January 1, 2026
  • January 1, 2026
Breaking News
November 25, 2018

நடிகர்களிலேயே முதன்மையாக கஜா பாதித்த கிராமத்தை தத்தெடுத்த விஷால்

கஜா நிவாரணமாக பல நடிகர்களும், கலையுலகைச் சேர்ந்தரவர்களும் உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். தொகையில் மாறுபட்டாலும் அவை பெரும்பாலும் பணமாகவோ, பொருள்களாகவோ தற்காலத் தேவைகளுக்காக உதவிக் கொண்டிருக்கின்றன.

அவர்களில் ராகவா லாரன்ஸ் வித்தியாசப்பட்டு புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகளைக் கட்டிக் கொடுக்க முன்வந்தார். இந்நிலையில் விஷால் ஒரு படி முன்னே போய் கஜாவால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் கார்காவயல் என்ற கிராமத்தை தத்தெடுத்துள்ளார்.

இந்த உதவி தற்காலிகமாக இல்லாமல், கிராமத்தை முழுமையாக மறுசீரமைப்பு செய்து இந்தியாவிலேயே ‘சிறந்த கிராமமாக‘ மாற்றுவேன் என்றும் அந்த கிராம மக்களுக்கு உறுதியளித்துள்ளார். இந்த உதவிக்கு கிராமமக்கள் நன்றி தெரிவித்திருக்கின்றனர்.
 
சொன்னதைச் செய்து காட்டுங்க விஷால்..!