August 30, 2025
  • August 30, 2025
Breaking News
May 17, 2021

இன்று கோலிவுட்டை உலுக்கிய கொரோனா மரணங்கள்

By 0 591 Views

நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன் தினசரி ஒன்று இன்று நம்மைச் சுற்றி மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன இந்தவாரம் அதுவே ஒன்றுக்கு மேற்பட்ட மரணங்கள் ஒரேநாளில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

கோலிவுட்டை பொறுத்த வரையில் கொரோனா மரணம் தினசரி நிகழ்வாகவே இருந்து வருகிறது. 

யாருமே எதிர் பார்க்காத நிலையில் புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா இன்று கொரோனா தொற்று காரணமாக மறைந்தார்.

அவருக்கு மனைவியும், 8, 7 வயதுகளில் இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள். 

அதேபோல கதை வசனகர்த்தா, இயக்குனர் மற்றும் நடிகர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று நள்ளிரவில் உயிரிழந்தார். 

இவர் இறுதிச் சடங்கில் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இருவரது ஆத்மாக்களும் அமைதி பெற வேண்டுவோம்..!