February 15, 2025
  • February 15, 2025
Breaking News

Tag Archives

வல்லான் திரைப்பட விமர்சனம்

by on January 23, 2025 0

‘வல்லவன் ‘ என்ற தலைப்பு வைத்தாயிற்று. ‘வல்லவனுக்கு வல்லவனு’ம் ஏற்கனவே வைத்தாயிற்று- வேறு என்னதான் செய்வார்கள் இயக்குனர்கள்..? அதனால் இந்தப் படத்துக்கு இப்படி ஒரு தலைப்பு பிடித்திருக்கிறார் இயக்குனர் இயக்குனர் வி.ஆர்.மணி சேயோன். ஆனால், தலைப்பு புரிகிறது அல்லவா..? அதே  வல்லவன்தான். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல் காவல்துறையைச் சேர்ந்த சுந்தர் சி. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையிலும் எப்படித் துப்பறிந்து காவல்துறைக்குப் பெயர் வாங்கி தருகிறார் என்கிற லைன்தான். காவல் துறையில் இருந்தாலும் தன்யா […]

Read More

ஆவதும் அழிவதும் இல்லை என்கிற சித்தர் வாக்குதான் கடைசி உலகப் போர் – ஹிப் ஹாப் ஆதி

by on September 11, 2024 0

‘கடைசி உலகப்போர்’ திரைப்பட முன் வெளியீட்டு நிகழ்ச்சி!! ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில், ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் புதிய திரைப்படம் “கடைசி உலகப்போர்”.  மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியுள்ளது இப்படம். ராப் பாடகராக அறிமுகமாகி மக்கள் மனதில் இடம்பிடித்து, இசையமைப்பாளராக, நடிகராக, இயக்குநராகப் புகழ் பெற்றிருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். இப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி […]

Read More

அரண்மனை 4 திரைப்பட விமர்சனம்

by on May 5, 2024 0

திருவிளையாடல் தருமியின் வசனங்களில் “சேர்ந்தே இருப்பது..?” என்கிற கேள்விக்கு “வறுமையும் புலமையும்…” என்று சிவபெருமான் சொல்வதை மாற்றி, “அரண்மனையும் சுந்தர்.சியும்…” என்று கூட பதில் தர முடியும். அந்த அளவுக்கு அரண்மனையும் அவரும் பிரிக்க முடியாத விஷயங்களாக மாறிவிட்டார்கள்.  ஒரு படத்தின் நான்காவது பாகம் என்பது எவ்வளவு நம்பிக்கை தரத்தக்க விஷயம்..? அந்த அயராத நம்பிக்கையிலேயே அரண்மனையின் நான்காவது பாகத்தையும் எடுத்துத் தந்திருக்கிறார் சுந்தர்.சி. வட மாநில ஆற்றில் அமானுஷ்யம் புள்ளி வைத்து, தென்கோடி அரண்மனையில் (அலங்)கோலம் […]

Read More

பணத்துக்காக நான் எந்தப் படத்தையும் செய்ததில்லை – சுந்தர்.சி

by on March 31, 2024 0

சுந்தர் சி இயக்கத்தில் ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படத்தின் நான்காம் பாகம் ‘அரண்மனை 4’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா  ! Avni Cinemax (P) Ltd  சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் தயாரிப்பில், சுந்தர் சி நடித்து, இயக்க, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உட்பட எண்ணற்ற நட்சத்திரங்களின் நடிப்பில், அரண்மனை பட வரிசையில் நான்காம் பாகமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘அரண்மனை 4’. […]

Read More

தலைநகரம் முதல் பாகத்தை விட 2வது பாகம் நன்றாக உள்ளது என்கிறார்கள் – VZ துரை

by on June 26, 2023 0

Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப்பில், மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில், இயக்குநர் V Z துரை இயக்கியிருந்த இப்படம் கடந்த 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று, 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் […]

Read More

வைரலாகிறது காபி வித் காதல் பட பேபி கேர்ள் பாடல்

by on July 17, 2022 0

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்து வரும் படம் ‘காபி வித் காதல். இயக்குனர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க அம்ரிதா ஐயர், மாளவிகா சர்மா, ரைசா வில்சன் , ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத் சம்யுக்தா […]

Read More

பட்டாம்பூச்சி திரைப்பட விமர்சனம்

by on June 25, 2022 0

ஒரு கொலை செய்ததாக தூக்குத் தண்டனைக்காகக் காத்திருக்கிறார் ஜெய். இந்நிலையில் திடீரென, தான்தான் தொடர்ச்சியாக பல கொலைகளைச் செய்த ‘பட்டாம்பூச்சி’ என்ற சீரியல் கில்லர் என்கிறார். குழம்பிய நீதிமன்றம் அவர் தூக்கை நிறுத்தி வைத்து ஜெய்யை விசாரிக்க உத்தரவிடுகிறது. அதற்கான விசாரணையை இன்ஸ்பெக்டரான சுந்தர் சி மேற்கொள்கிறார். ஆனால், ஒரு சிண்ட்ரோம் காரணம் சொல்லி தான் கொலைகளை செய்ய வாய்ப்பில்லை என தூக்குத் தண்டனையிலிருந்து தப்பித்து விடுதலை ஆகிறார் ஜெய். இருப்பினும் ஜெய்தான் ‘பட்டாம்பூச்சி’ என உணர்ந்த […]

Read More

குஷ்புவுக்கு முன்பு முத்தமிட்டு நடித்தேன் – சுந்தர் சி

by on November 29, 2019 0

இயக்குநர் V Z துரை இயக்கியுள்ள படம் ‘இருட்டு’. ஹாரர் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சுந்தர் சி நாயகனாக நடிக்க, புதுமுகம் சாக்‌ஷி சௌத்ரி நாயகியாக நடித்துள்ளார். VTV கணேஷ், விமலா ராமன், சாய் தன்ஷிகா, யோகிபாபு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் சுந்தர் சி பேசியதிலிருந்து… ரொம்ப நாள் கழித்து நடிகராக இங்கு நிற்கிறேன். VTV கணேஷ் சார் தான் இந்தப்படம் உருவாக […]

Read More

எம்ஜிஆர் படக்கனவை நிறைவேற்றிய விஷால் – சுந்தர் சி

by on September 1, 2019 0

‘மத கஜ ராஜா’, ‘ஆம்பள’ படங்களைத் தொடந்து இயக்குனர் சுந்தர்.சியும், விஷாலும் இணையும் மூன்றாவது படம் ‘ஆக்‌ஷன்’. இந்தப்படம் பற்றி சுந்தர்.சி சொன்னதிலிருந்து…. “நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். அவரது ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைப்போல ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக ஆசைப்பட்டேன். இப்போது விஷால் மூலம் அந்த கனவு நிறைவேறியுள்ளது. எழுபது சதவிகிதம் வெளிநாடுகளிலும் , ஜெய்ப்பூர், டெல்லி, ஐதராபாத் மற்றும் சென்னையில் ஆக்‌ஷன் படமாக்கப்பட்டது. அதேபோல் இதுவரை நான் இயக்கிய […]

Read More

துருக்கியில் பைக் கவிழ்ந்து விபத்தில் சிக்கிய விஷால்

by on March 28, 2019 0

சுந்தர். சி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு துருக்கியின் கேப்படோச்சியா நகரில் நடந்து வருகிறது. விஷால் நாயகனாக அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்க டிரைடன்ட் ஆர்.ரவீந்திரன் தயாரித்து வரும் இப்படத்துக்காக 50 நாள்கள் ஷெட்யூல் துருக்கியில் திட்டமிடப்பட்டிருக்கிறது. அங்கே ஒரு பைக் துரத்தல் உள்ளிட்ட சண்டைக் காட்சியை சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்க, அதில் விஷால் நான் கு சக்கரங்கள் கொண்ட ஏடிவி வகை பைக்கில் வந்து கொண்டிருந்தார். ஒரு திருப்பத்தில் எதிர்பாராமல் அந்த பைக் தலைகுப்புற […]

Read More
  • 1
  • 2