August 30, 2025
  • August 30, 2025
Breaking News
July 21, 2020

தாத்தா ஆகப் போகும் சீயானுக்கு ரசிகர்கள் வாழ்த்து

By 0 748 Views

தலைப்பைப் படித்துவிட்டு விக்ரம் இப்போது நடித்து வரும் ஒரு படத்துக்காக பார்த்தா விடப் போகிறார் என்று தவறாக புரிந்து கொள்ளாதீர்கள் நிஜமாலுமே அவர் வாழ்க்கையில் தாத்தா ஆகப் போகிறார்.

கடந்த 2017-ம் ஆண்டு விக்ரமின் மகள் அக்‌ஷிதாவிற்கும், மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் கொள்ளுப்பேரன் மனு ரஞ்சித்துக்கும் திருமணம் நடந்தது அல்லவா?
 
இப்போது அக்‌ஷிதா கர்ப்பமாக இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக லாக்டவுன் போடப்பட்டு இருப்பதால் இருவீட்டார் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்களாம்.
 
விக்ரம் விரைவில் தாத்தா ஆகப்போகும் செய்தி அறிந்த ரசிகர்கள், அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
விக்ரம் இப்போது ‘கோப்ரா’, ‘துருவ நட்சத்திரம்’,  ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘சீயான் 60’ படத்திலும் நடித்து வருகிறார்.
 
ஹேண்ட்சம் தாத்தாவுக்கு வாழ்த்துகள்..!