March 20, 2023
  • March 20, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ 25 ஆயிரம் அளித்த ராகவா லாரன்ஸ்
April 26, 2020

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ 25 ஆயிரம் அளித்த ராகவா லாரன்ஸ்

By 0 364 Views

 பெரிய நட்சத்திரங்கள் எல்லாம் தங்களால் முடிந்த அளவுக்கு மட்டும் கொரோநா ஒழிப்புக்கு நிவாரணத்துக்கு நீதி அளித்துக் கொண்டிருக்க ராகவா லாரன்ஸ் மட்டும் வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்.

திரையுலக சங்கத்தினர் யார் போய் கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் நிதி உதவி அளிப்பவர் வெளியிலும் பல உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்.

அதில் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு அவர் எப்போதுமே செய்து வரும் சேவைகள் உயர்ந்தவை அந்தவகையில் இப்போது மாற்றுத்தறனாளிகளுக்கான நிதியுதவியையும் அளித்திருக்கிறார்.

தேசிய ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் 

50 பேருக்கு முதற்கட்டமாக தலா ரூ.25 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். 

பணம் நேரடியாக அவர்களின் வங்கி கணக்கிற்கே செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.