August 30, 2025
  • August 30, 2025
Breaking News
February 10, 2020

இன்றும் செல்ஃபி எடுத்த விஜய் வீடியோ இணைப்பு

By 0 731 Views

வருமான வரித்துறை ரெய்டுக்குப் பின் ‘மாஸ்டர்’ ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் இன்று நான்காவது நாளாக நடித்தார். நேற்று ஒரு வேன் மீது ஏறி திரண்டிருந்த ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டது வைரலானது.

இன்றும் அப்படி ஷூட் முடிந்ததும் வெளியே ரசிகர்கள் கடல் அலையாய்த் திரண்டிருக்க, ஒரு பஸ்ஸின் மீது ஏறிய விஜய் ஆர்ப்பரித்த ரசிகர்களை நோக்கி கையை அசைத்தார். பின்பு அவர்களை நோக்கி உடலை வளைத்து வணங்கினார்.

பின்பு நேற்றைப் போலவே செல்ஃபி எடுத்துக்கொண்டு பஸ்ஸை விட்டுக் கீழே இறங்கினார்.

வழக்கமாக ஷூட்டிங்கில் ரசிகர்களை அவர் சந்திப்பதில்லை. இன்னும் கேட்டால் எங்கே ஷூட்டிங் நடக்கிறது என்பதை அறிந்துகொள்வதே ரசிகர்களால் இயலாத விஷயம். ஆனால், இந்த முறை ஐடி துறை அந்தப் புண்ணியத்தைக் கட்டிக்கொண்டது.

இதனால், விஜய்யின் புகழ் இன்னும் ஓங்கியதே அன்றிக் குறையவில்லை..! கீழே இன்றைய வீடியோ…