ஆணவம் கொண்ட பெண்ணை அடக்கி ஆளும் ஆணின் ரஜினி பாணிக் கதை. ஆனால், ரஜினி பாணி வேறு. இதில் ஹீரோவாகி இருக்கும் விமலின் பாணி பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ஆணவம் கொண்ட சண்டக்காரியாக ஸ்ரேயா. லண்டனின் இருக்கும் சாப்ட்வேர் கம்பெனி ஒன்றின் உயர் பொறுப்பில் இருக்க, அவருக்கு உதவியாளராக வந்து சேர்கிறார் விமல்.
அவருக்கு ஒரு கனவு இருக்கிறது. அதன் காரணமாக அப்படி ஸ்ரேயா இழுத்த இழுப்புக்கு ஆடுகிறார் அவர்.
ஒருகட்டத்தில் ஸ்ரேயாவின் லண்டன் குடியுரிமை சிக்கலுக்குள்ளாக, திருமணம் புரிந்தால் அதை சரிக்கட்டலாம் என்கிற அளவில் ஒரு போலிக் கல்யாணம் புரிய முடிவெடுக்கிறார்.
அதன் சம்மதத்துக்காக தஞ்சாவூர் கிராமத்திலிருக்கும் விமலின் வீட்டுக்கு இருவரும் வருகிறார்கள். ஆனால்… அதற்குப் பிறகு என்ன நடந்திருக்கும் என்பதைக் கண்டுபிடிக்க முடியாதவர்கள் சினிமா ரசிகர்களாக இருக்க வாய்ப்பில்லை.
விமலின் நடிப்பு பற்றி ஏற்கனவே எல்லோருக்கும் தெரியும். அது லண்டனுக்குப் போனால் மட்டும் மாறிவிடுமா என்ன..? அவரது ஆங்கிலத்துக்கு சோதனை வைக்காமல் அங்கே இருக்கும் அனைவரும் தமிழ் பேசிக் கொண்டிருந்ததால் தப்பித்தார்.
சண்டக்காரி கேரக்டருக்கு ஸ்ரேயா பொருத்தமாக இருக்கிறார். படத்தின் yu es pi avarae என்பதால் அவருக்கு முழுப்படத்திலும் வரும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
விமலின் தந்தையாக நடித்திருக்கும் பிரபு, அம்மாவாக நடித்திருக்கும் உமா பத்மநாபன், ஸ்ரேயாவின் தோழியாக நடித்திருக்கும் புன்னகை பூ கீதா, சத்யன், கே.ஆர்.விஜயா, ரேகா, தேவ் கில், கிரேன் மனோகர், மகாநதி சங்கர் என அனைவரும் தங்களது அனுபவம் வாய்ந்த நடிப்பின் மூலம் படத்திற்கு அடையாளமாக பயணித்திருக்கிறார்கள்.
ஒpளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ் லண்டன் மாநகரத்தையும், தமிழக கிராமத்தையும் அழகாகவும், பாடல் காட்சிகளை கலர்புல்லாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
அம்ரிஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகங்களாகவும், பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்பவும் பயணித்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ், இயக்குநர் கொடுத்த வரிசையின்படி காட்சிகளை தொகுத்து கொடுத்திருக்கிறாரே தவிர, கதையை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சிக்கவில்லை.
எழுதி இயக்கியிருக்கும் ஆர்.மாதேஷ், கோபமான குணம் கொண்ட பெண்ணின் மனதில் உருவாகும் காதலை அழகாக சொல்ல முயற்சித்திருக்கிறார். ஸ்ரேயா – விமல் என்ற காமினேஷன் எப்படி எடுபடவில்லையோ அது போல், அவர் திரைக்கதையை கையாண்ட விதம், கதையில் இருக்கும் காதலை பார்வையாளர்களிடத்தில் சரியான முறையில் கடத்தவில்லை. இருந்தாலும், லண்டன் மற்றும் தமிழக கிராமம் என்று இரு தளங்களிலும் காதல் மற்றும் காமெடியை அளவாக கையாண்டு, முழுமையான கமர்ஷியல் படமாக கொடுத்திருக்கிறார்.
தமிழகத்தில் படித்துவிட்டு லண்டன் செல்லும் விமல், தன் குடும்பம் மூலம் நிரந்தர லண்டன் குடியுரிமை பெற்றவராக இருக்கிறார். ஆனால், அவரது குடும்பம் தமிழகத்தில் இருக்கிறது. லண்டனில் பல வருடங்களாக பெரிய நிறுவனத்தின் உயர் பதவியில் இருக்கும் ஸ்ரேயா குடியுரிமை பெறாமல் இருக்கிறார். இது தான் எப்படி என்று புரியவில்லை என்றாலும், இத்தகைய லாஜிக்கை தவிர்த்துவிட்டு பார்த்தால் படம் ஓகே தான்.
தஞ்சை மாவட்டமாக இருந்தாலும் சரி, லண்டனாக இருந்தாலும் சரி, ஆடை மட்டுமே மாறுமே தவிர தோற்றமும், நடிப்பும் எப்போதும் மாறாது, என்பதை நிரூபிக்கும் வகையில் விமல் வலம் வருகிறார். அதே விமல், அதே நடிப்பு என்று பயணித்திருக்கிறார்.
ஸ்ரேயாவின் முகத்தில் இருக்கும் பளபளப்பு அவரது நடிப்பில் இல்லை. கடும் கோபம் கொண்டவராகவும், மற்றவர்களை மதிக்காத திமிர் பிடித்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கும் ஸ்ரேயா, தனது வேலையை முடிந்தவரை சரியாக செய்திருக்கிறார்.
விமலின் தந்தையாக நடித்திருக்கும் பிரபு, அம்மாவாக நடித்திருக்கும் உமா பத்மநாபன், ஸ்ரேயாவின் தோழியாக நடித்திருக்கும் புன்னகை பூ கீதா, சத்யன், கே.ஆர்.விஜயா, ரேகா, தேவ் கில், கிரேன் மனோகர், மகாநதி சங்கர் என அனைவரும் தங்களது அனுபவம் வாய்ந்த நடிப்பின் மூலம் படத்திற்கு அடையாளமாக பயணித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ் லண்டன் மாநகரத்தையும், தமிழக கிராமத்தையும் அழகாகவும், பாடல் காட்சிகளை கலர்புல்லாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
அம்ரிஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகங்களாகவும், பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்பவும் பயணித்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ், இயக்குநர் கொடுத்த வரிசையின்படி காட்சிகளை தொகுத்து கொடுத்திருக்கிறாரே தவிர, கதையை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சிக்கவில்லை.
எழுதி இயக்கியிருக்கும் ஆர்.மாதேஷ், கோபமான குணம் கொண்ட பெண்ணின் மனதில் உருவாகும் காதலை அழகாக சொல்ல முயற்சித்திருக்கிறார். ஸ்ரேயா – விமல் என்ற காமினேஷன் எப்படி எடுபடவில்லையோ அது போல், அவர் திரைக்கதையை கையாண்ட விதம், கதையில் இருக்கும் காதலை பார்வையாளர்களிடத்தில் சரியான முறையில் கடத்தவில்லை. இருந்தாலும், லண்டன் மற்றும் தமிழக கிராமம் என்று இரு தளங்களிலும் காதல் மற்றும் காமெடியை அளவாக கையாண்டு, முழுமையான கமர்ஷியல் படமாக கொடுத்திருக்கிறார்.
தமிழகத்தில் படித்துவிட்டு லண்டன் செல்லும் விமல், தன் குடும்பம் மூலம் நிரந்தர லண்டன் குடியுரிமை பெற்றவராக இருக்கிறார். ஆனால், அவரது குடும்பம் தமிழகத்தில் இருக்கிறது. லண்டனில் பல வருடங்களாக பெரிய நிறுவனத்தின் உயர் பதவியில் இருக்கும் ஸ்ரேயா குடியுரிமை பெறாமல் இருக்கிறார். இது தான் எப்படி என்று புரியவில்லை என்றாலும், இத்தகைய லாஜிக்கை தவிர்த்துவிட்டு பார்த்தால் படம் ஓகேதான்.
சண்டக்காரி – சமாதானம்..!
– வேணுஜி