பெண்களுக்கு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை ஒழிக்கும் நோக்கத்தில் தன்னுடைய சமூக பங்களிப்பை செய்து வருகின்றது ‘ பெண் ‘ (Protection and Ewerment of Naree) என்கிற அமைப்பு. சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் இந்த பெண் அமைப்பு ஒரு பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை அமைப்பாக இருக்கிறது.
பதினெட்டாம் நூற்றாண்டில் மீட்டெடுக்கப்பட்ட தற்காப்பு பயிற்சி முறைகளை பயிற்றுவிப்பது, ஆன்லைன் வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை பெண்களிடம் ஏற்படுத்துவது, ஆண்கள் – பெண்கள் இருவரிடையே முறையான மென்மையான புரிதல்களை ஏற்படுத்தி வைப்பது, தியேட்டர்களின் வழியாக ஆழமான விழிப்புணர்வை ஏற்படுத்துவது, பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு எதிராக திட்டங்களை ஏற்படுத்துவது இந்த அமைப்பின் தலையாய கொள்கைகளாக இருக்கின்றது.
சமுதாய ஈடுபாடு திட்டங்கள், இணையவழி கருத்தரங்குகள், உரையாடல்கள் தற்காப்பு பயிற்சி பட்டறைகள், சட்ட உதவி நிகழ்ச்சிகள் பெருமைமிகு வேலுநாச்சியார் பற்றிய நாடகப் பயிற்சிப் பட்டறை, காவல்துறையினருடன் இணைந்து திண்டுக்கல் பகுதியில் குழந்தை திருமணம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது, கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது, அமைப்பின் நோக்கத்திற்காக பிரபலங்களின் ஒத்துழைப்பை பெறுவது சமூக ஊடகங்களின் மூலம் பிரச்சாரம் செய்வது ஆகியவை இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டிருக்கும் பல்வேறு நடவடிக்கைகள் ஆகும்.
பெண் அமைப்பின் செயல்பாடுகள் பற்றி இந்த அமைப்பின் தலைமை அறங்காவலர் ஆன வி.ஸ்ரீதர் “இந்தியாவிலும் உலகத்திலும் நிலவக்கூடிய மிகவும் மோசமான பிரச்சனை பாலியல் வன்முறைதான். 2019 ஆம் ஆண்டில் 47 ஆயிரத்து 335 சிறார்களும் 4 லட்சத்து 5 ஆயிரத்து 865 பெண்களும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகி இருக்கின்றன என்று வெளிவந்த புள்ளி விவரங்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நாங்கள் பாலியல் வன்முறைக்கு எதிரான இந்த அமைப்பை தொடங்க முன்வந்தோம். பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவர்களுக்குக் கல்வி அளிக்கவும் அதிகாரம் அளிக்கும் ஏராளமான செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு பெண் அமைப்பு பேரார்வத்துடன் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது…” என்றார்.
இந்த பெண் அமைப்பின் 2வது ஆண்டு நிறைவை ஒட்டி பெண் அமைப்புக்கான கருத்துருவாக்க கீதம் ஒன்று வெளியிடப்பட்டது. அந்த கீதத்தை பாடியிருப்பவர் பலமுறை தேசிய விருதுகள் பெற்ற திருமதி கே.எஸ். சித்ரா . அந்த கீதத்தை வடிவமைத்து அதன் காணொளி இயக்கியிருப்பவர் யுனெஸ்கோ விருது பெற்றவரும் பெண்களை ஒருவருமான ஸ்ரீராம் சர்மா .
அந்த பாடலின் காணொளி சென்னை சோழா செரட்டணில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது.
பெண் கருத்துருவாக்க கீதத்தை பாடிய திருமதி கே.எஸ் .சித்ரா அவர்களுக்கு அந்த நிகழ்ச்சியில் உயர் மரியாதை செய்யப்பட்டது.
Related