May 18, 2024
  • May 18, 2024
Breaking News

Monthly Archives: February 2020

தஸ்லிமா நஸ்ரின் கிளப்பிய ஏஆர் ரஹ்மான் மகள் உடை பிரச்சினை

by on February 16, 2020 0

அதிகம் சர்ச்சைகளில் சிக்காதவர் ஏ ஆர்  ரஹ்மான். ஆனால், அவர் மகள் அணிந்த பர்தா பலவேறு சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது. கடந்த வருடம்  மும்பையில் ‘ஸ்லம்டாக் மில்லினர்’படத்தின் பத்தாம் ஆண்டு விழாவில் அப்பாவுடன் மகள் கதிஜாவும் பங்கேற்றார். தன் தந்தையோடு அவர் மேடையில் ஒரு உரையாடலையும் நடத்தினார். அப்போது கதிஜா அணிந்து வந்த பர்தா பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. ‘ரஹ்மான் பிற்போக்குத்தனமாக நடந்து கொண்டுள்ளார்’ என பலர் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்ததை அடுத்துஅது பெரும் விவாதமாக […]

Read More

51 வெட்டு தவிர்க்க ஏ சான்றிதழ் வாங்கிய மரிஜுவானா டீம்

by on February 16, 2020 0

எம்.டி.ஆனந்த் இயக்கத்தில் ரிஷி ரித்விக், ஆஷா, பவர் ஸ்டார், ஜனனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ’மரிஜுவானா’. தேர்ட் ஐ கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள். இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் 51 காட்சிகளை நீக்க வேண்டும். அல்லது ‘ஏ’ சான்றிதழ் கொடுக்க முடியும் எனக் கூறியுள்ளனர். ஆனால், படக்குழுவினரோ அவ்வளவு காட்சிகளை நீக்கினால் கதைக்களமே போய்விடும். நீங்கள் ‘ஏ’ சான்றிதழே கொடுங்கள்..! என்று கூறியிருக்கிறது. […]

Read More

அரசியலுக்கு வரும் திட்டம் இல்லாததால் நடிகனானேன் – பாரதிராஜா

by on February 16, 2020 0

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா தயாரித்து நடித்து இயக்கி இருக்கும் படம், ‘மீண்டும் ஒரு மரியாதை’. இப்படம் பிப்ரவரி 21ந்தேதி படம் வெளியாக இருக்கிறது. படம் பற்றி பாரதிராஜா பேசியதிலிருந்து… “விவசாயியாக வாழும் எழுத்தாளர் ஒருவர் தனது வயோதிக காலத்தில் பிள்ளையுடன் இருக்க லண்டன் செல்கிறார். அங்கே வாழ்க்கையை வெறுத்து தற்கொலைக்கு முயலும் ஒரு இளம்பெண்ணைஸ் சந்திக்கிறார். இருவருக்கு இடையேயான பயணம்தான் கதை..!” நான் அறிமுகப்படுத்திய நடிகைகளில் ரதியைத் தவிர வேறு யாரையாவது கதாநாயகி என்று சொல்வீர்களா? என் […]

Read More

மாபியா கொரில்லா முறையில் படமானது – கார்த்திக் நரேன்

by on February 16, 2020 0

ஆரம்பமே அதிரடியாக ‘துருவங்கள் 16’ இயக்கி கவனிக்கப்படும் இயக்குநர்கள் வரிசையில் இணைந்த கார்த்திக் நரேன் அடுத்து ‘நரகாசூரன்’ இயக்கினார். ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைக் கொண்ட அந்தப்படம் இன்னும் வெளிவராத நிலையில் அதனைத் தொடர்ந்து லைக்கா புரடக்‌ஷன்ஸுக்காக கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் ‘மாஃபியா’. அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் ப்ரியா பவானிசங்கர் ஹீரோயினாகவும், பிரசன்னா வில்லனாகவும் நடித்துள்ளனர். இதன் டீஸரும், தொடர்ந்து வந்த பாடலும் அசத்தலாக அமைந்தன. கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, […]

Read More

அப்பாவி தயாரிப்பாளர்களை ஏமாற்றும் சுனில் ஜெயின் மீது போலீஸில் மோசடி புகார்

by on February 15, 2020 0

திரைப்பட தயாரிப்பாளர்களின் அப்பாவித் தனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தன்னுடைய பினாமி சுரபி மோகன் என்பவர் மூலம், பல திரைப்படங்களின் இந்தி டப்பிங் உரிமையை வலுக்கட்டாயமாக அபகரித்து, ஏமாற்றி வந்த சுனில் ஜெயின் மீதும், சுரபி மோகன் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி ‘வா டீல்’, ‘காவியன்’, ‘ஐங்கரன்’, ‘1945’ ஆகிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளனர். மேலும் கமிஷனர் அலுவலகத்தில் ‘1945’ தயாரிப்பாளர் ராஜராஜன் சுனில் ஜெயின் மீது மோசடி […]

Read More

இயக்குநர் ஆனார் நடிகை ரம்யா நம்பீசன்

by on February 15, 2020 0

ரம்யா நம்பீசன் திரையில் நடிகையாக மட்டுமல்லாமல் இன்னொரு பக்கம் பாடகியாகவும் வலம் வருகிறார்,   அது போதவில்லை அவரது கனவுக்கு. சமீபத்தில் இணையத்தில் கால்பதித்து YouTube தளத்தில் தனக்கென தனி ஒரு சேனலை ‘Ramya Nambeesan Encore’ எனும் பெயரில் ஆரம்பித்துள்ளார். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் இந்த சேனலில் தனது இயக்கத்தில் முதல் குறும்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.   The Hide ( UN )learn  எனும் அந்த குறும்படம் இப்போது ரசிகர்களிடம் பெரும் பாராட்டை […]

Read More

காட்டையும் விலங்குகளையும் மனிதன் அறியச் செய்யும் முயற்சி காடன்

by on February 15, 2020 0

ஈரோஸ் இண்டர்நேஷனல் ஒரே நேரத்தில், தமிழில் ‘காடன்’, தெலுங்கில் ‘அரண்யா’ மற்றும் இந்தியில் ‘ஹாத்தி மேரே சாத்தி’ என மூன்று படங்களின் டீஸரை வெளியிட்டு இருக்கிறது! இம்மூன்று படங்களுமே ஒரு மனிதனுக்கும், யானைக்குமான ஆழமான உறவை உணர்வுப்பூர்வமாக, நெஞ்சம் நெகிழத்தக்க வகையில் எடுத்துரைக்கிறது.  அதிலும் குறிப்பாக உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு இந்த மும்மொழி திரைப்படம் உருவாகியிருக்கிறது என்பதால் இன்னும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளைப் பெற்றிருக்கும் இந்த மும்மொழி திரைப்படத்தில், கதாநாயகனாக ராணா தக்குபதி […]

Read More

நயன்தாரா சமந்தாவுடன் விஜய்சேதுபதி விக்னேஷ் சிவன் இயக்குகிறார்

by on February 14, 2020 0

இயக்குனர், பாடலாசிரியர், நடிகர் எல்லாவற்றுக்கும் மேல் எல்லோரும் பொறாமைப்படும் நடிகை நயன் தாராவின் காதலர் என பன்முக திறமை (!) கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் மூலம் புகழ் பெற்றார். இவர் மூன்று வருடத்துக்கு முன்னால் விஜய் சேதுபதியை வைத்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ எனும் படத்தை துவங்கி னார். அந்தப் படம் டேக் ஆஃப் ஆவதற்கு முன்னால் ஞானவேல்ராஜா மூலமாக சூர்யா-வை சந்தித்தார். அப்போது […]

Read More