மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த நடிகர் ராமராஜன், வெற்றிகரமான ஹீரோவாக உயர்ந்தாலு அடிப்படையில் அவர் இயக்குநர்தான். சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து டைரக்டர் ராமநாராயணனிடம் உதவி டைரக்டராக வேலை கற்றுக்கொண்ட பின் ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ படத்தின் மூலம் டைரக்டர் ஆனார். அந்தப் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ‘மருதாணி,’ ‘மறக்கமாட்டேன்,’ ‘ஹலோ யார் பேசுறது’ உள்பட பல படங்களை இயக்கினார்
பின்னர்தான் ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ படத்தின் மூலம் ராமராஜன் கதாநாயகன் ஆனார் ராமராஜன். முதல் படமே 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. அதன்பின் ‘கரகாட்டக்காரன்’ மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து அதற்குப்பின் ராமராஜன் நடித்த படங்களுக்கு வண்டி கட்டிக்கொண்டு கிராமத்தினர் திரையரங்குகளைச் சூழ்ந்தனர்.
பல வெள்ளி விழாப் படங்களில் நடித்த அவர், 44 படங்களில் கதாநாயகனாக நடித்தார். அவர் நடித்த படங்கள் அனைத்தும் பூஜை போட்ட அன்றே வியாபாரம் ஆனது திரையுலகில் ஒரு சாதனை.
இப்போது பல வருட இடைவெளிக்குப்பின், ராமராஜன் மீண்டும் படத்துறைக்கு வருகிறார். இந்த முறை ஹீரோவாக அல்ல, தன் முதல் பணியான டைரக்ஷனைக் கையில் எடுக்க இருக்கிறார் அவர். இதற்காக அவர் கதை சொல்லியிருப்பது யாரென்று நினைக்கிறீர்கள்..? விஜய்சேதுபதிதான அவர்.
அவரிடம் ஒரு ஒரு கதையைச் சொல்லி ஒப்புதலும் வாங்கி விட்டாராம் ராமராஜன். இந்த படத்தில் ராமராஜன் நடிக்கவில்லையாம். அத்துடன் தொடர்ந்து அவர் இயக்கத்தில் கவனம் செலுத்த முடிவு செய்து இருக்கிறார் என்கிறார்கள்.