July 1, 2025
  • July 1, 2025
Breaking News
February 23, 2021

சதுரங்க வேட்டை பாணியில் போலி இரிடிய கலசம் விற்ற இருவர் கைது

By 0 559 Views

சென்னை சாலிகிராமம் வேலாயுதம் காலனியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபகிறார் நியூட்டன்.

சினிமா போட்டோ கிராபரான இவர் தனது நண்பரான ஆடிட்டர் ரகுஜியுடன் சேர்ந்து ‘இரிடியம் கலசம்’ குறைந்த விலைக்கு கொடுப்பதாகவும் அதை வாங்கி விற்றால் பல கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என்றும் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமாரிடம் ஆசை வார்த்தை கூறி இருக்கிறார்.

இதை நம்பி சதீஷ்குமார் தனது நண்பர்களுடன்  சேர்ந்து இரிடியம் கலசம் வாங்க முடிவு செய்து ரூ.67 லட்சம் பணத்தை நியூட்டனிடம் கொடுத்ததாகத் தெரிகிறது.

பணத்தை பெற்றுக்கொண்ட நியூட்டன் ‘சதுரங்க வேட்டை’ சினிமா பட பாணியில் போலி இரிடியம் கலசத்தை கொடுத்து சதீஷ்குமாரை ஏமாற்றி இருக்கிறார்.

இதில் கோமடைந்த சதீஷ்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து நியூட்டன், அவருடைய நண்பரான ஆடிட்டர் ரகுஜி இருவரையும் காரில் கடத்தி பணத்தை திருப்பி தரும்படி கேட்டு மிரட்டி இருக்கின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் விரைந்து செயல்பட்ட விருகம்பாக்கம் போலீசார் சதீஷ்குமார் உள்ளிட்ட 6 பேரை ஸ்ரீபெரும்புதூர் அருகே கைது செய்து நியூட்டன், ரகுஜியை மீட்ட நிலையில் ரூ.67 லட்சம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட நியூட்டன், ரகுஜி இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சதீஷ்குமார் மனைவி அம்முல் புகார் அளித்திருக்கிறார்.

அது பற்றி விசாரணை நடத்தி மோசடியில் ஈடுபட்ட நியூட்டன், ரகுஜி இருவர் மீதும் 406, 420 ஆகிய 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.