சென்னை அப்போலோ மகளிர் மருத்துவமனை சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெல் உமன் வாக்கத்தான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சுமார் 100 பெண் மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவர்கள் மற்றும் மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோஷியல் வொர்க்கில் பயிலும் மாணவிகள் பங்கேற்ற இந்த மூன்று கிலோமீட்டர் ‘ வெல் உமன் வாக்’ அப்போலோ மருத்துவமனையால் ஒருங்கிணைக்கப்பட்டது.
பெண்களின் அன்றாட வாழ்வில் உடல் நலம் மற்றும் உடற்பயிற்சியின் பங்கை ஊக்குவிப்பதற்கும் நடைப்பயணத்தின் நன்மைகளை, முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காக இந்த அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த ‘ வாக்கத்தான் ‘ லயோலா கல்லூரியின் எதிர்ப்புறம் உள்ள இக்நைட் – இல் இருந்து மார்ச் 6 ஆம் தேதி காலை 6 மணிக்கு கொடி அசைத்து தொடங்கப்பட்டு ஷபி முகமது சாலை, ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மகளிர் மருத்துவமனை முன்பாக நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியை திரைப்பட இயக்குனர் ஜோஸ் பிரடெரிக் மற்றும் காஸ்டியூம் டிசைனர் திருமதி ஜாய் கிரிசில்டா, ஐசிஎஸ் பிஎப்எஸ்ஐ இன் குளோபல் டைரக்டர் திரு சுதீப்.கே ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்கள்.
இந்த வாக்கத்தான் நிகழ்ச்சி ஷபி முகமது சாலையில் உள்ள அப்போலோ மகளிர் மருத்துவமனையில் நிறைவு பெற்றபோது பிரபல பேச்சாளரும் சிட்டி வங்கியின் இயக்குனருமான பாரதி பாஸ்கர், லைஃப் கோச் மாலிகா ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்று இந் நிகழ்ச்சியில் இடம் பெற்ற பெண்களின் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி குறித்து ஊக்கப்படுத்தி பேசினார்.
அப்போது மருத்துவர் மகளிர் மருத்துவமனையின் மூத்த கருவியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் டாக்டர் சுமனா மனோகர் பெண்களின் ஆரோக்கியம் குறித்த உத்வேகம் அளிக்கக் கூடிய செய்திகளையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசுகையில், “உங்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த அல்லது பராமரிக்க நடைபயிற்சி மிகச்சிறந்த வழியாகும். ஒவ்வொரு நாளும் வெறும் 30 நிமிடங்கள் நடப்பது இதயத்திற்கு ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும், அதிகப்படியான உடல் கொழுப்பைக் குறைக்கவும் தசைகளுக்கு கூடுதல் சக்தியையும் ஆற்றலையும் அளிக்கவும் உதவும்.
இதயநோய், இரண்டாவது வகை நீரிழிவு, ஆஸ்டியோபோரோசிஸ், உடல் பருமன் தொடர்பான புற்று நோய்கள் உள்ளிட்ட பல்வேறு அபாயத்தையும் இதன் மூலம் குறைக்கலாம். நடைப்பயிற்சிக்கு மிகவும் குறைவான உபகரணங்களை போதுமானது.
ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும் உங்களுக்கு எங்கு வசதிகள் உள்ளதோ அங்கு மேற்கொள்ளலாம். உடற்பயிற்சி செய்ய விரும்புபவர்களுக்கு நடைப்பயிற்சி ஒரு சிறந்த தொடக்கப்புள்ளி..!” என்றார்.
இந்த வாக்கத்தானில் பங்கேற்றவர்களைப் பாராட்டி சான்றிதழ்களும், நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.