April 18, 2025
  • April 18, 2025
Breaking News
April 16, 2025

ஏலேலோ இசை ஆல்பம் – புதியவர்களின் புதிய முயற்சி

By 0 21 Views

புதியவர்களின் புதிய முயற்சியில் ஏலேலோ இசை ஆல்பத்தில் பாடல் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

ஏலேலோ ஆல்பம் பாடலின் கதாநாயகன் வெற்றிவேல் முருகன், நாயகி மோனா, தயாரிப்பு வி எம் ஐஸ்டேஜ் பிலிம்ஸ் இயக்குனர் மணிகண்டன், இசை ஜெய் கிரிஷ் கதிர் ஒளிப்பதிவு முருகானந்தம் எடிட்டர் கிஷோர் பிஆர்ஓ சரவணன் மற்றும் கார்த்திக்.

இந்த விழாவில் கோலிவுட்டின் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர் குறிப்பாக விஜய் அவர்களின் நெருங்கிய நண்பரான ஸ்ரீநாத் விஜய் அவர்களின் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய பிரமுகரான நடிகர் சௌந்தர் ராஜா மேலும் பல இயக்குனர்கள் நடிகர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆல்பத்தில் நடித்த கலைஞர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்து கொண்டனர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சொன்னார்கள் அதுபோலத்தான் இந்த ஏலேலோ பாடல் மிக அற்புதமாக ரசிகர்களுக்கு அமைந்திருக்கிறது.

இன்றைய சமூகத்தில் நடக்கும் காதல் என்ற போர்வையில் பல தவறுகள் நடந்து கொண்டிருக்க அதை மறைமுகமாகவும் அழுத்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். காதலித்து கருவுற்று மாத்திரை கொடுத்து கலைக்க சொல்லும் செய்தி காட்சியாக சொல்லி இருக்கிறார் அவர்.

அதேபோல இந்த இசை வெளியீட்டு விழாவில் ட்ரீம்ஸ் என்ற குறும்படத்தை திரையிட்டனர் இந்த குறும்படம் சமுதாயத்திற்கு இன்று ரொம்ப முக்கியமான ஒரு குறும்படமாக அமைந்திருக்கிறது குறிப்பாக ஒரு பெண்ணின் வாழ்வியல் சிரமத்தை மிக அற்புதமாக எடுத்துரைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த குறும்படத்தை ட்ரீம்ஸ் ஷார்ட் பிலிம் சார்பாக தயாரித்து உள்ளனர் இதில் நடித்தவர்களின் விவரம்…

நடிகர்கள்

வினிதா

தேஜா உதயசங்கர்

ஹரிணி

கல்பனா

மீரா

 

தயாரிப்பாளர்

அருள்மொழி பிச்சர்ஸ்

 

இயக்குனர்

மணிகண்டன்

 

இசை

ஜெய்கிஸ் கதிர்

 

ஒளிப்பதிவு

குமரேசன்

 

எடிட்டர்

சேவியஎடிட்டர்

 

கிராபிக்ஸ் டிசைனர்

நவீன் செல்வா

 

பிஆர்ஓ

ஸ்டில் சரவணன்

கார்த்திக்

இந்த நிகழ்ச்சியில் ஸ்டில் சரவணனின் (இளைய தளபதியின் போட்டோகிராபர்) புதிய அத்தியாயம் இணையதளத்தை விஜய் விசுவாசிகளான சௌந்தர்ராஜா வெளியிட மற்ற அனைவரும் பெற்றுக்கொண்டனர் வெற்றி குரல் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த இணையதளத்திற்கு. இந்த நிகழ்ச்சியின் மூலம் பி ஆர் ஓ மக்கள் தொடர்பாளராக ஸ்டில் சரவணன் அறிமுகம் ஆகியுள்ளார்.