஆசியாவில் 100, ஆசிய பசிபிக் நாடுகள் மற்றும் ஜப்பானில் 900 என்று மொத்தம் 10,500 திரைகளில் நாளை 2.ஓ வெளியாகவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

‘கிரேட்’ என்பதைத் தவிர வேறு வார்த்தையில்லை பாராட்ட..!