‘பிகில்’ வெளியாவதற்கு முன்பே அதற்கு அடுத்த விஜய் படமான விஜய் 64 தொடங்கிவிட்டது. ‘மாநகரம்’, ‘கைதி’ வெற்றிப்படங்களுக்குப் பின் லோகெஷ் கனகராஜ் இயக்கும் படம் இது.
முதல் ஷெட்யூல் சென்னையில் முடிய அடுத்த ஷெட்யூலை டெல்லியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எடுக்கத் திட்டமிட்டார் லோகேஷ் கனகராஜ்.
ஆனால், டெல்லியில் காற்று மாசுபட்டிருப்பதித் தொடர்ந்து திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்காமல், ஓரிரு நாள்கள் காத்திருப்புக்குப் பின் நேற்றுதான் தொடங்கி உள்ளது.
இந்த இரண்டாவது ஷெட்யூலில் விஜய்யுடன் நாயகி மாளவிகா மோகனன் நடித்துக் கொண்டிருக்கிறார். அத்துடன் 96 படத்தில் இளவய்து திரிஷாவாக நடித்த கௌரி கிஷனும் நடிக்கிறார். இப்படத்தில் கௌரி ஒரு கல்லூரி மாணவியாக வருகிறாராம்.
விஜய்க்கு இந்தப்படத்தில் பெரிய தாதா, கல்லூரிப் பேராசிரியர் என்று இரண்டு முகங்கள் இருக்கின்றனவாம். டெல்லியில் 40 நாள்களுக்கு இந்த ஷெட்யூல் திட்டமிடப்பட்டிருக்கிறதாம்.
படத்தில் விஜய்க்கு வில்லனாவது விஜய் சேதுபதி என்பது தெரிந்த விஷயந்தானே..?.