January 8, 2025
  • January 8, 2025
Breaking News
January 6, 2025

ஷாவ்மி இந்தியா ‘Redmi 14C 5G’ ஸ்மார்ட்ஃபோனை வெளியிட்டது..!

By 0 47 Views

₹1000 கோடி குறியிலக்கை அடைந்து Redmi Note 14 5G சீரீஸ் சாதனை படைத்ததை கொண்டாடுகிறது..!

Chennai , இந்தியா, 2025 ஜனவரி 6,: நாட்டின் நம்பிக்கைக்குரிய தலை சிறந்த ஸ்மார்ட்போன் பிராண்டான X AIoT ஷாவ்மி (Xiaomi )இந்தியா, உலகம் முழுவதும் Redmi 14C 5G அறிமுகப்படுத்தப்படுவதை இன்று அறிவித்தது. இந்திய நுகர்வோரின் அதிகரித்து வரும் தேவைகளுக்கு இணங்க, அதிநவீன அம்சங்கள், தடையற்ற செயல்திறன் மற்றும் மின்னல் வேக – 5G தொடர்பிணைப்பை வழகும் வகையில் வடிவமைக்கப்பட்ட Redmi 14C 5G ஸ்மார்ட்ஃபோன் , குறைந்த விலை சந்தைப் பிரிவை மறுவறையரைக்குள்ளாக்க தயார் நிலையில் உள்ளது.

இந்திய வாடிக்கையாளர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் அன்பின் அடையாளமாக இரண்டுவாரங்களுக்குள் நம்பமுடியாத ₹1000 கோடி வருமானத்தை ஈட்டி மாபெரும் சாதனை புரிந்த Redmi Note 14 5G சீரீஸ் இன் வெற்றியால் Redmi 14C 5G அறிமுகம் நிறைவு பெற்றுள்ளது 

Redmi 14C 5G ஆனது புதுமையுடன் அழகையும் நேர்த்தியையும் தடையின்றி ஒன்றரக் கலக்கிறது. 600 nits உட்சபட்ச ஒளிர் திறனுடனான இதன் 17.5cm (6.88-இன்ச்) HD+ டாட் டிராப் டிஸ்ப்ளே அமைப்பானது ஸ்ட்ரீமிங் கேமிங் அல்லது பிரவுசிங் போன்ற எந்த ஒரு செயல்பாட்டின் போதும் துடிப்புடனான ஆழ்ந்த காட்சி அனுபவத்தை வழங்குகிறது.

சிறு அதிவேக 4nm கட்டமைப்பின் மீது அமைக்கப்பட்ட Snapdragon 4 Gen 2 5G பிராசசரால் இயக்கப்படும் இந்தக் கருவி , மேம்பட்ட செயல்திறன் மற்றும் இயக்க ஆற்றலை உறுதி செய்கிறது. 12GB RAM (6GB + 6GB விரிவாக்கப்பட்டது) மற்றும் 128GB UFS 2.2 சேமிப்பகத்துடனான இந்தக் கருவி , பல்பணியாக்கம் கேமிங் மற்றும் ஆப் நேவிகேஷன் ஆகியவற்றை எளிதாகக் கையாளுகிறது. கூடுதலாக, இதன் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், சேமிப்பகத்தை 1TB வரை விரிவாக்க ஆதரவளித்து உங்கள் தேவைகளுக்கு உகந்த அளவு போதுமான சேமிப்பிடத்தை வழங்குகிறது.

Redmi 14C 5G இல் பொருத்தப்பட்டுள்ள 50MP AI இரட்டை-கேமரா அமைப்பு விரிவான விவரங்கள் அடங்கிய உயிர்த்துடிப்புடனான துல்லியமான புகைப்படங்களை எந்த ஒரு வெளிச்சத்திலும் காட்சிப்படுத்த பயனர்களுக்கு உதவும் அதேவேளையில் இதில் அடங்கியுள்ள 18W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன்கூடிய ஆற்றல் மிக்க 5160mAh பேட்டரி நாள் முழுவதும் எந்த ஒரு தடையுமற்ற இடைவிடாத பயன்பாட்டை உறுதி செய்கிறது. ஆண்ட்ராய்டு 14 இயங்கு தளத்தை அடிப்படையாகக் கொண்ட Xiaomi HyperOS இல் இயங்கும் இந்த கருவி நீண்ட கால உழைப்பை உறுதி செய்யும் வகையில் இரண்டு வருட ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் நான்கு வருட பாதுகாப்பு புதுப்பிப்புக்களுக்கான உத்திரவாதத்துடன் தெளிவான, உள்ளுணர்வுடன் கூடிய பயனர் இடைமுகத்தை வழங்குகிறது, இது நீண்ட கால நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது.

Redmi 14C 5G , 2025 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி முதல் Mi.com, Amazon.in, Flipkart மற்றும் அங்கீகரிக்கப்பட்ட Xiaomi ரீடெய்ல் பார்ட்னர்கள் முழுவதும் கிடைக்கும் மற்றும் 4GB + 64GB மாறுபாட்டிற்கு INR 9,999 ஆகவும், 6GB க்கு 10,999 12GB: மற்றும் INR 11,999 க்கு 8 ஜிபி + 256 ஜிபி மாறுபாடு

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Redmi Note 14 5G சீரீஸ் , புத்தாக்கம், செயல்திறன் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றின் ஒரு உகந்த ஈடு இணையற்ற கலவையை வழங்கி இடை நிலை விலைப் பிரிவு சந்தையில் ஸ்மார்ட்போன் தர அளவீடுகளை தொடர்ந்து மறுவரையறைக்குள்ளாக்கி வருகிறது .இந்தப் பிரிவிலேயே செயல்திறன் மிக்க நீடித்த உழைப்பை வழங்கி வரும் Redmi Note 14 Pro 5G சீரீஸ் , ஸ்மார்ட்போன்கள், Gorilla® Glass Victus® 2, IP69 ஆதரவு மற்றும் அதிநவீன சாலிட் எலக்ட்ரோலைட் பேட்டரி தொழில்நுட்பத்துடன் ஒரு பெஞ்ச் மார்க் அளவை நிர்ணயித்து ஈடு இணையில்லாத நீடித்த உழைப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்துவரும் அதே வேளையில் எந்த வெளிச்சத்திலும் உயிர்த்துடிப்புடன் கூடிய துல்லியமான காட்சியமைப்பை வழங்க வல்ல இந்தப் பிரிவிலேயே மிக பிரகாசமான 120Hz AMOLED டிஸ்ப்ளே அமைப்பு , மற்றும் ஒவ்வொரு முறையும் பிரமிக்க வைக்கும், விரிவான கசிதமான காட்சிகளைப் படம் பிடிக்கும் பல்திறன் கொண்ட 50MP Sony LYT-600 கேமரா அமைப்பு ஆகியவை அடங்கிய Redmi Note 14 5G மனதைக் கொள்ளை கொள்கிறது .

ஆகச் சிறந்த செயல்திறன் மற்றும் வடிவமைப்புடன் கூடிய புதுமையான தயாரிப்புக்களை அனைத்து நுகர்வோர்களுக்கும் வழங்குவதில் ஷாவ்மி இந்தியா கொண்டுள்ள எந்த ஒரு தடுமாற்றமில்லாத உறுதியான அர்ப்பணிப்பை Redmi Note 14 5G Series மற்றும் Redmi 14C 5G ஒன்றிணைந்து காட்சிப்படுத்துகின்றன.