லைக்கா புரடக்ஷன்ஸ் தயாரிக்க சுராஜ் இயக்கும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் நாயகனாக நடிப்பதன் மூலம் மீண்டும் பரபரப்பான செய்திகளில் வந்தார் வைகைப்புயல் வடிவேலு.
படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே பரபரப்புக்குள்ளான படத்தின் பாடல் கம்போஸிங் வேலைகளுக்காக லண்டன் சென்ற டீமில் வடிவேலுவும் இடம் பெற்றார். தன் படத்தின் பாடல் உருவாக்கத்தில் எப்போதுமே ஆர்வம் காட்டுவார் வடிவேலு. எனவே அவரும் இயக்குநர் சுராஜுடன் லண்டன் சென்றிருந்தார்.
இந்நிலையில் லண்டன் சென்று இரண்டு நாள்களுக்கு முன் சென்னை திரும்பிய வடிவேலுவுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு எஸ் ஜீன் குறைபாடு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த எஸ் ஜீன் குறைபாடு உள்ளவர்களை ஒமிக்ரான் பாதித்திருக்க வாய்ப்பு இருப்பதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. இது ஒமிக்ரானுக்கான அறிகுறியாகவும் கருதப்படுகிறது.
எனவே வடிவேலு உடனடியாக ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இதேபோல் சமீபத்தில் அமெரிக்க சென்று வந்த கமலும் கொரோனா பாதித்து ராமச்சாந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டு வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
இப்போது வடிவேலுவுக்கும் ஒமிக்ரான் அறிகுறி இருக்க, வெளிநாடு செல்பவர்கள் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.