January 28, 2026
  • January 28, 2026
Breaking News
November 24, 2019

தன் கல்யாணம் பற்றி செய்தி அறிவித்த யோகிபாபு

By 0 849 Views

வழக்கமாக நடிகர்கள் தங்களைப் பற்றி ஏதாவது விபரீதமான செய்தி வந்தால்தான் படஹ்றுவார்கள். ஆனால், காமெடி ஹீரோ தனக்குக் கல்யாணம் என்றதும் பதறிவிட்டார்.

அவருக்கு வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருப்பதாக சமீபத்தில் பிகில் விழாவில் விஜய் சொல்ல, அதற்கேற்றாற்போல் சில் தினகளுக்கு முன் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை யோகிபாபு ஷேர் செய்திருக்க, சமூக வலை தளங்களில் அவருக்குத் திருமணம் என்ற தகவல் நேற்று முதல் பரவிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அந்தப்பெண் பற்றி எந்தத் தகவலையும் தெரிவிக்காத யோகிபாபு தன் ட்விட்டர் பக்கத்தில் “என் கல்யாணம் பற்றிய தவறான தகவல்கள் பரவி வருகிறது. அது வெறும் வதந்தியே. எனது கல்யாணம் முடிவானதும் நானே அனைவருக்கும் முறையாக அறிவிப்பேன். நன்றி..!” என்று பதறிப்போய் செய்தி பகிர்ந்திருக்கிறார்.

அதன் பின்னூட்டமாக ரசிகர்கள் அவரை சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கொள்ளச்சொல்லி கேட்டு வருகின்றனர். அதில் நயன் தாராவையும் குறிப்பிட்டு யோகிபாபுவைக் கலாய்க்கவும் செய்திருக்கிறார்கள்.

சீக்கிரம் குடும்பியாகுங்க பாபு..!