May 13, 2025
  • May 13, 2025
Breaking News
October 29, 2019

மானாட மயிலாட டான்சரான பட ஹீரோ சாலை விபத்தில் பலி

By 0 779 Views

தீபாவளியின் துக்க நிகழ்வுகளில் தீ விபத்துகள்தான் முக்கியமாக இடம்பெறும் என்பதில்லை. சாலை விபத்துகளும் நிகழ்வதுண்டு. அப்படி ஒரு விபத்தில் பலியாகிவிட்டார் ஒரு பிரபலம்.

சன் டிவியில் தொகுப்பாளராகவும், ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் டான்சராகவும் பிரபலமானவர் மனோ. இவர் ‘புழல்’ திரைப்படத்தில் மூன்று நாயகர்களில் ஒருவராக அறிமுகமானார். மேலும் பல படங்களில் நடித்தார். மேடை நிகழ்ச்சிகளும் நடத்தி வந்தார் மனோ. 
 
Mano

Mano

இத்தனை பரபரப்பாக இயங்கி வந்தவர் நேற்று (28.10.19) தீபாவளி அன்று மனைவி லிவியாவுடன் அம்பத்துாரில் காரில் சென்று கொண்டிருந்தார். திடீரென சென்டர் மீடியனில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் ‘மனோ’ அதே இடத்தில் மரணமடைந்தார். அவருடைய மனைவி உயிருக்குப் போராடினார்.

 
அவரை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.
இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
 
பண்டிகை நேர பயணங்களில் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்..!