August 31, 2025
  • August 31, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • துருக்கியில் பைக் கவிழ்ந்து விபத்தில் சிக்கிய விஷால்
March 28, 2019

துருக்கியில் பைக் கவிழ்ந்து விபத்தில் சிக்கிய விஷால்

By 0 947 Views

சுந்தர். சி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு துருக்கியின் கேப்படோச்சியா நகரில் நடந்து வருகிறது. விஷால் நாயகனாக அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்க டிரைடன்ட் ஆர்.ரவீந்திரன் தயாரித்து வரும் இப்படத்துக்காக 50 நாள்கள் ஷெட்யூல் துருக்கியில் திட்டமிடப்பட்டிருக்கிறது.

Vishal Met Accident

Vishal Met Accident

அங்கே ஒரு பைக் துரத்தல் உள்ளிட்ட சண்டைக் காட்சியை சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்க, அதில் விஷால் நான் கு சக்கரங்கள் கொண்ட ஏடிவி வகை பைக்கில் வந்து கொண்டிருந்தார். ஒரு திருப்பத்தில் எதிர்பாராமல் அந்த பைக் தலைகுப்புற கவிழ ஒட்டுமொத்த யூனிட்டும் பதறிப்போனது.

உடனடியாக விஷாலை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். கையிலும், காலிலும் அவருக்கு அடி பட்டதில் கட்டுப்போட்டு ஓய்வு எடுக்கச் சொல்லியிருக்கின்றனர் மருத்துவர்கள். இருந்தாலும் ஷெட்யூல் மாறிவிடக் கூடாதென்பதற்காக தொடர்ந்து விஷால் படப்பிடிப்பில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த லொகேஷனில்தான் சந்திரமுகி படத்துக்காக ரஜினியும், நயன்தாராவும் ‘கொஞ்ச நேரம்…’ பாடல் காட்சியில் நடித்திருந்தார்கள் என்பது கூடுதல் தகவல்..!